மகிந்­த­வின் சவால்

தனது அர­சி­யல் செல்­நெறி எப்­ப­டி­யி­ருக்­கப்­போ­கி­றது என்­பதை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் ஒரு தடவை மிகத் தெளி­வாக எடுத்­துக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்.

சிங்­கள, பௌத்த பேரி­ன­வா­தத்­தைத் தூண்­டி­விட்டு, நாடு பிரிக்­கப்­ப­டப்­போ­கி­றது இதோ தமி­ழீ­ ழம் உரு­வா­கின்­றது என்­கிற பயத்தை ஏற்­ப­டுத்தி சிங்­கள மக்­க­ளின் வாக்­கு­க­ளைச் சூறை­யா­டு­வதே தனது உத்தி என்­பதை தெளி­வாக்­கி­யி­ருக்­கி­றார்.

தமிழ் மக்­க­ளு­டன் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வது அல்­லது இனப் பிரச்­சி­னைக்­கான தீர்வு என்று வரு­கின்­ற­போது வர­லாறு முழு­வ­தும் சிங்­க­ளத் தரப்­பு­கள் இரு அணி­க­ளா­கப் பிள­வுண்டு நிற்­ப­தையே வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளன என்­பதை இதற்கு முன்­ன­ரும் பல தட­வை­கள் இந்­தப் பத்­தி­யில் உத­யன் குறிப்­பிட்­டுக்­காட்­டி­யி­ருக்­கின்­றான்.

தீர்­வுக்கு ஓர் அணி ஆத­ரவு போலக் காட்­டிக்­கொண்­டால் மற்­றொரு அணி அதனை மூர்க்­க­மாக எதிர்க்­கும். ஆட்சி மாறி எதிர்த்த அணி அதி­கா­ரப் பகிர்­வுக்கு ஆத­ரவு என்­ப­தா­கக் காட்­டிக்­கொண்­டால் முன்­னர் ஆத­ரித்த அணி மிகக் கடு­மை­யாக எதிர்க்­கும். எப்­ப­டி­யி­ருந்­தா­லும் கடை­சி­யில் வெல்­வது என்­னவோ எதிர்க்­கின்ற அணி­யா­கத்­தான் இருக்­கும்.

இது­வ­ரை­யில் அந்த இரு அணி­க­ளா­க­வும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யுமே இருந்­தன. இன்று அந்த இரு கட்­சி­க­ளும் ஓர் அணி­யாகி நிற்­கும் நிலை­யில் எதி­ர­ணிப் பாத்­தி­ரத்தை மகிந்த ராஜ­பக் ஷ எடுத்­துக்­கொண்­டுள்­ளார். தீர்வு முயற்­சி­க­ளுக்கு, அதி­கா­ரப் பகிர்­வுக்­குக் கடும் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தும் வகி­பா­கத்தை அவர் நிறை­வேற்­று­கின்­றார்.

அதை­யொட்­டியே அவ­ரது கருத்­துக்­கள் வெளி­வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. புதிய அர­ச­மைப்பு மூல­மா­கத் தமி­ழீ­ழத்தை வழங்­கு­வ­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­கிற விச­மப் பரப்­பு­ரையை சிங்­கள மக்­கள் மத்­தி­யில் அவர் முன்­னெ­டுத்­துச் செல்­கி­றார். கூட்­டாட்­சிக் கும் (சமஷ்டி) அதி­க­மான அதி­கா­ரங்­க­ளைத் தமி­ழர்­க­ளுக்கு அள்ளி வழங்­கத் தயா­ரா­கி­விட்ட அரசை வீழ்த்­தும் போராட்­டத்­தையே தான் முன்­னெ­டுக்­கி­றார் என்று சிங்­கள மக்­களை நம்­ப­வைக்க முயற்­சிக்­கின்­றார்.

பொது­வா­கவே கிரா­மப்­பு­றங்­க­ளில் மகிந்­த­வுக்கு பெரும் ஆத­ரவு இருக்­கின்­றது. தேசப்­பற்று, சிங்­க­ளத் தேசி­யம், ஆரி­யர் வழி­வந்த சிங்­க­ளக் குரு­தியே மேலா­னது, படை­யி­னர் தியா­கம் செய்து மீட்­டெ­டுத்த நாடு போன்ற முழக்­கங்­கள் அந்த மக்­களை இல­கு­வில் வசி­யம் செய்­து­வி­டக்­கூ­டிய மந்­தி­ரச்­சொற்­கள். ஏற்­க­னவே தனக்­கி­ருக்­கும் ஆத­ர­வு­டன் இந்த வசிய மந்­தி­ரங்­க­ளை­யும் உச்­ச­ரித்து பெரும் வெற்­றியை இந்­தத் தேர்­த­லில் பெற்­று­விட்­டால் அடுத்­த­டுத்த கட்­டங்­க­ளில் கட்­சி­யை­யும் ஆட்­சி­யை­யும் மீண்­டும் பிடித்­து­வி­ட­லாம் என்­கிற கணிப்­பு­டன் செயற்­ப­டு­கின்­றார் மகிந்த.

ஊழல், பிணை­முறி மோசடி என்று மறு­பக்­கத்­தில் சிக்­கல்­க­ளுக்கு மேல் சிக்­கல்­க­ளில் மாட்­டிக்­கொண்டு தவிக்­கும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யா­லும் சுதந்­தி­ரக் கட்­சி­யா­லும் சிங்­கள மக்­களை மகிந்த அள­வுக்கு வசி­யப்­ப­டுத்­த­வும் முடி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.

ஆக மொத்­தத்­தில் அதி­ர­டி­யான மாற்­றங்­கள் ஏதா­வது நிகழ்ந்­தால் தவிர மகிந்­த­வின் பேரி­ன­வா­தத்­தைத் தூண்­டி­வி­டும் உத்தி வெற்­றி­ பெ­று­வ­தைத் தடுக்­கும் உறு­தி­யான முன்­ன­கர்­வு­கள் மைத்­திரி -– ரணில் கூட்டு அர­சி­டம் இல்லை.

இது தற்­போ­தைய அனைத்­துச் சாத­க­மான முன்­ன­கர்­வு­ க­ளை­யும் முற்­றி­லும் சிதைத்து அழித்­து­வி­டக்­கூ­டி­யது. இந்­தச் சவாலை வெற்­றி­கொள்­வ­தற்­கான உபா­ய­மாக சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் மகிந்­த­வின் பேரி­ன­வா­தத்­திற்­குத் தீனி­போ­டும் உத்­தி­யையே மீண்­டும் கையில் எடுத்­துக்­கொள்­ளா­தி­ருக்­க­வேண்­டும்.

தாம் முன்­னெ­டுத்த இந்­தப் பய­ணத்­தில் மேலும் திட­மாக, நேர்­மை­யாக, காத்­தி­ர­மா­கப் பய­ணிப்­பதே சிறு­பான்மை மக்­க­ளி­ட­மும் நேர்­மை­யான ஒரு தொகுதி சிங்­கள மக்­க­ளி­ட­மும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தும். அந்த நம்­பிக்­கையே மகிந்­த­வைத் தோற்­க­டிப்­ப­தற்­கான ஆயு­த­மா­க­வும் இருக்­கும்.

You might also like