கேவலம், கட்சித் தலைமைக்கு ஆசைப்பட நான் என்ன எனது சில மாணவர்களா?

குத்திக்காட்டிக் கேள்வி எழுப்புகிறார் முதலமைச்சர்

 

கேள்வி :- ஐயா! உங்­கள் சென்ற வாரக் கேள்­விக்­கான பதில் இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் செய­லா­ள­ரைப் பதில் தர வைத்­துள்­ளது. அதற்­கான உங்­கள் பதிலை எதிர்­பார்க்­கின்­றோம்.

பதில்:- ஏட்­டிக்­குப் போட்­டி­யாக பதில்­கள் வழங்கி பத்­தி­ரி­கை­க­ளுக்கு நல்ல தீனி­யைப் போட்­டுக் கொண்டு இருக்­க­லாம். ஆனால் சமூ­கத்­தில் பல சிக்­கல்­களை இது ஏற்­ப­டுத்­தும்.

அத­னால் நான் பொது­வா­கத் தக்க, முக்­கிய கார­ணங்­கள் இருந்­தாலே அன்றி, இவ்­வா­றான வாதப் பிர­தி­வா­தங்­க­ளில் ஈடு­ப­டு­வ­தில்லை. எனி­னும் நீங்­கள் கேட்­ப­தால் பதில் தரு­கின்­றேன்.

முத­லில் எனது மாண­வர் துரை­ரா­ச­ சிங்­கம், கிறிஸ்­மஸ் தினத்­தில் நான் ஒரு அர­சி­யல் அறிக்கை விடுத்­த­தா­கக் கூறி­யுள்­ளார். அவர் வாரா­வா­ரம் மக்­க­ளின் கேள்­வி­க­ளுக்கு நான் பத்­தி­ரி­கை­க­ளில் பதில் அளித்து வரு­வதை அறி­யா­துள்­ளார் போல் தெரி­கி­றது.

அர­சி­யல் அறிக்கை விட வேண்­டிய அவ­சி­யம் எனக்­கி­ருக்­க­வில்லை. மக்­க­ளின் கேள்­வி­கள் என்னை உசுப்­பும்­போது, அவற்­றிற்கே பதில் அளித்து வரு­கின்­றேன். எந்த ஒரு கேள்­வி­யும் எவரோ ஒரு­வர் எழுப்­பிய ஐயப்­பாட்­டின்­வி­ளைவே. அந்த ஐயத்­தைத் தீர்க்க முயன்று வரு­கின்­றேன்.

இது கூட நண்­பர் துரை­ரா­ச­ சிங்­கத்­திற்­குப் பதில் அளிக்­கும் முக­மாக நான் கூறும் கூற்று அல்ல. உங்­கள் கேள்வி அவ்­வா­றா­ன­தாக இருப்­ப­தால் பதில் தரு­கின்­றேன்.
நண்­ப­ரின் கூற்றை நான் இன்­றைய 30.12.2017 உத­யன் பத்­தி­ரி­கை­யைப் பார்த்தே பதில் இறுக்­கின்­றேன். அதில் கூறி­யி­ருப்­ப­ வற்­றைக் கவ­னத்­திற்கு எடுத்து பதில் தரு­கின்­றேன்.

தமிழ் அரசுக் கட்சியை கண்டித்திருப்பதாக முக்கிய குற்றச்சாட்டு

முத­லா­வ­தாக நான் தமி­ழ் அரசுக் கட்­சி­யைப் பிரத்­தி­யே­க­மா­கக் கண்­டித்­தி­ருந்­த­தா­கக் கூறி தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்­பில் மற்­றைய கட்­சி­க­ளும் அங்­கம் வகிப்­ப­தைச் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.

அப்­படி அல்ல. தமி­ழ் அரசுக் கட்­சி­யி­னர் என்னை விமர்­ச­னம் செய்­வ­தா­கவே சென்ற வாரக் கேள்வி அமைந்­தி­ருந்­தது. அத­னாற்­றான் அதற்­குப் பதில் தர வேண்­டி­யி­ருந்­தது. அவ்­வா­றான கேள்வி என் மீது தொடுக்­கப்­ப­டா­தி­ருந்­தால் நான் மௌன­மாக இருந்­தி­ருப்­பேன்.

என்னை விமர்­சிப்­ப­வர்­கள் தமி­­ழ் அரசுக்­கட்­சி­யி­னரே என்­றி­ருக்­கும் போது, அந்த விமர்­ச­ னங்­க­ளுக்­குப் பதில் இறுக்­கா­மல் வேறு யாருக்கு நான் பதில் அளிக்க வேண்­டும் என்று நண்­பர் எதிர்­பார்க்­கின்­றார்?

மேலும் தேர்­தல் வரும் போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக அறிக்கை வெளி­யி­டு­வது வழமை என்­றும் கூறி­யுள்­ளார். இது­வும் தவறு. என்­னைப் பற்­றிய பல விமர்­ச­னங்­கள் தவ­ணைக்­குத் தவணை எழு­வ­தாற்­றான் நான் பதில் கூற வேண்­டிய அவ­சி­யம் ஏற்­ப­டு­கின்­றது.

அவ்­வா­றான விமர்­ச­னங்­கள் தேர்­தல்­கள் வரும் போது எழு­வதை வைத்து நான் வேண்­டு­மென்றே தேர்­தல் காலங்­க­ளில் எதிர் அறிக்­கை­களை விடுத்து வரு­கின்­றேன் என்று கூறு­வது சட்­டத்­த­ர­ணி­யான நண்­ப­ருக்கு அழ­கல்ல.

ஏதோ காத்­தி­ருந்து நான் அறிக்கை விடு­வ­தாக என்­னைச் சித்­தி­ரித்­துள் ளார். அவ்­வாறு அறிக்­கை­கள் விட வேண்­டிய அவ­சி­யம் எனக்­கில்லை என்­பதை மீண்­டும் வலி­யு­றுத்­து­கின்­றேன் கேளுங்­கள் தரப்­ப­டும் தட்­டுங்­கள் திறக்­கப்­ப­டும். மக்­கள் கேளாது, தட்­டாது இருந்­தால் நான் மௌனி­யா­கி­வி­டு­வேன்.
அவர் கூறும் விட­யங்­க­ளைப் பார்ப்­போம்.

தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரது குற்றச்சாட்டுக்களுக்கான விரிவான
பதில் விளக்கம்

1.வவு­னி­யா­வில் என் பெயரை முன்­மொ­ழிந்­தது தானே என்­கின்­றார். எனது மாண­வர் என்ற முறை­யில் அவ்­வாறு செய்­தி­ருக்­க­லாம். அதற்கு நான் நன்றி கூற முடி­யாது. ஆறு மாதங்­கள் அர­சி­ய­லுக்கு வர முடி­யாது என்று தொடர்ந்து கூறி­யும், விட்­ட­பா­டில்லா தலாற்றான் தான் எல்­லோ­ரும் ஒன்­றி­ணைந்து அழைத்­தால் அவர்­கள் கோரிக்­கை­யைப் பரி­சீ­லனை செய்­வேன் என்று கூறி அவ்­வாறு அவர்­கள் கோரி­ய­தாற்­றான் நான் அர­சி­ய­லுக்கு வர­வேண்­டி­யி­ருந்­தது.

2.பேரா­சி­ரி­யர் சிற்­றம்­ப­லம் உண்­மை­யில் வழிப்­போக்­கர்­க­ளைக் கட்­சிக்­குள் கொண்­டு­வ­ரா­தீர்­கள் என்று கூறி­னாரோ தெரி­யாது. அவ்­வாறு கூறி­யி­ருந்­தால் அதில் தவ­றென்ன? கட்­சி­யின் ஆரம்­ப­கால உறுப்­பி­னர் அவர். படித்­த­வர். பண்­புள்­ள­வர். அவ­ரைப் புறந்­தள்ளி வழிப்­போக்­கர்­கள் குளிர்­கா­யும் கட்­சி­யா­கத் தமி­ழ­ர­சுக் கட்­சியை மாற்­றி­யமை அவ­ருக்கு ஆத்­தி­ரத்தை ஊட்­டி­யி­ருக்­கக்­கூ­டும்.

நான் கட்­சி­க­ளின் அர­வ­ணைப்­பில் வாழ்ந்­த­வன் அல்ல. என்­னைக் கட்­சி­க­ளுக்­குள் கட்­டுப்­பட வைப்­ப­தும் சற்­றுக் கடி­ன­மாக இருக்­கும். கார­ணம் கட்சி அர­சி­யலே எமது நாட்­டைச் சீர­ழித்­துள்­ளது என்ற கருத்­தைக் கொண்­ட­வன் நான்.

தம்பி மாவை கூட அண்­மை­யில் கட்சி பேதம் பார்க்­கா­மல் வாக்­க­ளி­யுங்­கள் என்று கூறி­ய­தா­கப் பத்­தி­ரி­கைச் செய்­தி­யொன்றை வாசித்­தேன். கட்­சி­க­ளின் போக்கு கவலை தரு­வ­தாக அமைந்­துள்­ளது.

3.என்­னை­விட அனந்தி கூடிய வாக்­கு­கள் பெற்­று­வி­டு­வார் என்ற கவலை அவர்­க­ளுக்கு இருந்­த­தா­க நண்­பர் கூறு­கின்­றார். அனந்தி கூடிய வாக்­கு­கள் அவ்­வாறு பெற்­றி­ருந்­தால் தமிழ் மக்­கள் பெண்­களை எந்­த­ளவு மதிக்­கின்­றார்­கள் என்­பது தெரி­ய­வந்­தி­ருக்­கும்.

அதில் எனக்கு மதிப்­புக் குறைவு எது­வுமே இருக்­க­வில்லை. ஒரு வேளை ஒரு பெண்­ணுக்கு முதல்­வர் பதவி கொடுக்­கக்­கூ­டாது என்ற பயத்­தில் நண்­ப­ரும் மற்­ற­வர்­க­ளும் காரி­யத்­தில் இறங்­கி­னார்­களோ தெரி­யாது.

இன்று மிக முக்­கி­ய­மான அமைச்­சுப் பத­வி­க­ளுக்­குப் பொறுப்­பாக இருந்து அனந்தி தனது கட­மை­க­ளைப் பொறுப்­பு­டன் செய்து வரு­கின்­றார்.

4.அடுத்து, உயர் மட்­டப் பத­வி­யில் இருந்து வந்­த­தால் மக்­க­ளு­டன் மக்­க­ளாக நான் மாற­மு­டி­யாது போய்­வி­டும் என்று யாரோ கூறி­ய­தா­கக் கூறி­னார். அந்­தக் கூற்று இன்று மெய்­யா­கி­விட்­டது என்­றார்.

அவ்­வாறு மெய்­யா­ன­தாற்­றானா எனக்கு எதி­ரா­கத் தமி­ழ் அரசுக் கட்சி நட­வ­டிக்­கை­கள் எடுத்­த­போது, பொது மக்­கள் முண்டி அடித்­துக் கொண்டு வந்து எனது வாசஸ்­த­லத்­திற்கு முன் நின்று எனக்­குச் சார்­பா­கக் குரல் எழுப்­பி­னார்­கள்? நான் எந்த மட்­டத்­தில் இருந்து வந்­த­வன் என்­பது அவர்­க­ளின் கரி­ச­னை­யாக அமை­ய­வில்லை.

இவன் எப்­பேர்ப்­பட்­ட­வன் என்­பதை அவர்­கள் அலசி ஆராய்ந்தே சதி­க­ளில் இருந்து என்­னைக் காப்­பாற்­றி­னார்­கள். நண்­ப­ருக்கு ஒன்று கூற விரும்­பு­கின்­றேன்.

நெஞ்­சத்­தில் அன்­பி­ருந்­தால் அத­னைப் பொது மக்­க­ளால் அடை­யா­ளம் கண்டு கொள்ள முடி­யும். கேவ­லம் பற­வை­க­ளும் விலங்­கி ­னங்­க­ ளும் எமது அன்பை அடை­யா­ளம் காண்­கின்­றன. மக்­க­ளால் முடி­யாதா?

5.அடுத்து கொழும்­பு­டன் நல்­லு­ற­வைப் பேண­வேண்­டும் என்­கின்­றார் நண்­பர். கொழும்­பில் பிறந்து வளர்ந்­த­வன் நான். நாட்­டின் பெரும்­பா­லான இடங்­க­ளில் நான் ஏதோ விதத்­தில் தொடர்­பு­பட்­டி­ருந்­த­வன்.

நாட்­டின் மூன்று மொழி­க­ளு­ட­னும் நான்கு மதங்­க­ளு­ட­னும் ஓர­ளவு பரீட்­ச­யம் பெற்­ற­வன். எனவே தெற்­கு­டன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்­டு­மென நண்­பர் எனக்­குச் சொல்­லித்­த­ரக்­கூ­டாது.

