கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு பருத்தித்துறையில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும், ஆதரவாளர் ஒன்று கூடல் நிகழ்வும் சற்று முன்னர் பருத்தித்துறையில் ஆரம்பமாகியுள்ளது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.