கேப்பாப்பிலவில் சிறப்பு வழிபாடுகள்

புதுக்­கு­டி­யி­ருப்பு – கேப்­பாப்­பி­ல­வில் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­களை படை­யி­னர் ஆக்­கி­ர­மித்­தி­ருந்­த­னர். அவ்­வாறு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­க­ளில் இருந்து சுமார் 133.4 ஏக்­கர் காணி­கள் கடந்த 28 ஆம் திகதி விடு­விக்­கப்­பட்­டன. விடு­ விக்­கப்­பட்ட காணி­கள் மக்­கள் முன்­னி­லை­யில் படைத்­த­ரப்­பி­ன­ரால் மாவட்ட அரசா அதி­ப­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டன.

கேப்­பாப்­பி­ல­வுப் பகு­தி­யில் 111.5 ஏக்­கர் காணி­க­ளும், சீனி­யா­மோட்­டை­யில் 21.84 ஏக்­கர் காணி­க­ளு­மாக மொத்­த­மாக 133.34 ஏக்­கர் காணி­கள் கைய­ளிக்­கப்­பட்­டன.

விடு­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு மக்­கள் நேற்று முன்தினம் சென்­ற­னர். அங்­குள்ள பிள்­ளை­யார் ஆல­யத்­தில் பூசை­கள் இடம்­பெற்­றன. இரா­ணு­வத்­தி­ன­ரின் ஏற்­பாட்­டில் பொங்­க­லு­டன் சிறப்பு வழி­பாடு இடம்­பெற்­றது.

You might also like