ரஜினி மன்றத்தில் 50 லட்சம் பேர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினி காந் கடந்த 31ஆம் திகதி தனது அரசியல் வரவை உறு திப்படுத்தியுள்ள நிலையில், அவர் அறிவித்த ரஜினி மன்றத்தில் இதுவரை 50 லட்சம் பேர் தம்மைப் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிக்கு தமிழகம் முழுவதும் 22ஆயிரம் ரசிகர் மன்றங்கள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் உள்ளன. சுமார் 30 ஆயிரம் மன்றங்கள் பதிவுசெய்யப்படாத நிலையில் உள்ளன.

இவை அனைத்தையும் ஒரு குடையில் கொண்டுவரவும் ரஜினி திட்டமிட்டுள்ளார். ரசிகர் மன்றங்களை தனது அரசியல் வருகைக்கு பலமாக ரஜினி பயன்படுத்தவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

You might also like