நண்­பர் போன்­ற­வர்­கள் தெற்­கு­டன் நல்­லெண்­ணம் பேண வேண்­டும் என்­றால் அவர்­க­ளுக்­குப் பணிந்து போக வேண்­டும் என்ற கருத்தை உடை­ய­வர்­க­ளா­கத் தென்­ப­டு­கின்­றார்­கள்.

தெற்­குக்கு அடங்­கிப் போகும் ஒரு­வரை முத­ல­மைச்­சர் ஆக்க வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நினைத்­தி­ருந்­தால், நண்­ப­ரைப் போன்ற ஒரு­வ­ரையே முத­ல­மைச்­ச­ராக நிறுத்­தி­யி­ருக்­கும். புகழ்­பாடி, பணிந்து, இரந்து, எவ­ர­தும் பெரிய மன­தின் பெறு­பே­று­க­ளைக் கொண்டு தமிழ் மக்­க­ளின் உரித்­துக்­க­ளைப் பெற வேண்­டிய அவ­சி­யம் எமக்­கில்லை.

தம்பி பிர­பா­க­ரன் அர­சி­யல் சூட்­சு­மத்­தில் அனு­ப­வம் முதிர்ந்­த­வர்­க­ளின் அறி­வு­ரை­க­ளைப் புறக்­க­ணித்­தி­ருக்­க­லாம். அத­னால் சாவை­யும் தழு­வி­யி­ருக்­க­லாம். ஆனால் மண்­டி­யிட்டு மலர் மாலை பெற வேண்­டிய அவ­சி­யம் அவ­ருக்கு என்­றுமே இருந்­தில்லை.

நாம் இந்த நாட்­டின் மூத்த குடி­கள். எமது தகைமை உல­க­றிந்­தது. எனி­னும் அந்த உண்­மை­யைக் கொழும்பு உதா­சீ­னம் செய்து வரு­கின்­றது. கொழும்­பு­டன் முரண்­ப­டாது எவ்­வாறு எமது உரி­மை­க­ளைப் பெற்­றெ­டுப்­பது? 2016இல், தக்க தீர்­வைப் பெற்று விடு­வோம் என்று முரண்­ப­டாது வாழ்ந்து வந்த எம் தலை­வர் கூறி­னாரே! பெற்று விட்­டோமா? ஆடு­கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்­டும்; பாடு­கிற மாட்­டைப் பாடிக் கறக்க வேண்­டும்!

மலேசியத் தலைமை அமைச்சருடனான சந்திப்பைத் தடுத்து நிறுத்தச் சதி இடம்பெற்றதா?

6.எனது செயற்­பாட்­டால் வட­மா­கா­ணத்­தின் மீது வினாக்­குறி எழுந்­துள்­ள­தா­கக் கூறு­கி­றார். அத­னாற்­றான் கட்­சித் தலை­மை­களை அழைக்­காது எமது வட­மா­காண முதல்­வரை அழைத்து மலே­சி­யத் தலைமை அமைச்சர் கருத்­துப் பரி­மாற்­றம் அண்­மை­யில் நடாத்­தி­னாரா? அச்­சந்­திப்பை நிறுத்த சிலர் முயன்­ற­தின் பின்­னணி என்ன? வினாக்­கு­றியா?

7.நான் மாகாண முத­ல­மைச்­சர்­கள் கூட்­டங்­க­ளில் கலந்து கொள்­ள­வில்லை என்று யார் கூறி­னார்­கள்? கலந்து கொண்­டது மட்­டு­மல்­லா­மல் காத்­தி­ர­மான கருத்­துக்­க­ளை­யும் முன்­வைத்­த­ தைக் கூட்­டக் குறிப்­புக்­கள் கூறும்.

ஏதோ ஒரு சில கூட்­டங்­க­ளுக்­குப் போக முடி­யா­மற் போனதை ஒரு பொருட்­டா­கக் கருதி நண்­பர் குற்­றஞ் சுமத்­து­வது சிரிப்­புக்கு இட­ம­ளிக்­கின்­றது.

ஆனால் ஒன்றை மட்­டும் சட்­டத்­த­ர­ணி­யான நண்­பர் தனது கருத்­துக்கு எடுத்­துக் கொள்ள வேண்­டும். அதி­கா­ரங்­க­ளைக் கூட்­டித்­தர வேண்­டும் என்று மற்­றைய முத­ல­மைச்­சர்­கள் கேட்­பது ஒற்­றை­யாட்சி அரசமைப்பின் அடிப்ப டையிலேயே அது எமக்கு அப்­போ­தைக்­குச் ஒரு சில நன்­மை­க­ளைப் பெற்­றுக் கொடுத்­தா­லும், எமது இனத்­தின் நீண்­ட­கால வாழ்க்­கைக்கு நன்மை அளிக்­காது.

அல்­பி­ரட் துரை­யப்­பாவோ, குமா­ர­சூ­ரி­யரோ, டக்­ளஸ் தேவா­னந்­தாவோ கேட்­டார்­கள் கொடுத்­தோம் என்­று­தான் இருக்­கும். தமி­ழர்­கள் உரித்­து­டன் கேட்­டதை நாம் அள்­ளிக் கொடுத்­தோம் என்­றி­ருக்­காது. இன்று நாம் தெற்­கின் தய­வி­லேயே வாழ்­கின்­றோம். அதை நண்­பர் உண­ராது உள்­ளார்.

பல்­லி­ளித்­துப் பயன் பெறு­வ­தென்­றால் எந்­தத் தமிழ்த் தலை­வ­ரி­லும் பெறக்­கூ­டிய சலு­கை­க­ளி­லும் பார்க்­கக் கூடிய சலு­கை­களை தெற்­கில் இருந்து பெற விக்­னேஸ்­வ­ர­னால் முடி­யும். அவன் தெற்­கில் பிறந்து வளர்ந்­த­வன்.

ஆனால் அவ்­வாறு பல்­லி­ளித்­துப் பெற்­றால் காலக் கிர­மத்­தில் எம்­ம­வர் அடி­மை­கள் ஆகி­வி­டு­வார்­கள். சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள், சிங்­கள மொழி உள்­ளீ­டல்­கள், பௌத்த மதத்­தி­னர் உள்­ளீ­டல்­கள் என்று எம்மை 25 வரு­டங்­க­ளில் இருந்த இடந் தெரி­யாது ஆக்­கி­வி­டு­வார்­கள்.

