புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்போர் வடக்கு மற்றும் தெற்கின் கடுங்கோட்பாட்டாளர்களே!
நாட்டில் முன்னைய காலகட்டம் போலன்றி, இன்று அரசியல் ரீதி யில் புதிய நிலைப்பாடொன்று உருவாகியுள்ளது. இன்று நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் இரண்டு, தம்முடையே ஒன்றிணைந்து நாட்டை நிர்வகித்து வருகின்றன. நாட்டின் தமிழ் மக்களைப் பிரதிநிதித்து வப்படுத்தும் கட்சிகளும் இந்த அரசமைப்பு மாற்றத்தை விரும்பு கின்றன. ஜே.வி.பி போன்ற கட்சிகளும் இந்த விடயம் தொடர்பாக சாதகமான விதத்திலேயே அணுகுக।ின்றன. இத்தகைய பின்னணி காரணமாகவே, நாடாளுமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட முடிந்தது.
அது அரசமைப்பு உருவாக்கச் சபையொன்றை நிறுவுவ தற்கான ஒன்றல்ல. உண்மையில் உருவாக்கப்பட்டிருப்பது அரசமைப்புச்சபையே. இது சகல நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சபையாகும். அது நாடாளுமன்ற வளாகத்தில் மட்டுமே கூடிக் கலையும். அதற்கு அரசமைப்பை உருவாக்கும் அதிகாரம் கிடையாது. அரசமைப்புத் தொடர்பான பிரேரணை யொன்றை மட்டுமே அதனால் உருவாக்க இயலும்.
இது அரசமைப்பு விரோத நடவடிக்கையென நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்ததாக அறிய வந்துள்ளது. அவர் முன்னர் நீதி அமைச்சராகப் பணிபுரிந்தவர் என்பதுடன் அவரொரு அரச தலைவர் சட்டத்தரணியுமாவார். நாடாளுமன்றத்தில் அத்தகைய பிரேரணைய முன்வைத்தவர்களில் விஜேதாச ராஜபக்சவும் ஒருவராவார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் குறித்த அரசமைப்புச் சபை தொடர்பான நிபுணர்களை நியமித்தமை, அதற்கான உறுப்பினர்களை நியமித் தமை, என்ற சகல செயற்பாடுகளையும் முன்னின்று ஆற்றி முடித்தவர் இந்த விஜேதாச ராஜபக்சவே. உப குழுக்களது தலைமைப்பதவிகள் வெவ்வேறு கட்சிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அரச நிதிச் செயற்பாடுகள் தொடர்பான தலைமைப் பதவியை வகிப்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தனா ஆவார்.
ஆறு விடயங்கள் தொடர்பாக முடிவு மேற்கொள்ளப்பட்டது
நடவடிக்கைக்குழு ஆறு விடயங்கள் தொடர்பில் முடிவுகளை மேற்கொண்டது. ஒரு அரசின் இயற்கைத்தன்மை, நிறைவேற்று அதிகாரத்தின் இயற்கைத்தன்மை, அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பான இயற்கைத்தன்மை, தேர்தல் நடைமுறை, மதங்களது பிரிவு மற்றும் இடம் போன்ற விடயம் என்பவையே அந்த ஆறு விடயங்களுமாகும். இவை தொடர்பான கலந்துரையாடல்களின்போது பல விடயங்களில் இணக்கம் எட்டப்பட்டது. ஆனால் பல கட்சிகள் தத்தமது கருத்துக்களை வௌிப்படுத்த முயன்றன. அதற்கான வாய்ப்புக் கிட்டி யதாலேயே அவை அவ்விதம் முயற்சித்தன. இன்று அமைதியான வழியில் எவ்வித அழுத்தங்களையும் மேற்கொள்ளாது இணக்கப்பாட்டை எட்டுவதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.
அதிகாரப் பகிர்வு தொடர்பான ஆலோசனைகளில் பெரும்பாலானவை முதலமைச்சர்களினதே
இரண்டு விடயங்கள் குறித்து நான் இந்த வேளையில் குறிப்பிட்டாக வேண்டும். அவற்றில் முதலாவது, அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயமாகும். அதிகாரப்பகிர்வு தொடர்பான ஆலோசனைகளில் பெரும்பாலானவை தென்பகுதியின் ஏழு மாகாண சபைகளது முதலமைச்சர்களால் முன்வைக்கப் பட்ட கருத்துக்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த ஏழுபேருமே சுதந்தி ரக்கட்சி யைச் சேர்ந்தவர்களாவார்.
