பொங்கலுக்கு வெளிவரும் ஐந்து படங்கள்

தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், மதுரவீரன், குலேபகாவலி, பாஸ்கர் ஒரு ராஸ்கல். இந்த 5 படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளன. சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் மற்றும் விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் ஆகிய இரு பெரிய படங்களும் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் – தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விக்ரம் நடித்து வரும் “ஸ்கெட்ச்’ படத்தின் கதைக் களம் வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாலு பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடித்துள்ளார்.

எங்கள் அண்ணா படத்துக்குப் பிறகு பலவருடங்கள் கழித்து தமிழில் தேவி படத்தில் நடித்த பிரபுதேவா, இப்போது மேலும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ஹன்சிகாவுக்கு ஜோடியாக பிரபுதேவா நடித்துள்ள படம் – குலேபகாவலி. கல்யாண் இயக்கியுள்ளார்.

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் – பாஸ்கர் ஒரு ராஸ்கல். இந்த 5 படங்களுமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளன.

You might also like