சூரியனில் ஆய்வு நடத்த நாசா முடிவு

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டு சூரி­ய­னில் ஆய்வு நடத்­தப் போவ­தாக அறி­வித்­துள்­ளது. அதற்­காக ‘பார்க்­கர் சோலார் புரோப்’ என்ற செயற்கை கோளை அனுப்­பு­கி­றது.

ஒவ்­வொரு வரு­ட­மும் புதிய ஆண்­டில் செய்­யப்­போ­கும் திட்டங்கள் குறித்து ‘நாசா’ அறி­விப்பு வெளி­யி­டு­வது வழக்­கம். இந்த நிலை­யில் 60ஆவது ஆண்­டில் அடி­யெ­டுத்து வைத்­தி­ருக்­கும் ‘நாசா’ விண்­வெ­ளி­யில் இது­வரை உலக நாடு­கள் நினைத்து கூட பார்க்க முடி­யாத ஒரு அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளது. இதன்­படி இந்த ஆண்டு சூரி­ய­னில் ஆராய்ச்சி செய்­வது என முடிவு செய்­துள்­ளது. அதற்­காக ‘பார்க்­கர் சோலார் புரோப்’ என்ற செயற்கை கோளை அனுப்­பு­கி­றது.

சூரி­யனை தொட்­டு­விட வேண்­டும் என்ற முடி­வில் அமெ­ரிக்­கா­வின் நாசா மையம் உள்­ளது. மேலும் செவ்­வாய் கிர­கத்­தின் உட்­புற ஆய்வு மற்­றும் வெளிப்­புற தோற்­றத்தைத் தொடர்ந்து ஆரா­யத் திட்­ட­மிட்­டுள்­ளது. தற்­போது அங்கு முகா­மிட்­டி­ருக்­கும் விண்­க­லத்­தின் ஆயுட்­கா­லத்தை நீடிக்­க­வும் திட்­ட­மிட்­டுள்­ளது.

You might also like