வட்டுவாகலில் இறால் சீசன் ஆரம்பம்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் வட்­டு­வா­கல் மற்­றும் நாயாற்­றுப் பகுதி ஆற்­றுத்­தொ­டு­வா­யில் இறால் பிடிக்­கும் பருவம் தொடங்­கி­யுள்­ளது. மீன­வர்­கள் இரவு பக­லாக இறால் பிடிக்­கும் தொழி­லில் ஈடு­பட்­டி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

வட்­டு­வா­கல், நந்­திக்­க­டல் ஏரி­க­ளில் பிடிக்­கப்­ப­டும் இறால்­க­ளுக்கு மக்­கள் மத்­தி­யில் தனிக்­கி­ராக்கி உண்டு. ஆனால் இப்­போது அவற்றை மக்­க­ளால் ருசிக்க முடி­ய­வில்லை. கார­ணம் வெளி­நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­வ­தற்­காகக் கொண்­டு­செல்­லப்­ப­டு­கின்­றன.

இந்­த­நி­லை­யில், மாவட்­டத்­தி­லுள்ள களப்­பு­க­ளில் இறால் மற்­றும் மீன்­பி­டித் தொழில் செய்­ய­வ­தற்கு அனு­மதி பெற்­றுக்­கொள்­ள­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது என்று மாவட்ட கடற்­ழிறொழில் அமைப்­பு­க­ளின் தலை­வர் ஜெயா தெரி­வித்­துள்­ளார்.

நந்­திக்­க­டல் களப்­பினை நம்பி ஜயா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் வாழ்­கின்­றன. இப்­போது இறால்­பிடி பருவம் (சீசன்) தொடங்­கி­யுள்­ளது. பலர் இரவு பக­லாக தொழில் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டுட்டு வரு­கின்­ற­னர்.

எனி­னும் தொழில்­செய்­யும் அனை­வ­ரும் தங்­க­ளைக் கட்­டா­யம் பதி­வு­செய்­ய­வேண்­டும். அத்­து­டன் தடை­செய்­யப்­பட்ட வலை­க­ளைப் பயன்­ப­டுத்தி மீன்­பி­டி­யில் ஈடு­ப­டக்­கூ­டாது. அவ்­வாறு ஈடு­பட்­டால் அவர்­கள் மீனவ அமைப்­பு­க­ளின் உரிய பிர­தி­நி­திக­ளால் கைது­செய்­யப்­ப­டு­வார்­கள் – என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

You might also like