புரிந்­து­ கொள்ள வேண்­டும் மைத்­திரி – ரணில் அரசு

போர்க் குற்­றம் தொடர்­பான பொறுப்­புக்­கூ­றல் விவ­கா­ரத்­தி­லும், தமிழ் மக்­க­ளின் ஏனைய விவ­கா­ரங்­க­ளி­லும் கூட்டு அர­சும் சொல்­லிக்­கொள்­ளும் படி­யான அள­வில் சாதிக்­க­வில்லை என்று தெரி­வித்­துள்­ளார் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க் கட்சித் தலைவரும் நடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சம்­பந்­தன்.

‘த ஹிந்து’ ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே அவர் மைத்­திரி – ரணில் கூட்டு அர­சின் மீது தனது அதி­ருப்­தி­யைப் பதி­வு­செய்­துள்­ளார். போர்க் குற்­றம் தொடர்­பான பொறுப்­புக்­கூ­ற­லில் தனது முழு­மை­யான ஏமாற்­றத்­தை­யும், காணி விடு­விப்பு, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் நிலை தொடர்­பி­லான வெளிப்­ப­டுத்­தல்­கள், அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை ஆகி­ய­வற்­றில், ‘நல்­லாட்சி’ என்று தன்னை அடை­யா­ளப் படுத்­திக்­கொண்டு ஆட்­சி பீ­டம் ஏறிய கூட்டு அர­சும், தன­தும் தமிழ் மக்­க­ளி­ன­தும் எதிர்­பார்ப்பை நிறை­வு­செய்­ய­வில்லை என்­றும் அவர் சாடி­யுள்­ளார்.

எனி­னும் 2015ஆம் ஆண்டு அப்­போ­தைய அரச தலை­வர் மகிந்­தவை வீட்­டுக்கு அனுப்­பும் விதத்­தில் மைத்­தி­ரிக்கு ஆத­ரவு தெரி­வித்­தமை தொடர்­பில் தமக்கு எவ்­வித வருத்­த­மும் கிடை­யாது என்­றும் சம்­பந்­தன் அழுத்­தம் திருத்­த­மாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

மைத்­திரி – ரணில் அரசை அமைப்­ப­தற்கு அன்று எடுத்த முடிவு சரி­யா­னது என்று இன்­றும் சம்­பந்­தன் வெளிப்­ப­டுத்­தி­யுள்ள கருத்­துக்­கள், இந்­தக் கூட்டு அர­சில் அவர் தொடர்ந்தும் நம்­பிக்­கை­யு­ட­னேயே உள்­ளார் என்­ப­தையே புடம்­போட்­டுக் காட்­டு­கின்­றன. பழுத்த அர­சி­யல்வாதி­யும், தமிழ் மக்­க­ளின் முக்­கிய பிர­தி­நி­தி­யு­மான சம்­பந்­த­னின் கருத்­துக்கு கூட்டு அரசு முழு­மை­யா­கச் செவி­சாய்க்க வேண்­டி­யது இன்­றைய அவ­சர மற்­றும் அவ­சி­யத் தேவை­யா­க­வுள்­ளது.

2018ஆம் ஆண்டை நாம் வர­வேற்­றுள்­ளோம். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் விவ­கா­ரம், காணி விடு­விப்பு, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, வடக்­கில் உள்ள இரா­ணு­வப் பிர­சன்­னத்­தைக் குறைத்­தல் உள்­ளிட்ட பல­மு­னைப் போராட்­டங்­க­ளு­ட­னேயே கடந்த வரு­டங்­க­ளைப் போன்று இந்த வரு­டத்­தை­யும் நாம் ஆரம்­பித்­துள்­ளோம். இவற்­று­டன் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் என்ற ஒன்­றும் இந்த வரு­டம் கூடு­த­லாக இணைந்­துள்­ளது.

புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் தமி­ழர் தாய­கத்­தில் மிகப்­பெ­ரும் எதிர்­பார்ப்­புக்­கள் நில­வு­கின்­றன. மைத்­திரி – ரணில் கூட்டு அரசு தமி­ழர்­க­ளுக்கு போதிய அதி­கா­ரத்­து­டன் ஒரு அர­ச­மைப்பை உரு­வாக்­கும் என்­றும் எம்­ம­வர்­கள் பலர் ஏங்­கித் தவ­மி­ருக்­கின்­ற­னர். ஆனால் அர­ச­மைப்­பில் உள்­ளது ஒற்­றை­யாட்­சியா அல்­லது கூட்­டாட்­சியா? என்ற சொற் பதங்­க­ளி­லும், அது தொடர்­பான குழப்ப நிலை­க­ளி­லும் இருந்து இன்­னும் முழு­மை­யான தீர்வு, தெளிவு கிடைக்­க­வில்லை.

இன­வா­தத்தைத் தமது வாக்கு வங்­கி­யாகக் கொண்­டி­ருக்­கும் கொழும்பு அர­சி­யல் வாதி­கள் பல­ரும், இடைக்­கால அறிக்­கை­யின்­படி அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டால் தமி­ழீ­ழம் உரு­வா­கி விடும் , கொழும்பை விட­வும் மாகாண சபை­க­ளுக்­கான அதி­கா­ரம் அதி­க­ரிக்­கும் என்று கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

இவ்­வா­றான நிலை­யில் இத்­த­கைய இமா­ல­யத் தடை­க­ளைத் தகர்த்து எவ்­வாறு அர­ச­மைப்பு உத­ய­மா­கப் போகி­றது என்­பதே தற்­போ­துள்ள மிகப்­பெ­ரும் கேள்வி.

தன்னை ஆட்­சிப்­பீ­டம் ஏற்­றிய சிறு­பான்மை மக்­கள் குறித்து கூட்டு அரசு கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டும். தனது நிலைப்­பாட்­டில் தமிழ் மக்­க­ளுக்­குச் சாத­க­மான மாற்­றங்­களை கூட்­டு­அ­ரசு ஏற்­ப­டுத்த வேண்­டும்.

You might also like