கால­தாம­தம் இல்­லாது விரைந்து செய­லாற்­றுங்­கள்!

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வரு­டத்­தின் இறு­தி­யில் கூறி­ய­தைப்­போல, அவ­ரது வாள் வீச்சு எந்த ஒரு­வ­ரை­யும் நேர­டி­யாக வெட்டி வீழ்த்­தா­தமை எதிர்க்­கட்­சி­க­ளின் கடு­மை­யான விமர்­ச­னத்துக்கு உள்­ளா­கி­யுள்­ளது. மத்­திய வங்­கி­யின் பிணை­மு­றி­களை விற்­பனை செய்­வ­தில் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­பட்ட ஊழல் தொடர்பான விசா­ரணை ஆணைக்­கு­ழு­வின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் இந்த அரசு ஆபத்­துக்கு உள்­ளா­கும் என்று எதிர்­பார்த்­தி­ருந்த எதிர்க் கட்­சி­கள், ஏமாற்­றம் அடைந்­தி­ருக்­கின்­றமை வெளிப்­ப­டை­யா­கவே தெரி­கின்­றது. அதே­ச­ம­யம், இந்த அறிக்­கை­யின் மீது மக்­க­ளி­டம் இருந்த எதிர்­பார்ப்­பும் திருப்­தி­க­ர­மாக நிறை­வேற்­றப்­பட்­ட­தாக இல்லை என்­ப­தைச் சொல்­லித்­தான் ஆக­வேண்­டும்.

இன்­றைய அர­சும், அதன் தலை­வர்­க­ளும் வாய்ச் சொல்­லில் பெரும் வீரர்­கள். ஆனால் நட­வ­டிக்கை என்று வரும்­போது ஆமை போன்று தலையை உள்ளே இழுத்­துக்­கொண்டு பதுங்­கி­விட்­டுப் பின்­னர் மெல்ல மெல்­லத்­தான் முன்­னே­று­வார்­கள். ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றிய தீர்­மா­ன­மாக இருந்­தால் என்ன, புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் பணி­யாக இருந்­தால் என்ன, தமி­ழர்­க­ளுக்கு வாக்­கு­றுதி வழங்­கி­ய­தைப் போன்று காணி­க­ளை­வி­டு­விப்­பது மற்­றும் அர­சி­யல் கைதி­களை விடு­விப்­பது போன்­ற­ன­வாக இருந்­தால் என்ன எப்­போ­தும் இது­போன்­றே­தான் நடந்து வந்­தி­ருக்­கி­றது. இப்­போது மத்­திய வங்கி பிணை முறி விவ­கா­ரத்­தி­லும் அது­வே­தான் நடந்­தி­ருக்­கி­றது.

ஆணைக்­கு­ழு­வின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யில், அரச தலை­வர் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுப்­பார் என்­கிற எதிர்­பார்ப்பு மேலோங்­கி­யி­ருந்­தது. அதற்­கேற்­றாற்­போல ஆர்­வத்­தைத் தூண்­டும் வீர வச­னங்­களை அரச தலை­வ­ரும் பேசி வந்­தார். இறு­தி­யில் அறிக்­கை­யில் கூறப்­பட்ட முக்­கி­ய­வி­ட­யங்­க­ ளை­யும், பரிந்­து­ரை­க­ளில் முக்­கி­ய­மா­ன­வற்­றை­யும்­கூ­றி­விட்டு சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளி­கள் மீது விரை­வில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று முடித்­துக்­கொண்­டார் அரச தலை­வர்.

இதே­போன்­று­தான், தேர்­தல் காலத்­தில், இதோ செய்­து­வி­டு­வோம், அதோ செய்­து­வி­டு­வோம் என்று தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளை­யும் அவர் நிறை­வேற்­றி­ய­தில்லை அல்­லது ஆரம்­பித்­து­விட்டு நிறுத்­தி­வி­டு­வார். பன்­னாட்­டுச் சமூ­கத்துக்கு வழங்­கிய வாக்­கு­றுதிகளின் நில­மை­யும் அது­தான். இப்­போ­தும் பெரும் ஆர்ப்­பாட்­டத்­து­டன் ஆரம்­பித்த விட­யத்தை “விரை­வில் நட­வ­டிக்கை” என்ற சொல்­லின் ஊடா­கத் தள்­ளிப்­போட்­டு­விட்­டார். இனி எப்­போ­தா­வது அது நடக்­கும் வரை­யில் மக்­கள் காத்­தி­ருக்­க­வேண்­டும்.

