வீதி விபத்­துக்­களை தடுக்க வழி என்ன?

மலர்­வ­தற்கு முன்­னரே கரு­க்கி­விட்­டார்­கள் ஒரு மொட்டை. சாலை விபத்­தில் 6 வயது மாண­வி­யும் கொல்­லப்­பட்­டு­விட்­டார். வண்ண வண்­ணக் கன­வு­க­ளோடு பாட­சா­லைக்­குச் சென்று தனது கல்­வியை ஆரம்­பித்த அன்­றைய மாலையே அவ­ரது உயிர் பறிக்­கப்­பட்­டி­ருக்­கும் கொடூ­ரம் நடந்­துள்­ளது.

கண்­மூ­டித்­த­ன­மான போக்­கும், விதி­முறைகளை மதிக்க மறுக்­கும் சிந்­த­னை­க­ளுமே இந்த உயிர் எடுப்­புக்­குக் கார­ணம் என்­பதை எவராலும் மறுக்க முடி­யாது.

யாழ்ப்­பா­ணம் நீர்­வே­லி­யில் நேற்­று­முன்­தி­னம் மாலை நடந்த விபத்­தில் கொல்­லப்­பட்ட ராஜ்­கு­மார் தனுஸ்கா என்ற 6 வய­துச் சிறு­மி­யின் உயி­ரி­ழப்பு, வடக்­கில் நாளாந்­தம் நடக்­கும் விபத்­துக்­க­ளால் நடக்­கும் பல உயி­ரி­ழப்­பு­க­ளில் ஒன்றே. இந்த விபத்­தில் சிறு­மி­யு­டன் அவர் பய­ணித்த முச்­சக்­க­ர­வண்­டி­யின் சார­தி­யான சிங்­கா­ர­வேல் பாஸ்­க­ரன் என்­கிற 55 வயது மனி­த­ரும் இறந்­து­போ­னார்.

அண்­மைக் கால­மா­கவே வடக்­கில் விபத்­துக்­கள் தொடர்ச்­சி­யாக அதி­க­ள­வில் நடக்­கின்­றன. இது தொடர்­பில் சமூக ஆர்­வ­லர்­கள் எவ்­வ­ள­வு­தான் குரல் கொடுத்­தா­லும், வீதி விபத்­துக்­கள் தொடர்­பில் பொலி­ஸா­ரும் ஏனை­ய­வர்­க­ளும் எவ்­வ­ள­வு­தான் விழிப்­பு­ணர்­வு­களை வழங்­கி­னா­லும் விபத்­துக்­க­ளின் எண்­ணிக்கை குறை­வ­தாக இல்லை.

வடக்­கில் நடக்­கும் விபத்­துக்­க­ளில் பெரும்­பா­லா­னவை இயற்கை இடர்­க­ளாலோ, மோச­மான கால­நி­லை­யாலோ ஏற்­ப­டு­பவை அல்ல. வீதி விதி­களை ஒழுங்­கா­கக் கடைப்­பி­டிக்­காத கார­ணத்­தா­லேயே அதி­க­ள­வான விபத்­துக்­கள் நிகழ்­கின்­றன. வீதி விபத்­துக்­க­ளில் உயி­ரி­ழப்­போ­ரின் எண்­ணிக்கை வரு­டாந்­தம் அதி­க­ரித்­து­வேறு வரு­கின்­றது.

இலங்­கை­யில் 2016ஆம் ஆண்­டில் மட்­டும் வீதி விபத்­துக்­க­ளில் 3003 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர் என்று பய­ணத்­துறை மற்­றும் பொது­மக்­கள் போக்­கு­வ­ரத்து அமைச்­சின் புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. இது அதற்கு முன்­னைய ஆண்­டை­விட 300 எண்­ணிக்­கை­யால் அதி­க­ரித்­துள்­ளது.

இந்­தப் புள்­ளி­வி­வ­ரத்­தின் அடிப்­ப­டை­யில் நாளொன்­றுக்கு 8.2 பேர் இலங்­கை­யில் வீதி விபத்­துக்­க­ளில் உயி­ரி­ழக்­கின்­ற­னர். 2015ஆம் ஆண்­டில் இது 7.5 ஆகவும் 2014ஆம் ஆண்­டில் 6.6 ஆக­வும் இருந்துள்ளது.

உயிர்­கொல்லி நோய்கள் எனப் பய­மு­றுத்­தப்­ப­டும் எய்ட்ஸ் அல்­லது புற்­று­நோயால் உயி­ரி­ழப்­ப­வர்­க­ளை­விட,பல மடங்­கி­னர் விபத்­துக்­க­ ளி­லேயே உயி­ரிழக்­கின்­றார்­கள். ஆனா­லும் எய்ட்ஸ் அள­வுக்கு விபத்­துக்­க­ளின் மீதும் மனி­தர்­க­ளுக்கு அச்­சம் ஏற்­ப­டா­தது ஆச்­ச­ரி­யம்­தான்.

முன்­ன­ரை­விட வீதி­க­ளின் தரம் உயர்ந்­தி­ருக்­கின்­ற­போ­தி­லும், விபத்­துக்­க­ளின் எண்­ணிக்கை குறை­யா­மல் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றது. விபத்­துக்­க­ளுக்­கான கார­ணங்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டுள்ள பொலி­ஸார், சார­தி­க­ளின் பொறுப்­பற்ற தன்மை, சார­தி­க­ளின் கவ­ன­மின்மை, ஒழுங்­கீ­ன­மான சாரத்­தி­யம், போக்­கு­வ­ரத்து விதி­கள் தொடர்­பான அறி­வீ­னம் என்­கிற நான்கு கார­ணங்­க­ளையே முதல் நான்கு இடங்­க­ளி­லும் வைத்­தி­ருக்­கி­றார்­கள்.

போக்­கு­வ­ரத்து விதி­களை மீறு­வோ­ருக்கு எதி­ரான தண்­டங்­கள் அதி­க­ரிக்­கப்­பட்­ட­போ­தும், பொலி­ஸா­ரின் கெடு­பி­டி­கள் அதி­க­ரிக்­கப்­பட்­ட­போ­தும், வரு­டாந்­தம் விபத்­துக்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அத­னால் உயி­ரி­ழப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துக்­கொண்டே இருக்­கின்­றன. சட்­டத்­தா­லும் தண்­டத்­தா­லும் மட்­டுமே விபத்­துக்­க­ளைத் தடுத்­து­விட முடி­யாது என்­ப­தையே இது காட்­டு­கின்­றது.

இந்த நிலையை மாற்­று­வ­தற்கு முன்­பள்­ளி­க­ளில் இருந்தே போக்­கு­வ­ரத்து மற்­றும் வீதி விதி­க­ளைக் கற்­பிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும். இது­போன்ற வாழ்க்­கைக் கல்வி பாட­சா­லை­க­ளில் கட்­டா­ய­மாக்­கப்­பட்டு மாண­வர்­க­ளின் மனங்­க­ளில் அவை ஆழப் பதிய வைக்­கப்­ப­ட­வேண்­டும்.

பாட­சா­லைக் கல்வி மற்­றும் பாடத் திட்­டங்­கள் பற்­றிய சிந்­த­னை­யில் இது­வும் சேர்க்­கப்­ப­டு­வதே நீண்ட கால அடிப்­ப­டை­யி­லா­வது இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வை எட்­டும் வழி.

You might also like