நாமும் வெளி­நா­டு­கள் நோக்­கித் தொடர்ந்து பய­ணித்­துக் கொண்­டி­ருப்­போம். ஜெரூ­ச­லே­முக்கு நடந்­துள்­ள­தைப் பாருங்­கள். ஆகவே எமது தனித்­து­வத்­தைப் பேணிக் கொண்டு தான் நான் தெற்­கு­டன் உற­வாடி வரு­கின்­றேன்.

பல தெற்­கத்­தைய அமைச்­சர்­க­ளு­டன் கூடி பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­றேன். என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் அவர்­கள் எனக்­குச் சம­மா­ன­வர்­களே. எனக்கு மேலா­ன­வர்­கள் அல்ல.

கூனிக் குறுகி அவர்­க­ளி­டம் யாச­கம் பெற வேண்­டிய அவ­சி­யம் எனக்­கில்லை. பிர­பா­க­ரன் பிறந்த மண்­ணில் இவ்­வாறு யாச­கம் பெற எத்­த­னிப்­போர் வாழ்ந்து வரு­வது விந்­தையே!

கட்சிக் கூட்டங்களில் ஒழுங்காக  கலந்து கொள்ளவில்லை என்பதும்
ஒரு குற்றச்சாட்டு

8.தமி­ழ் அர­சுக் கட்­சி­யின் கூட்­டங்­க­ளுக்கு எனக்கு அழைப்பு அனுப்­பி­ய­தா­கக் கூறு­கின்­றார். கூட்­டங்­க­ளில் நான் கலந்து கொண்­ட­தா­க­வும் கூறு­கின்­றார். மதி­யத்­து­டன் எழுந்து சென்­று­வி­டு­வார் என்­றும் கூறி­யுள்­ளார்.

கூட்­டங்­கள் உரி­ய­வற்­றைப் பரி­சீ­லித்­தால், உரி­யவை பற்­றிப் பேசி­னால், உண்­மையை உரைத்­துப் பார்க்க முன் வந்­தால் எவர் தான் பாதி­யில் எழுந்து போகப் போகின்­றார்­கள்? ஆனால் ஒன்றை மட்­டும் அவர் ஏற்­றுக் கொண்­டுள்­ளார்.

தமிழ் மக்­கள் பேரவை தொடங்­கிய நாள் தொடக்­கம் எனக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை என்­பதை ஏற்­றுள்­ளார். உண்­மை­யில் அதன் பிறகு தான் என்னை வலிந்து அழைத்­தி­ருக்க வேண்­டும். அப்­பொ­ழுது எனது கருத்­துக்­களை அவர்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பேன்.

தமிழ் மக்­கள் பேரவை ஒரு மக்­கள் சார் குரல், கட்சி அல்ல என்­பதை விளங்­கப்­ப­டுத்­தி­யி­ருப்­பேன்.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பின் ஆரம்ப காலத்­தில் கொழும்­பில் அதற்­கான குழுக்­கள் கூட்­டப்­பட்­டன. அக் குழு உறுப்­பி­னர்­கள் சட்ட ரீதி­யான சில நன்­மை­களை என்­னி­டம் பெற்­ற­துண்டு. அது பற்றி அவர்­க­ளி­டம் கேட்­டால் தெரிந்து கொள்­ள­லாம்.

என்­னி­டம் பெற்ற அந்த அடிப்­ப­டைத் தர­வு­களை வைத்து கட்சி பதிவு செய்­யப்­பட்­ட­தா­கவே நான் எண்­ணி­யி­ருந்­தேன். அர­சி­ய­லுக்­குள் வந்த பின்­னரே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்­ன­மும் அர­சி­யல் கட்­சி­யா­கப் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தைத் தெரிந்து கொண்­டேன்.

அப்­போது தான் TELO, EPRLF, PLOTE, நண்­பர் ஆனந்­த­சங்­க­ரி­யின் கட்சி ஆகி­யவை தமி­ழ் அரசுக் கட்­சி­யின் சின்­னத்­திற்­குக் கீழேயே தேர்­த­லில் ஈடு­பட்டு வரு­கின்­றன என்­ப­தைப் புரிந்து கொண்­டேன்.

தமிழ் அர­சுக் கட்­சி­யின் சின்­னத்­தின் கீழ்த் தான் போட்­டி­யி­டப் போகின்­றோம் என்று அறி­வ­தற்கு முன்­னர் நான் எவ்­வாறு அது பற்றி அறிந்­தி­ருக்­கக்­கூ­டும் என்­ப­தற்கு நண்­பர் தான் பதில் தர வேண்­டும்.

9.போர்க்­குற்­றங்­கள், இன அழிப்பு பற்றி நாங்­கள் காரில் சுமந்­தி­ர­னு­டன் பேசி வந்­த­தைக் குறிப்­பிட்­டுள்­ளார்.

நண்­பர் ஒரு விட­யத்­தைப் புரிந்து கொள்ள வேண்­டும். இன அழிப்பு இடம்­பெற்றது என்­பது உண்மை. அதை நீதி­மன்­றில் நிரூ­பிக்க முடி­யுமா என்­பது இன்­னொன்று. நிரூ­பிக்க முடி­யாது போகும் என்று சுமந்­தி­ரன் கூறிக் கார­ணங்­களை எடுத்­தி­யம்­பி­னார். அதில் இருந்த சட்­டச் சிக்­கல்­களை உணர்ந்து கொண்­டேன்.

ஆனால் வட­மா­கா­ண­சபை இயற்­றிய பிரே­ரணை மக்­க­ளின் கருத்­தைப் பிர­தி­ப­ லித்த ஒன்று. அது சமூ­கம் சார்ந்­தது. உண்மை சார்ந்­தது. அத­னைச் சர்­வ­தேச அரங்­கில் நிரூ­பிக்க முடி­யுமா? அதில் உள்ள சட்­டச் சிக்­கல்­கள் எவை? என்­பவை வேறு விட­யங்­கள்.

ஆகவே சட்ட ரீதி­யாக நான் சுமந்­தி­ர­னு­டன் பேசி­யதை சமூக ரீதி­யா­கக் கொண்டு வந்த பிரே­ர­ணை­யு­டன் கலந்து நண்­பர் குழப்பி அடிக்­கக்­கூ­டாது. ஒரு­வர் இன்­னொ­ரு­வ­ரைக் கொன்­றுள்­ளார் என்று வைத்­துக் கொள்­வோம்.

