சதொச ஊழி­யர்­களை பங்­கா­ள­ராக்­கத் திட்­டம்- றிசாத்

அர­சுக்­குச் சொந்­த­மான சதொச நிறு­வ­னத்­தில் அதன் ஊழி­யர்­க­ளை­யும் பங்­கா­ள­ராக்கி அதனை மேலும் முன்­னேற்­று­வ­தற்கு உத்­தே­சித்­துள்­ளோம். அனு­மதி கிடைத்­த­வு­டன் இந்த நட­வ­டிக்­கையை நாம் மேற்­கொள்­வோம். இவ்வாறு கைத்­தொ­ழில், வர்த்­த­கத்­துறை அமைச்­சர் றிசாத் பதி­யு­தீன் தெரி­வித்­தார்.

மன்­னார் – அடம்­ப­னில் நேற்­று­முன்­தி­னம் மாலை சதொச நிறு­வ­னத்­தின் கிளை திறந்­து­ வைக்­கப்­பட்­டது. இந்த நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சதொச நிறு­வ­னத்தை நாம் பொறுப்­பேற்­ற­போது 1.5 பில்­லி­யன் மாத வரு­மா­னமே இருந்­தது. தற்­போது கடந்­த­வ­ருட இறு­திக் கணக்­கெ­டுப்­பின் படி 3.5 பில்­லி­ய­னாக அது அதி­க­ரித்­துள்­ளது. 300 மில்­லி­யன் நட்­டத்­தில் இயங்­கிய சதொச நிறு­வ­னத்தை இன்று இலா­ப­மீட்­டும் நிறு­வ­ன­மாக மாற்­றி­யுள்­ளோம்.

ஒரு பிர­தே­சத்­தில் சதொச நிறு­வ­னத்தை ஆரம்­பித்­தால் அங்­குள்ள வியா­பா­ரி­ கள் கவ­லை­ய­டை­கின்­ற­னர்; வாடிக்­கை­யா­ளர்­கள் மகிழ்ச்­சி­ய­டை­கின்­ற­னர். இது சக­ஜ­மா­னதே.

மக்­க­ளின் நன்மை கரு­தியே அத்­தி­ யா­வ­சி­யப் பொருள்களை சதொச நிறு­வ­னத்­தின் ஊடாக,வழங்கி வரு­கின்­றோம்.நாட்­டில் ஏற்­பட்ட வறட்சி கார­ண­மாக அரி­சி­யின் விலை வெளி­யி­டங்­க­ளில் 100 ரூபா­வரை அதி­க­ரித்­துள்­ளது. தேங்­காய் உற்­பத்­தி­யி­லும் பெரும் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளது.

எனி­னும், சதொச நிறு­வ­னம் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து அரி­சியை இறக்­கு­மதி செய்து பாவ­னை­யா­ளர்­க­ளுக்குத் தட்­டுப்­பா­டின்றி விநி­யோ­கித்து வரு­கின்­றது. அந்­த­வ­கை­யில், நாட்­ட­ரி­சியை 70 ரூபா­வுக்­கும், பொன்னி அரி­சியை 71 ரூபா­வுக்­கும் பெற்­றுக்­கொள்ள முடி­யும். தேவை ஏற்­ப­டின் தனி­யார் வியா­பா­ரி­க­ளுக்­கும் 24 மணி­நே­ரத்­துக்­குள் அரி­சியை விநி­யோ­கிக்க முடி­யும்.

அரசு மாட்­டுமே மேற்­கொண்­டு­வந்த அரிசி இறக்­கு­ம­தியை, தனி­யா­ரும் செய்­யும் வகை­யில் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளோம். எதிர்­வ­ரும் மார்ச் மாதம் 31ஆம் திக­தி­வரை இது நடை­மு­றை­யில் இருக்­கும்.

நாம் இந்த நிறு­வ­னத்­தைப் பொறுப்­பேற்­கும்­போது, நாட­ளா­வி­ய­ரீ­தி­யில் 300 கிளை­களே இருந்­தன. நாளை (நேற்று) கொழும்­பில் தலைமை அமைச்­ச­ரால் 400ஆவது கிளை திறக்­கப்­ப­டு­கி­றது. நவீன வச­தி­க­ளு­டன்கூடிய 45 கிளை­க­ளில இது முத­லா­வது கிளை­யா­கும்.

ஒரு காலத்­திலே சதொச நிறு­வ­னத்தை மூட­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை இருந்­தது. ஆனால் கடந்த இரண்டு வரு­டங்­க­ளில் பெரும் மற்­றங்­களை நாங்­கள் மேற்­கொண்­டுள்­ளோம். அனைத்­துக் கிளை­க­ளுக்­கும் கணினி வச­தி­கள் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன. சீ.சீ.டிவி. கரு­வி­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. ஊழி­யர்­க­ளின் நலன்­கள் பாது­காக்­கப்­ப­டு­கின்­றன.

நாட­ளா­விய ரீதி­யில் சுமார் 4௦௦௦ ஊழி­யர்­கள் இந்த நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி­கின்­ற­னர். அடுத்­த­வ­ருட இறு­திக்­குள் 500 கிளை­களை நாங்­கள் நிறு­வு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ளோம்.
எனவே, சதொச ஊழி­யர்­கள் மிக­வும் நேர்­மை­யா­க­வும் – கட­மை­யு­ணர்­வு­ட­னும் – பொறுப்­பு­ட­னும் செயற்­ப­ட­வேண்­டும். இதன் மூலமே இந்த நிறு­வ­னத்தை மேலும் கட்­டி­யெ­ழுப்ப முடி­யும் -– என்­றார்.

You might also like