சனியைத் தொடர்ந்து புதன் மாற்றம்! – 12 இராசிகளுக்குமான பலன்கள்!

சனிப்பெயர்ச்சி ஏற்பட்டு விட்டது. அதனைத் தொடர்ந்து புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் விருச்சிக ராசியில் இருந்து தனசு ராசிக்கு ஜனவரி 6ஆம் திகதி முதல் பெயர்ச்சிடைகின்றார்.

சனிப்பெயர்ச்சி பலாபலன்களைப் போலவே இந்த புதனின் பலாபலன்களும் முக்கியமானது காரணம் அறிவிற்கு அதிபதியே புதன் அதன்படி 12 ராசிகளுக்குமாக புதன்பெயர்ச்சி பலாபலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் பணியிடங்களில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். மொத்தத்தில் பணம் வரவு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சினைகள் ஏற்படும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டில் தடைகள் ஏற்படும். சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது. தொழில் தடை, முயற்சிகளில் கவனக்குறைவு ஏற்படும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதன் 8ஆவது இடத்தில் அமர்கிறார். திடீர் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். ரிஷப ராசிக்கு புதன் 2 மற்றும் 5ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பண வருவாய் திருப்தி தரும் பிள்ளைகள் சாதனை நிகழ்த்துவாா்கள்.

மிதுனம்

இந்த ராசிக்கு புதன் 1 மற்றும் 4 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 7வது இடத்தில் உங்கள் ஆட்சி நாதன் புதன் அமர்கிறார். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நிலையிலும், பயணத்திலும் கவனம் தேவை. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிா்க்க வேண்டும். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. பங்குதாரா்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பிரச்சினைகள் தேடிவரலாம்.

கடகம்

கடகத்திற்கு புதன் 3 மற்றும்12 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா் புதன். கடகம் ராசிக்கு 6வது இடத்திற்கு புதன் அமர்கிறார். 6வது இடம் ருண ரோக ஸ்தானம். தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பண வரவு அதிகரிக்கும். சுற்றுலாக்கள் செல்ல வாய்ப்பு ஏற்படும். இது திருப்தியான காலம். புகழும், நற்பெயரும் கிடைக்கும்.சகோதர உதவி கிடைக்கும்.

சிம்மம்

சிம்மத்திற்கு புதன் 2 மற்றும் 11 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். சிம்மம் ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். துணையின் ஒத்துழைப்பு கிடைக்காது. மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள். குடும்பத்தில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு கொண்டிருக்கும். குழந்தைகள் வழியில் செலவினம் அதிகாிக்கும்.

கன்னி

கன்னிக்கு புதன் 1 மற்றும்10 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உங்கள் ராசிநாதன் புதன் அமர்ந்துள்ளார். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். பதவி உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினர் வருகை உண்டு. பணம் வரவு அதிகாிக்கும். செலவுகளும் அதிகாிக்கும். வாகன லாபம் உண்டு. வியாபாரத்தில் வேலைப்பளு அதிகாிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்கு 3வது இடத்தில் அமர்கிறார். துலாம் ராசிக்கு புதன் பகவான் 9 மற்றும் 12ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வேலை விடயமாக வெளிநாடு செல்வதற்கான நேரமாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சினை ஏற்படும். கடன் தொல்லை அதிகாிக்கும். பண வரவு பஞ்சமிருக்காது. தந்தையின் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டும். செலவும் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு புதன் 8 மற்றும் 11ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். இந்த ராசிக்கு 2வது இடத்தில் புதன் அமர்ந்துள்ளார். உற்சாகமான கால கட்டமாகும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. உதவிகள் வந்து சேரும். உடல் நிலையில் கவனம் தேவை. எதிா்பாராத உடல் உபாதை ஏற்படும். அதேபோன்று பொது விவகாரத்தில் கவனம் தேவை.

தனசு

தனசு ராசிக்கு புதன் 7ஆம் மற்றும் 10 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். தனுசு ராசியில் அமரும் புத பகவானால் சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவிகளில் உயர்வு அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். உத்யோகஸ்த்தில் சிலருக்கு கெட்ட பெயா் வரும். வியாபாரத்தில் மதிப்பு கெடும்.

மகரம்

மகர ராசிக்கு புதன் 6மற்றும் 9ஆம் வீடுகளுக்குச் சொந்தக்காரா். 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் அமரும் புதன் பகவானால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோகத்தில் எதிரிகள் சிறு பிரச்சினைகள் ஏற்படும். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் பிரச்னை அதிகாிக்கும். உடல் உபாதை ஏற்படும். நீண்ட நாள் உபாதை அதிக தொல்லை தரும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும்.

கும்பம்

கும்பத்திற்கு புதன் 5 மற்றும் 8 ம் வீடுகளுக்கு சொந்தக்காரா். புதன் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் அமர்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. எதிா்பாா்த்த வகையில் பணவருவாய் உண்டு. திடீர் வாய்ப்பு தேடி வரும். வீட்டில் பொருள் சோ்க்கை ஏற்படும்.

மீனம்

இந்த ராசிக்கு புதன் 4 மற்றும் 7 ஆம் வீடுகளுக்கு சொந்தக்காரா். மீனம் ராசிக்கு 10வது இடத்தில் அமர்கிறார் புதன் பகவான். நிலம், வீடு, வண்டி வாகன சேர்க்கை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு உயர்வு அதிகரிக்கும். இது அற்புதமான இடமாகும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். ஆடை ஆபரணம் சேர்க்கைகளும் அதிகரிக்கும்.

You might also like