சாட்­சி­யங்­கள் இல்­லா­த­தால் கொன்­ற­வர் விடு­தலை பெற்று விடு­கின்­றர். விடு­தலை பெற்­ற­தால் உண்­மை­யைப் பொறுத்த வரை­யில் அவர் கொலை செய்­ய­வில்லை என்று ஆகி­வி­டுமா?

ஆயி­ரம் முரண்­பா­டு­க­ளை­யும் தன்­னுள் அடக்கி தலை நிமிர்ந்து நிற்­கக் கூடி­யது சத்­தி­யம் அல்­லது உண்மை என்று சங்­க­ராச்­சா­ரி­யா­ரின் குரு­வின் குரு கௌட­பா­தர் ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே கூறி­விட்­டார்.

இன­வ­ழிப்பு இடம்­பெற்­றமை உண்மை. ஆனால் நிரூ­பிப்­பது கடி­னம் என்­ப­தால் உண்மை பொய்­மை­யா­காது. நிரூ­பிப்­பது சிர­மம் என்­ப­தால் உண்­மையை வெளி­யி­டாது இருக்க வேண்­டிய அவ­சி­யம் எமக்கு இருக்­க­வில்லை.

சிவா­ஜி­லிங்­கம் வட­மா­காண சபை­யில் இன அழிப்­புப் பிரே­ர­ணை­யைக் கொண்டு வந்த போது அது முழு­மை­யு­டை­ய­தாக எனக்­குப்­ப­ட­வில்லை. அதற்­காக அதைக் கூடிய வலு­வு­டன் தயா­ரித்து சபை­யில் சமர்ப்­பிக்க வேண்­டும் என்று கூறி­னேன்.

இதனை நாங்­கள் அனை­வ­ரும் சேர்ந்தே செய்­ய­லாம் என்று கூறி அவ­ரின் பிரே­ர­ணை­யைத் தவணை போட்­டேன். அதன் பின் சுமந்­தி­ர­னது துணை­யையே நான் நாடி­னேன்.

அவர் அதனை முழு­மை­யா­கத் தயா­ரித்­துத் தரு­வ­தா­கக் கூறி காலம் கடத்தி வந்­தார். 2014ஆம் ஆண்­டின் இறுதி வரை அவர் எந்த நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்­க­வில்லை.

கடை­சி­யில் சிவா­ஜி­லிங்­கம் எப்­ப­டி­யா­வது தனது பிரே­ரணை ஏற்­றுக் கொள்­ளப்­பட வேண்­டும் என்று 2014ஆம் ஆண்டு நவம்­பர் அல்­லது டிசெம்­பர் மாதத்­தில் கூட்­டத்­தின் போது வாதா­டி­னார்.

அப்­பொ­ழுது தான் நான், அதனை நானே உரு­வாக்­கித் தரு­கின்­றேன், கடை­சி­யாக ஒரு தவணை போடும் படி கேட்டுப் பெற்­றுக் கொண்­டேன். புதிய அர­சாங்­கம் வந்­த­தற்­கும் பிரே­ர­ணைக்­கும் எந்­தத் தொடர்­பும் இருக்­க­வில்லை. புதிய அர­சு வந்­த­தால் இந்தப் பிரே­ரணை கொண்­டு­வ­ர­வில்லை.

இது ஒரு தொடர் நிகழ்ச்சி. வட­மா­கா­ண­ச­பை­யில் நடந்த ஒரு தொடர் நிகழ்ச்சி. கட்­சித் தலை­மைக்­குத் தெரிந்த ஒரு தொடர் நிகழ்ச்சி. கட்­சித் தலை­மை­கள் அனு­ச­ரணை வழங்­க­வு­மில்லை. எதிர்க்­க­வு­மில்லை.

10.கட்­சி­யின் தேர்­தல் விஞ்­ஞா­ப­னக் கொள்­கையை ஏற்ற நான் திடு­தி­டுப்­பென்று மாறி­விட்­டேன் என்று கூறி­னார் நண்­பர். அப்­ப­டி­யல்ல. மாறி­யது நான் அல்ல. கட்­சித் தலை­மை­தான் மாறி­யது. அதை அவர்­க­ளுக்கு மக்­கள் சார்­பாக எடுத்­துக் கூறவே தமிழ் மக்­கள் பேரவை பிறந்­தது.

11.அடுத்­துக் கூறு­வது தான் விந்­தை­யி­லும் விந்­தை­யான கூற்று. தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­மைப் பதவி தம்பி மாவைக்கு சென்­ற­டைந்­ததே எனது மன­மாற்­றத்­திற்­குக் கார­ணம் என்­கின்­றார்.

கட்சி அர­சி­ய­லின் வெறுப்பு மிக்க செயற்­பா­டு­க­ளைக் கண்டு வந்­த­வன் நான். அர­சி­ய­லுக்­குப் புதி­ய­வன். ஏற்­க­னவே நல்ல பத­வி­களை வகித்­தி­ருந்­த­வன். கேவ­லம் ஒரு கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­திற்­கா­கக் கனாக் காண நான் என்­னு­டைய சில மாண­வர்­கள் போன்­ற­வனா?

அரசால் ஒரு முத­ல­மைச்­ச­ருக்கு வழங்­கப்­ப­டும் மதிப்பு மத்­தி­யின் முன்­னணி அமைச்­சர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் மதிப்புக்கு இணை­யா­னது. கட்­சித் தலை­வர்­க­ளுக்கு அவ்­வா­றான மதிப்பு அர­சு அளிக்­க­வில்லை.

ஆகவே மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் பத­வி­யில் இருந்து கொண்டு கட்­சித் தலை­வர் பத­வி­யைப் பெற ஆசைப்­பட்­ட­தா­கக் கூறு­வது நண்­ப­ரி­ன­தும், நண்­ப­ருக்கு இந்­தக் கடி­தத்தை வெளி­யி­டு­மாறு பணித்­த­வ­ருக்­கும் இருக்­கும் பதவி மோகத்­தையே எடுத்­துக் காட்­டு­கின்­றது.

தாம் தமக்­குக் கிடைக்க வேண்­டும் என்று கனாக்­கா­ணும் பதவி மேல் எனக்கு மோகம் இருந்­தது என்று கூறு­வது அவர்­க­ளின் வங்­கு­ரோத்து அர­சி­ய­லையே வெளிக்­காட்­டு­கின்­றது. அவர்­க­ளுக்­காக நான் அனு­தா­பப்­ப­டு­கின்­றேன்.

