பேருந்துக் கட்டணங்கள் ஜூலை முதல் உயரும்

வருடாந்த பஸ் கட்டண திருத்தத்துக்கு அமைவாக எதிர்வரும் ஜூலை மாதத்தில் இருந்து, பஸ் கட்டணம் 6.5 வீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பிலான விசேட கலந்துறையாடல் ஒன்று எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெற உள்ளது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

You might also like