நடிப்பதற்குச் சிரமப்படுகிறார் நித்யா மேனன்

மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடித்து வரும் பிராணா படத்தில் நித்யா மேனன் சிரமப்பட்டு நடிக்கிறார் என்றுகூறப்படுகிறது.

விஜய் ஜோடியாக நித்யா மேனன் நடிப்பில் கடைசியாக வெளியாகி வரவேற்பை பெற்ற மெர்சல் படத்தைத் தொடர்ந்து நித்யா மேனன் தற்போது, `பிராணா’ மற்றும் `அவ்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியில் தயாராகி வரும் படம் ‘பிராணா’. வி.கே.பிரகாஷ் இயக்கும் இந்த படத்தில், 4 மொழி படங்களுக்கும் தேவையான காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்து வருகிறார்கள்.

இதில் மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் சுலபமாக பேசி நடிக்கும் நித்யாமேனன், இந்தியில் நடிக்கும் போது மட்டும் சிரமப்படுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் தெலுங்கில் உருவாகி வரும் `அவ்’ படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

You might also like