இரண்டு வருடங்களுக்காவது முதலமைச்சராக இருக்குமாறு கோரப்பட்டேன்

12. 2 ½ வரு­டங்­களே பத­வி­யில் இருப்­ப­தாக நான் கூறி­ய­தா­கக் கூறு­கின்­றார் நண்­பர். அப்­ப­டி­யல்ல. நான் அர­சி­ய­லுக்குள்குள் வர­மு­டி­யாது என்று முரண்­டு­பி­டிக்க எம்­முள் யாரோ ஒரு­வர் 2 ½ வரு­டங்­கள் நீங்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்­து­விட்­டுப் போங்­கள்.

அதன் பின் வேறொ­ரு­வரை நிய­மிக்­க­லாம் என்று கூறி­னார். அதற்கு நான் அர­சி­யலே வேண்­டாம் என்­கின்­றேன். நீங்­கள் கால­வ­ரை­யறை அர­சி­யலை என்­மீது திணிக்­கப் பார்க்­கின்­றீர்­கள் என்­றேன்.

2 ½ வரு­டங்­கள் தான் நான் முத­ல­மைச்­ச­ராக இருப்­பேன் என்று நானோ, இருக்க வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்போ ஒரு­போ­தும் கூற­வில்லை.

தமி­ழ­ர­சுக்­கட்­சி­யின் தலை­வ­ராக மாவை வந்­த­தில் மகிழ்ச்சி அடைந்­த­வன் நான். அவர் எத்­தனை முறை மக்­க­ளுக்­கா­கச் சிறை சென்று வந்த ஒரு­வர் என்­பதை நான் அறிந்­தி­ருந்­தேன்.

அவ­ரை­யும், காசி­ஆ­னந்­த­னை­யும் மட்­டக்­க­ளப்­பில் குற்­றப் பத்­தி­ரிகை பதி­யாது தொடர்ந்து பல மாதங்­கள் அர­சாங்­கம் சிறை­யில் அடைத்­தி­ருந்­த­தைக் கண்ட நான் நீதித்­து­றைக்கு வந்த சில மாதங்­க­ளி­லேயே 1979ம் ஆண்­டில் மட்­டக்­க­ளப்பு ஒன்­றி­ணைந்த மாவட்ட நீதி­ப­தி­யாக அவர்­க­ளைப் பிணை­யில் செல்ல அனு­ம­தித்­தேன். அப்­போது தான் மாவை பல தட­வை­கள் மக்­க­ளுக்­கா­கச் சிறை சென்­றதை அறிந்து கொண்­டேன்.

அதற்­காக அவர் மீது ஒரு மதிப்பு இன்­றும் எனக்­குள்­ளது. அப்­பேர்ப்­பட்ட பழுத்த அனு­ப­வம் மிக்க ஒரு அர­சி­யல்­வாதி தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ராக வரு­வதை நான் எப்­படி வயிற்­றெ­ரிச்­ச­லு­டன் பார்க்க முடி­யும்? அவ­ரது தேர்­வில் முழு மகிழ்ச்­சி­ய­டைந்­த­வர்­க­ளில் நானும் ஒரு­வன். நண்­பர் துரை­ரா­ஜ­சிங்­கம் போன்­ற­வர்­கள் இவ்­வா­றான பத­வி­க­ளுக்­கா­கக் கனாக்­கண்டு வரு­வதை என்­மேல் திணிக்­கப் பார்க்­கின்­றார்­கள்.

பத­வி­க­ளுக்­கா­கக் கனாக்­கா­ணவோ அலை­யவோ எனக்­குத் தேவை­யில்லை. முழு­மை­யான வாழ்க்­கையை ஏற்­க­னவே நான் வாழ்ந்­து­விட்­டேன். எல்­லாம் கிடைத்­து­விட்­டன.

அமை­தி­யான ஓய்வு நிலை­யொன்றே எனக்­குத் தேவை­யாக இருந்­தது. யாவ­ரும் வலிந்து கேட்­ட­தால்த் தான் இப்­ப­த­விக்கு வந்­தேன். இப்­ப­த­வி­யின் பல­வி­த­மான கட­மை­களை, சுமை­க­ளைப் போகப் போகத்­தான் அறிந்­தேன்.

அவ்­வாறு இருக்­கும் போது ஒரு கட்­சி­யைத் தலைமை ஏற்று நடத்த வேண்­டும் என்ற எண்­ணம் என்­னைப் போன்ற அகவை எண்­பதை எட்­டும் ஒரு­வ­ருக்கு வர­மு­டி­யுமா? நண்­ப­ரின் குற்­றச்­சாட்டு நகைப்­புக்கு உரி­யது. அவ­ருக்­கும் அவரை ஆட்­டிப் படைக்­கும் சில­ருக்­கும் இருக்­கும் நித்­திய கனாக்­களை என் மீது திணிக்­கப் பார்க்­கின்­றார்­கள்.

13.ஊர் திரண்டு தேரைச் சேர்த்து இழுக்க வேண்­டி­யது பற்றி நண்­பர் கூறி­யுள்­ளார். நாம் யாவ­ரும் ஒன்­றி­ணைந்து இழுக்க வரும் போது ஒரு சிலர் மட்­டும் அமெ­ரிக்கா நோக்­கி­யும் கொழும்பு நோக்­கி­யும் தேரை இழுக்க முயற்­சிப்­பது கவலை அளிக்­கின்­றது.

அப்­படி இருந்­தும் நான் தேர் இழுப்­ப­வர்­க­ளு­டன் கூடி வடத்­தில் கைவைத்­துக் கொண்டே எனது கருத்தை வெளி­யிட்­டுக் கொண்டு வரு­கின்­றேன். வடத்­தைக் கைவிட்­டுச் செல்­ல­வில்லை.

தேரை நாம் நிர்­ண­யித்த இடம் நோக்கி நகர்த்­துங்­கள். கொழும்பு நோக்­கி­யும் அமெ­ரிக்கா நோக்­கி­யும் நகர்த்­தா­தீர்­கள் என்று தான் சொல்லி வரு­கின்­றேன்.

14.கருத்து வெளி­யி­டு­மாறு பத்­தி­ரி­கை­க­ளி­னால் கோரப்­பட்­ட­போது நான் இடைக்­கால அறிக்­கையை முழு­மை­யாக வாசித்­தி­ருக்­க­வில்லை என்று கூறி­யது உண்மை. அதன் பின் வாசித்­தேனோ இல்­லையோ, ஒரு பானை சோற்­றுக்கு ஒரு சோறு பதம்.