இந்த நாட்டில் அதிகாரப்பகிர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 30 ஆண்டுகள் காலம் கழிந்துள்ளது.
இந்த 30 ஆண்டுகள் கால அனுபவங்களையும் கருத்தில் எடுத்தே, இந்தநடவடிக்கை முன்னெ டுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசியப்பிரச்சினைக்கான தீர்வாக மட்டும் அவர்கள் இதனைக் கருதிக் கருத்துக்களை முன்வைத்திருக்கவில்லை. தத்தமது நிர்வாகத்தின் கீழ் வரும் மாகாண சபைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்தே அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
சகல அரசுகளும் ஏற்கனவே வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்கே ஆர்வம் காட்டிச்செயற்பட்டுள்ளன. அவ்விதம் அதிகாரங்களை மீளப் பெற வேண்டுமானால் அரமைப்பில் மாற்றம் மேற்கொண்டாக வேண்டும். ஆனால் எமக்கு அத்தகைய அனுபவம் எதுவும் வாய்த்திருக்கவில்லை. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச்சட்டம் என சட்டமொன்று இருப்பது குறித்து நாம் அறிந்துள்ளோம். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தத்தமது பகுதிகளின் பஸ்சேவைகளை நடத்த இயலுமென அரசமைப்பு விதிகள் தெரிவிக்கின்றன. அது அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதொரு விடயம். ஆனால் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச்சட்டத்தில் அத்தகைய எற்பாடு எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
பிரச்சினைகளுக்கு முதலமைச்சர்களும் முகம் கொடுக்க நேர்கிறது
தேசிய கொள்கைத் தி்ட்டமொன்றை வகுப்பதற்கு அரசமைப்பு உருவாக்கற் சபை அதிகாரம் கொண்டுள்ளது. அதற்கமையவே மாகாண சபைகளது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டுமெனச் சட்டம் உள்ளது. ஆனால் தேசிய கொள்கைத்திட்டம் என்ற ரீதியில் மாகாண முதலமைச்சர்களையும் மீறி மேற்சென்று அதிகாரிகள் அத்தகைய அறிவுறுத்தல்களை அனுமதிக்கும் நிலைப்பாடு நிலவுவது அனுபவ ரீதியாக இடம்பெறுமொன்று, இத்தகைய பிரச்சினைகளுக்கு முதலமைச்சர்களும் முகம் கொடுக்க நேர்கிறது. அதாவது அவர்களுக்கான அதிகாரங்கள் உரிய வகையில் வரையறுத்து வழங்கப்பட வேண்டுமென்ற கருத்து அவர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
தேசிய கொள்கைத்திட்டமொன்றை வகுப்பது குறித்து எவருக்கும் ஆட்சேபனை இருக்க இயலாது. தங்களது கருத்துக்களையும் உள்வாங்கி அத்தகைய திட்டங்களை வகுக்குமாறே அவர்கள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தால் சட்டங்களை உருவாக்க இயலும். அவற்றை மாகாண சபைகள் விரும்பவில்லை யாயினும், அதற்கான மூன்றில் இரு மடங்கு ஆதரவு இருக்குமானால் மட்டுமே நாடாளுமன்றத்தால் அவற்றைச் சட்டமாக நிறைவேற்றிட இயலும். அத்தகைய சட்டங்கள் மூலம் உருவாக்கும் அதிகாரங்களை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டாம்; அவற்றை நடைமுறைப்படுத்துமாறே மாகாண முதலமைச்சர்கள் கோருகின்றனர்.
ஆளுநரை நியமிக்கவென அரச சேவை ஆணைக்குழு அமைக்க யோசனை முன்வைப்பு
இ்ன்றைய காலகட்டத்தில் ஆளுநர் பதவி தொடர்பாக பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் கீழ் தற்போது கூட ஆளுநர் பதவ।ி ஒரு அதிகாரம் குறைந்த பதவியாகும். இதனாலேயே அதிகாரத்தில் மாற்றம் செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் தீர்ப்புக்களை மேன்முறையீட்டின் மூலம் மாற்றம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருந்து வந்தது. அந்த அதிகாரத்தை கட்டுப்பாடற்றதாக்கும் யோசனையே முன் வைக்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சபையின் பரிந்துரைக்கமைய, ஆளுநரொருவரை நியமனம் செய்யும் அரசசேவை ஆணைக்குழுவொன்றை உருவாக்கும்யோசனையொன்று எனவும் இதனை அடையாளப்படுத்த முடியும். இதனை எவராவது 13 பிளஸ் எனக் கூறுவாரானால் அதில் பிளஸ் இருப்பதாகக் கொள்ளமுடியும். ஆயினும் அது பரந்துபட்ட பெரியதொரு ‘பிளஸ்’ ஆகமாட்டாது.
