அனை­வ­ரும் திரண்டு தீர்வை வெல்­வோம் சம்­பந்­தன் அழைப்பு!

மூவின மக்­க­ளும் ஒற்­று­மை­யா­கச் சகோ­த­ரத்­து­வத்­து­ட­னும் நல்­லி­ணக்­கத்­து­ட­னும் ஒரு­மித்து வாழ புதிய அர­ச­மைப்­பி­னூ­டாக நிரந்­தர அர­சி­யல் தீர்வு கட்­டா­யம் வேண்­டும். நாம் அனை­வ­ரும் ஓர­ணி­யில் திரண்டு நிரந்­தர அர­சி­யல் தீர்வை வென்­றெ­டுப்­போம்.

இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.
கொழும்­பி­லுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்ற புதிய ஆண்­டுக்­கான வேலை­களை ஆரம்­பித்­து­வைக்­கும் நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பும் பணி­யில் அரச பணி­யா­ளர்­க­ளுக்கு முக்­கிய இட­முண்டு. இனம், மொழி, மதம் என்ற வேறு­பா­டின்றி அரச பணி­யா­ளர்­கள் அனை­வ­ரும் ஓர­ணி­யில் நின்று நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டும். ஒவ்­வொரு இனத்­தி­ன­தும், மதத்­தி­ன­தும், மொழி­யி­ன­தும் கலா­சார விழு­மி­யங்­க­ளை­யும் நாம் மதித்து நடக்­க­வேண்­டும்.

இந்­நாட்­டில் மூவின மக்­க­ளும் ஒற்­று­மை­யாக சகோ­த­ரத்­து­வத்­து­டன் நல்­லி­ணக்­கத்­து­டன் ஒரு­மித்­து­வாழ புதிய அர­ச­மைப்­பி­னூ­டாக நிரந்­தர அர­சி­யல் தீர்வு கட்­டா­யம் வேண்­டும். அதற்­கான செயற்­றிட்­டங்­கள் அரச தலை­வர், தலைமை அமைச்­சர் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­தப் பணி­க­ளுக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கத்­தில் பணி­யாற்­றும் அனை­வ­ரும் ஆக்­க­பூர்­வ­மான ஒத்­து­ழைப்­பு­களை வழங்­க­வேண்­டும்.

புதிய அர­ச­மைப்­பைக் குழப்­பும் நோக்­கு­டன் விச­மத்­த­ன­மான செயற்­பா­டு­கள் தீய சக்­தி­க­ளி­னால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தா­லும் நாம் அனை­வ­ரும் ஓர­ணி­யில் திரண்டு நிரந்­தர அர­சி­யல் தீர்வை வென்­றெ­டுப்­போம் – என்­றார்.

You might also like