ஒற்­றை­யாட்­சிக்­கான ஆங்­கி­லச் சொல்லை (Unitary) நீக்கி அதற்­குப் பதி­லாக சிங்­க­ளத்­தில் ஒற்­றை­யாட்­சிக்கு ஒப்­பான ‘ஏக்­கிய’ என்ற பதத்­தை­யும் தமி­ழில் கூட்­டாச்­சிக்கு ஒப்­பான ‘ஒரு­மித்த’ என்ற பதத்­தை­யும் அறிக்­கை­யில் பாவித்­த­தில் இருந்து மக்­கள் மீது திணிக்­கப்­பட இருக்­கும் மோசடி புலப்­ப­டு­கி­றது. ஏகிய ராஜ்ய என்­றால் ஒற்­றை­யாட்சி.

தமி­ழில் தரப்­ப­டும் ‘ஒரு­மித்த’ என்ற சொல் சிங்­க­ளத்­தில் ‘எக்­சத்’ என்று தரப்­பட்­டி­ருக்க வேண்­டும். இல்லை என்­றால் தமி­ழில் ஒற்­றை­யாட்சி என்று தரப்­பட்­டி­ருக்க வேண்­டும்.

மக்­களை ஏமாற்­றப்­பார்க்­கும் இடைக்­கால அறிக்­கையை நான் நிரா­க­ரித்­த­தில் என்ன தவறு? எவ்­வாறு வடக்கு கிழக்கு இணைப்பு 18 வரு­டங்­க­ளுக்­கப் பின் இல்­லா­மல் ஆக்­கப்­பட்­டதோ, அவ்­வாறே இவ்­வா­றான இரட்டை வேடந் தாங்கி வரும் அர­சி­யல் யாப்பை ‘ஏகிய’ என்ற ஒரு சொல்லை வைத்தே ஒற்­றை­யாட்சி நடை­மு­றை­யில் நாடு இருந்து வரு­கின்­றது என்று நீதி­மன்­றங்­கள் தீர்­மா­னித்து விடும். ஒற்­றை­யாட்சி என்­றால் பெரும்­பான்­மை­யி­ன­ரின் ஆதிக்­கம் என்று பொருள்­ப­டும். எமக்கு நேர்ந்த அர­சி­யல் துய­ரங்­கள் யாவும் இந்த ஆதிக்­கத்­தின் பிர­தி­ப­லிப்பே.

15. அர­ச­மைப்பு புரிந்­து­ணர்­வோடு தயா­ரிக்­கப்­பட வேண்­டி­ய­தொரு ஆவ­ணம் என்று நண்­பர் கூறு­வ­தில் மாற்­றுக் கருத்து இருக்­க­மு­டி­யாது. ஆனால் எந்த அள­வுக்கு அவ்­வாறு தயா­ரிக்­கப்­ப­டும் அர­ச­மைப்பு தமிழ் மக்­க­ளின் எதிர்­பார்ப்­புக்­க­ளை­யும் அபி­லா­சை­க­ளை­யும் நிறை­வேற்­றும் என்­பதே கேள்வி.

நல்­லி­ணக்­கம் என்ற பெய­ரில் நாம் பல­தை­யும் விட்­டுக் கொடுத்து முத­லில் தரப்­பட்ட 13ஆவது திருத்­தச் சட்­டத்­திற்கு ஒப்­பான ஒரு சட்­டத்தை ஒற்­றை­யாட்­சி­யின் கீழ் உரு­வாக்­கு­கின்­றோம் என்று வைத்­துக் கொள்­வோம்.

அப்­போது அதி­கா­ரம் முற்­றி­லும் மாகா­ணத்­திற்­குப் பகி­ரப்­ப­டுமா, அதில் மத்தி தலை­யி­டாதா, எமது மண்­ணின் உரித்து எமக்­கு­ரி­ய­தாக்­கப்­ப­டுமா இல்­லையா? மத்­தி­யின் உள்­ளீ­டல்­கள் எவ்­வாறு அமை­யும், அதன் கார­ண­மாக எமக்கு ஏற்­ப­டப்­போ­கும் பாதிப்­புக்­கள் எவை என்­பவை பற்­றி­யெல்­லாம் நாம் சிந்­திக்­கும் போது அடிப்­படை அதி­கா­ரம் எவர் கைவ­சம் இருக்­கின்­றது என்­பதே முக்­கி­ய­மா­கக் கவ­னத்­திற்கு எடுத்­துக் கொள்­ளப்­பட வேண்­டி­யி­ருக்­கும்.

எமது தேவை­கள், நட­வ­டிக்­கை­கள், எதிர்­பார்ப்­புக்­கள் சம்­பந்­த­மாக மத்­திக்­குத் தீர்­மா­னம் எடுக்க வசதி செய்து கொடுத்­தால் எமது தனித்­து­வம் அழிந்து விடும். எமது மண்­ணும் சுற்­றி­யுள்ள கட­லும் பறி­போய்­வி­டு­வன.

16. எமது அர­சி­யல்­யாப்பு எழுத்­தி­லான யாப்பு. பிரித்­தா­னி­யா­வின் யாப்பு எழு­தப்­ப­டா­த­தொன்று. அங்கு பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு, சர்­வ­தே­சச் சட்­டத்­திற்கு அமைய மக்­கள் தமது கொள்­கை­களை, நடை­மு­றை­களை மாற்ற முடி­யும்.

எழுத்­தி­லான அர­சி­யல் யாப்பு அவ்­வா­றான மாற்­றங்­க­ளுக்கு இடங் கொடுக்­காது. ஆகவே இவற்றை வைத்­துக் குழப்பி அடிப்­பது சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கு கைவந்த கலை­யாக இருக்­க­லாம். யதார்த்­தம் வியாக்­கி­யா­னங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­தொன்று.

எழுத்­தி­லான அர­சி­யல் யாப்­பைப் பேசி மாற்ற முடி­யாது. அத­னாற்­றான் எமது தனித்­து­வத்­தைப் பேணும் முக­மாக கூட்­டாட்சி பற்­றிக் கூறி வரு­கின்­றோம்.

