தர­மற்ற களை­நா­சினி அதி­க­ வி­லை­யில் உரம் !

மாந்தை விவ­சா­யி­கள் பாதிப்பு

மன்­னார் -–மாந்தை மேற்­குப் பிர­தே­சத்­தில் தர­மற்ற களை­நா­சி­னி­கள் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன. மானி­ய­விலை உர­வ­கை­க­ளும் அதி­க­ரித்த விலைக்கு விற்­கப்­ப­டு­கின்­றன. இத­னால் நாம் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றோம்.இவ்வாறு விவ­சா­யி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

இது­தொ­டர்­பாக விவ­சா­யி­கள் தரப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

நெல்­வ­யல்­க­ளில் வள­ரும் களை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தவே களை­நா­சி­கள் விசி­றப்­ப­டு­கின்­றன. ஆனால் இப்­பி­ர­தே­சத்­தில் களை­நா­சி­னி­கள் விசி­றி­யும் பய­னில்லை. நெற்­ப­யி­ருக்கு மேலா­கக் களை­கள் மேலோங்கி வள­ரு­கின்­றன. இதற்கு களை­நா­சி­னி­கள் தர­மற்­ற­வை­யாக இருப்­பதே கார­ணம். வயல்­க­ளில் புல் மற்­றும் ஏனைய களை­கள் வளர்­வ­தைக் கட்­டுப்­ப­டுத்த குறிப்­பிட்ட வகைக் களை­நா­சி­னி­யைப் பயன்­ப­டுத்­து­கின்­றோம்.

ஆயி­னும் வயல்­க­ளில் களை­களை அழிக்­க­மு­டி­ய­வில்லை. இப்­பி­ர­தே­சத்­தில் உள்ள அனைத்து விவ­சா­யி­க­ளும் இந்­தப் பிரச்­சி­னைக்கு முகம்­கொ­டுத்­துள்­ள­னர். தண்­ணீர் மற்­றும் ஏனைய பல பிரச்­சி­னை­க­ளுக்கு மத்­தி­யில் கட­னைப் பெற்று விவ­சா­யத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றோம். ஆனால் எமக்கு இறு­தி­யில் ஏமாற்­றமே மிஞ்­சு­கின்­றது. விவ­சா­யி­க­ளுக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட விலை­யில் தர­மான களை­நா­சி­னி­களை வழங்­கும் திட்­டத்தை அரசு நடைமுறைப்ப­டுத்த வேண்­டும்.

அதே­நே­ரம் களை­நா­சினி விசி­றிய சில தினங்­க­ளில் வயல்­க­ளுக்கு உரம்­போட வேண்­டும். எனி­னும், இங்கு உரத்­துக்­கும் பெரும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு வந்­த­வு­ட­னேயே உரம் முடி­வ­டைந்து விடு­கின்­றது. குறிப்­பிட்ட அளவு உரமே கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது. இத­னால் அவ­ச­ரத் தேவை­க­ளுக்கு உரத்­தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யா­த­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஒரு மூடை உரத்­தின் நிர்­ன­யிக்­கப்­பட்ட விலை 2,500 ரூபா­வா­கும். ஆனால் இப்­பி­ர­தே­சத்­தில் மூவா­யி­ரம் ரூபா­வரை விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கின்­றது. இத­னால் பெரும் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றோம். மானிய அடிப்­ப­டை­யில் 2,500 ரூபா­வுக்கு உரம் வழங்­கப்­ப­ட­வேண்­டும். ஆனால் மூவா­யி­ரம் ரூபா­வுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றது.

உர­மா­னி­யம் வழங்­கப்­பட்­டுள்­ள­ போ­தும் அதனை அதி­க­ரித்த விலைக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றமை தொடர்­பில் அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.

எனவே, களை ­நா­சினி விவ­கா­ரம் மற்­றும் அதி­க­ரித்த விலை­யில் உரம் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றமை தொடர்­பில் உரிய அதி­கா­ரி­கள் கவ­னம் செலுத்­த­வேண்­டும். விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு விரை­வா­கத் தீர்­வு­பெற்­றுத் தர­வேண்­டும் – என்­ற­னர்.

You might also like