மன்­னார் –- கொழும்பு நெடுஞ்­சா­லை­யில் கட்­டாக்­கா­லி­க­ளால் விபத்து அச்­சம்

மன்­னார் – கொழும்பு முதன்­மைச் சாலை­யில் திரி­யும் கட்­டாக்­காலி மாடு­க­ளால் வாக­னச்­சா­ர­தி­க­ளும் பய­ணி­க­ளும் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். சாலை­க­ளில் திரி­யும் கால்­ந­டை­களை உரி­மை­யா­ளர்­கள் பிடித்­துக் கட்­டி­வைக்க வேண்­டும். இல்­லை­யேல் இது­தொ­டர்­பில் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் – என வாக­னச்­சா­ர­தி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

மன்­னார் – கொழும்பு முதன்­மைச் சாலை­யில் நாளாந்­தம் – இர­வு­ப­க­லாக அதிக வாக­னங்­கள் போக்­கு­வ­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ளன. எனி­னும் கட்­டாக்­காலி மாடு­க­ளின் நட­மாட்­டத்­தி­னால் அதிக விபத்­து­கள் இடம்­பெ­று­கின்­றன. பெரும் வீதி­க­ளில் திரி­யும் மாடு­கள் இரவு நேரங்­க­ளில் சாலை­யி­லேயே படுத்­துங்­கு­கின்­றன. திடீ­ரென சாலை­யில் குறுக்கு நெடுக்­கா­கப் பாய்­கின்­றன.
எனவே, கால்­நடை வளர்ப்­பா­ளர்­க­ளும், சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளும் இது­தொ­டர்­பில் கவ­னம்­செ­லுத்­த­வேண்­டும் – என அவர்­கள் மேலும் தெரி­வித்­த­னர்.

You might also like