ஆணைக்­கு­ழு­வின் அறிக்­கை­யில், மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நர் அர்­ஜூன் மகேந்­தி­ரன் முறை­கே­டான தொடர்­பு­கள் மூலம் பிணை­முறி விற்­ப­னை­யில் அர­சுக்கு ஏற்­பட்ட இழப்­பு­க­ளுக்கு முழுப் பொறுப்­பா­ன­வர் என்று கூறப்­பட்­டுள்­ளது. அவ­ரது மரு­ம­க­னான அலோ­ஸி­யஸ் மகேந்­தி­ர­னின் குடும்ப நிறு­வ­னம், அவ­ரது உத­வி­யு­டன் 11.1 பில்­லி­யன் ரூபாவை வரு­மா­ன­மாக ஈட்­டி­யுள்­ளது என்­றும், இதன் மூலம் அர­சுக்கு ஏற்­பட்ட இழப்­பைத் திரும்­பப் பெறு­வ­தற்கு பொதுச் சட்­டங்­கள் மற்­றும் குற்­ற­வி­யல் சட்­டங்­க­ளில் கீழ் அந்த நிறு­வ­னத்­திற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்­றும் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. 1,527 பக்­கங்­க­ளைக் கொண்ட இந்த அறிக்கை பரிந்­து­ரை­க­ளை­யும் பின்­னி­ணைப்­புக்­க­ளை­யும்­கூ­டக் கொண்­டது.

மகேந்­தி­ரனை நம்­பியே, தான் செயற்­பட்டதாக தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சொன்­ன­தும், பிணை­முறி மோசடி குறித்து விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட நாடா­ளு­மன்­றக் குழு தனது அறிக்­கை­யில் மகேந்­தி­ரனே பொறுப்­பாளி என்று கூறி­ய­தன் பின்­ன­ரும் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­காது தவிர்த்­த­தும் தவ­றா­னவை என்­றும் ஆணைக்குழு கூறி­யி­ருக்­கி­றது. முன்­னாள் நிதி அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க அலோ­சி­யஸ் மகேந்­தி­ர­னின் நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மான வீட்­டில், அந்த நிறு­வ­னம் செலுத்­தி­வந்த வாட­கை­யில் தங்­கி­யி­ருந்­தமை லஞ்ச ஊழல் சட்­டங்­க­ளில் கீழும், ஆணைக்­கு­ழு­வின் முன்­பா­கப் பொய் கூறி­ய­மைக்­காக குற்­ற­வி­யல் சட்­டங்­க­ளின் கீழும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்­றும் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

இதன்­படி அர்­ஜூன் மகேந்­தி­ரன், அலோ­சி­யஸ் மகேந்­தி­ரன் மற்­றும் அவ­ரது நிறு­வ­னம், ரவி கரு­ணா­நா­யக்க போன்­றோ­ருக்கு எதி­ராக நீதி­மன்­றத்­தில் வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­ப­ட­வேண்­டும். இத­னைச் செய்­வ­தாக அரச தலை­வர் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ள­போ­திலும், எவ்­வ­ளவு காலத்­திற்­குள் அது மேற்­கொள்­ளப்­ப­டும் என்று காலக்­கெடு எது­வும் தெரிவிக்­கப்­ப­ட­வில்லை.

அறிக்கை சட்ட மா அதி­ப­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்டு, மேற்­கொண்டு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு மட்­டுமே அரச தலை­வர் கேட்டுக்­கொண்­டி­ருக்­கி­றார். ஏற்­க­னவே மகிந்­த­வுக்க எதி­ரான லஞ்ச, ஊழல், மோசடி வழக்­கு­க­ளில் சட்ட மா அதி­பர் திணைக்­க­ளம் கால தாம­தங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றது என்­கிற குற்­றச்­சாட்­டுப் பல­மாக எழுப்­பப்­பட்­டு­வ­ரும் நிலை­யில், இந்த விவ­கா­ரத்­தில் மட்­டும் அது விரை­வாக நடக்­கும் என்று நம்­பு­வ­தற்­குப் போதிய ஆதா­ரங்­கள் எவை­யும் இல்லை.
கடந்த காலப் பட்­ட­றி­வு­க­ளைக் கொண்டு, இந்த விட­யத்­தி­லும் கால தாம­தங்­கள் நிக­ழா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்தி, விரை­வான நட­வ­டிக்கையை அரச தலை­வர் உறு­திப்­ப­டுத்த வேண்­டும்.

You might also like