17. சிங்­க­ள­வர் பற்­றிய எனது கருத்­துக்­கள் கடு­மை­யா­னவை என்­கின்­றார் நண்­பர். ஒன்றை மறந்து விட்­டார் நண்­பர். பிழை­யான கருத்­துக்­க­ளின் அடிப்­ப­டை­யில்த்­தான் சிங்­கள ஏகா­தி­பத்­தி­யம் இன்று நாட்டை ஆள்­கின்­றது.

அத­னைச் சுட்­டிக்­காட்­டா­தீர்­கள். அவர்­க­ளுக்­குக் கோபம் வரும். ஒன்­றும் தர­மாட்­டார்­கள் என்­கி­றார். அங்கு தான் தவறு இழைக்­கப்­பட்­டுள்­ளது. பொய்­மை­யின் அடிப்­ப­டை­யில் சிங்­கள இனத்­தின் ஆதிக்­கம் நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளது.

அதனை ஏற்று அவர்­கள் தரு­வதை பெற்­றுக் கொள்­வோம் என்­றால் எமக்கு என்ன கிடைக்­கப் போகின்­றன? இந்த நாடு சிங்­கள பௌத்த நாடு, நாம் கூறு­வதை மற்­றைய இனங்­கள் ஏற்க வேண்­டும்.

அதற்கு அனு­ச­ர­ணை­யாக மரத்­தைச் சுற்­றிப்­ப­ட­ரும் கொடி­போல் அவர்­கள் வாழ வேண்­டும் என்­றால் காலாதி காலம் நாங்­கள் பிச்­சைக்­கா­ரர்­க­ளா­கவே வாழ வேண்­டி­வ­ரும். விரும்­பும் போது எமது பிச்­சைப் பாத்­தி­ரத்­தைக் கூடப் பறித்து விடு­வார்­கள். நண்­ப­ரி­ன­தும் அவ­ரு­டன் சேர்ந்­த­வர்­க­ளி­ன­தும் அடிமை மனப்­போக்கு இதன் மூலம் வெளிப்­ப­டு­கின்­றது.

18. அடுத்து வித்­து­வச் செருக்­கால் நாம் தரு­வதை ஏற்­கா­து­விட்­டால் எமக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்­கி­றார் நண்­பர். எமது அண்­மைய அர­சி­யல் வர­லாறு பற்­றிக் கூறி­யுள்­ளார்.

அதற்­காக என்ன செய்ய வேண்­டும் என்­கின்­றார் நண்­பர்? அங்கு தான் உதைக்­கின்­றது. எதை எதையோ பறி­கொ­டுத்து வந்த நாங்­கள் இதனை ஏற்­றுக் கொள்ள வேண்­டும் என்­கின்­றார். அதா­வது ஒற்­றை­யாட்­சியை ஏற்க வேண்­டும்; சிங்­கள ஏகா­தி­பத்­தி­யத்தை ஏற்க வேண்­டும்; பௌத்­தத்­திற்கு முத­லி­டம் கொடுக்க வேண்­டும்; தனித்­து­வத்தை நாடு­வது தவறு. சுய­மாக எம்மை நாம் ஆள விழை­வது தவறு என்­றெல்­லாம் சொல்­லா­மல் சொல்­கின்­றார்.

இதை ஏற்­றுக் கொள்­வது எனக்கு மட்­டு­மல்ல பல புத்தி ஜீவி­க­ளுக்­கும் பாமர மக்­க­ளுக்­கும் கடி­ன­மா­கவே இருக்­கின்­றது. இதைக் கூறவே தமிழ் மக்­கள் பேரவை உத­ய­மா­கிற்று.

19. நடப்­பி­யல் அறிந்து தமி­ழ­ர­சுக் கட்சி இன்று நடப்­ப­தாக நண்­பர் கூறு­கின்­றார். கூட்­டாச்சி பற்றி சுமந்­தி­ரன் சிங்­கள மக்­க­ளுக்கு விpளக்கி வரு­வ­தைக் குறிப்­பி­டு­கின்­றார். கூட்­டாச்­சிக்கு வித்­தி­டாத ஒரு செயற்­றிட்­டத்தை வைத்­துக் கொண்டு கூட்­டாச்சி பற்­றிப் பேசி­ய­தா­கக் கூறி­யது எமக்கு ஆவலை எழுப்­பு­கின்­றது.

எதைச் சுமந்­தி­ரன் கூறி­னார் என்­பது முக்­கி­யம். அவர் சிங்­கள மக்­க­ளு­டன் பேசி­னார் என்­பது ஒரு அலகே. எதைப் பேசி­னார் என்­பது மறு அலகு. எந்த சோபி­த­தே­ரர் என்­ப­தும் குறிப்­பி­டப் பட­வில்லை. ஒரு­வர் கால­மாகி பல மாதங்­கள் ஆகி­விட்­டன.

20. மற்­ற­வர்­கள் தமது தய­வின் அடிப்­ப­டை­யில் தரு­வ­ன­வற்றை ஏற்று அவற்­றுக்கு நன்­றிக் கடன்­ப­டு­ப­வர்­களை எலும்­புத் துண்­டு­க­ளைப் பெறு­வ­ன­வற்­று­டன் ஒப்­பிட்­டது ஒரு தவ­றாக இருக்­க­லாம்.

அவ்­வா­றான உயி­ரி­னங்­கள் கூட தமது வாலை மிதித்­து­விட்­டால் சத்­தம் போட்­டா­வது எதிர்ப்பை வெளிக்­காட்­டு­கின்­றன. காணி பறி போகின்­றது. வாழ்­வா­தா­ரங்­கள் பறி­போ­கின்­றன. வாணி­பம் பறி­போ­கின்­றது. சுற்­று­லா­வும் எமது வளங்­க­ளும் சுமந்து செல்­லப்­ப­டு­கின்­றன. குடி­யேற்­றம் குயுக்­தி­யு­டன் ஈடேற்­றப்­ப­டு­கின்­றது.

காணா­மல் போனோர் பற்­றிக் கடு­க­ள­வும் சிந்­தனை இல்லை. பெண் தலை­மைக் குடும்­பங்­கள் படும் பாடு பற்றி ஆராய ஆர்­வ­மில்லை. இவற்­றுக்­காக ஒரு திட­மான குரல் கூடக் கொடுக்­காது தரு­வதை ஏற்­போம் என்­பது நண்­ப­ருக்­குச் சரி­யா­கப்­ப­டு­கின்­றதா? அவரே பதில் தரட்­டும்!

நீதி­ய­ர­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன்
முத­ல­மைச்­சர் வட­மா­கா­ணம்

You might also like