ஆனால் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் தலைதூக்கும் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வதற்கான யோசனையே இதன் மூலம் முன் வைக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அரச தலைவர் நடைமுறை முற்று முழுதாக ஒழிக்கப்படவேண்டுமென்றே யோசனைக்கு நான் ஆதரவான நபர். அது நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறத்தக்கதொன்றாக அமைய வேண்டும். அது தொடர்பாக மூன்று யோசனைகள் உள்ளன. அரச தலைவர் பதவி எந்த விதத்தில் நிரப்பப்படவேண்டும் என்பது அவற்றில் முதலாவதானது. அதாவது தேர்தலின் பின்னர் அதி ஆதரவு பெற்றுள்ளவர் யார் என்பது தொடர்பானது. மற்றையது, கட்சி மூலமாக தேர்தலுக்கு முன்பதாகவே ஒருவரது பெயரை நிர்ணயித்தலாகும். மூன்றாவது நடைமுறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மூலம் பிரதம அமைச்சரை நேரடியாகத் தெரிவுசெய்தலாகும்.
இத்தகைய யோசனைகள் முன்வைக்கப் பட்டதன் காரணமாகவே நிறைவேற்று அரச அதிபர் நடைமுறை குறித்துச் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
நிறைவேற்று அரச அதிபர் பதவியென ஒரு பதவி உலகத்தில் வேறெங்குதானும் இல்லை. 1947 ஆம் ஆண்டின் மற்றும் 1972 ஆம் ஆண்டின் அரசமைப்புக்கள் நடைமுறையில் இருந்தபோதோ இதுபற்றி எவராவது கருத்து வௌியிட்டனரா? இந்தப் புதிய அரசமைப்பின் மூலம் தலைதூக்கும் மற்றொரு விடயம் தான், தனிப்பட்ட நபர்களது நலனைக்கணக்கில் எடுத்து இந்த அரசமைப்பு உருவாக்கப்படுகிறது என்பதாகும். சிலர் இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்க முயல்வதாக விமர்சிக்கின்றனர். ஆனால் தற்போதைய அரச தலைவரது பதவிக்காலத்துள் அவருக்குரிய அதிகாரங்களில் – இடையில் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட் டாலும் கூட, – 2020 ஆம் ஆண்டுவரை எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்பதாகும்.
அரசமைப்பு, என்பது மேற்குறிப்பிட்ட அம்சங்கள் கொண்டது என்பது மட்டுமல்லாது மேலும் பல அம்சங்கள் அதில் அடங்கியுள்ளன. குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுப்பத்தப்படாது, சமூக உரிமைகள் தொடர்பான விடயங்களே அவை. இன்றைய உலக நடப்பில் காணப்படும் முக்கிய அம்சங்களே அவை.
பெண்கள் உரிமைகள், சிறுவர்களுக் கான உரிமைகள், நாட்டின் குடிமக்க ளுக்கான உரிமைகள், சுற்றுச் சுழல் பாதுகாப்பு।த் தொடர்பான உரிமைகள் என்பனவும் அத।ில் அடங்கியுள்ளன. எமக்குத் தேவையான பரிபூரணமான அரசமைப்பொன்றை எம்மால் உருவாக்க இயலாது போகலாம். ஆனால் இன்று எம்மால் செய்யக்கூடியதை நாம் செய்தே ஆக வேண்டும். இன்று அரச தரப்பில் போன்றே, எதிர்த்தரப்பினர் மத்தியிலும் புதிய அரசமைப்புக்கான ஆதரவுண்டு. தென்பகுதி மற்றும் வடபகுதியைச் சேர்ந்த கடுங்கோட்பாளர்கள் தரப்புக்களே புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. எம்மால் புதிய அரசமைப்பை உருவாக்க இயலாது போகுமானால், மேற்குறித்த கடுங்கோட்பாட்டுத்தரப்பினரே பலமடைவர்.