அப்­ப­டியே சாப்­பி­ட­லாம்

ஜப்­பா­னின் ஓக­யா­மா­வைச் சேர்ந்த விவ­சா­யி­கள், வித்­தி­யா­ச­மான வாழைப்­ப­ழத்தை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றார்­கள். ‘மோங்கே’ என்ற இந்த வாழைப்­ப­ழம், மற்ற வாழைப் பழங்­களை விட மிக­வும் சுவை­யா­னது என்­ப­து­டன், இதன் தோலை­யும் சாப்­பி­ட­மு­டி­யும்.

சாதா­ரண வாழைப்­ப­ழங்­க­ளின் தோலில் கசப்­புச் சுவை அதி­க­மாக இருக்­கும். ஆனால் மோங்கே வாழை­யின் தோல் மிக மெல்­லி­ய­தா­க­வும் மிகக் குறை­வான கசப்­பு­ட­னும் காணப்­ப­டு­கி­றது. நூறு சத­வீ­தம் இந்­தத் தோலைச் சாப்­பிட முடி­யும் என்­கி­றார்­கள் உற்­பத்­தி­யா­ளர்­கள். இந்த வாழையை ‘உறைய வைத்து வளர்த்­தல்’ என்ற முறை­யில் உரு­வாக்­கு­கி­றார்­கள். இது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆண்­டு­க­ளுக்கு முன்பு இருந்த முறை.

மோங்கே வாழை 4 மாதங்­க­ளி­லேயே முதிர்ச்­சி­ய­டைந்து விடு­கி­றது. கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் மோங்கே வாழைப்­ப­ழம் கடை­க­ளில் விற்­ப­னைக்கு வந்­து­விட்­டது. ஆனால் ஒரு சிலரே வாங்கி, சுவைக்க முடிந்­தது. கார­ணம் இந்த வாழைப்­ப­ழத்தை அதிக அள­வில் விளை­விக்க முடி­ய­வில்லை. ஒரு பழத்­தின் விலை இலங்கை மதிப்­பில் ஆயி­ரத்து 50 ரூபா.
‘‘வாழைப்­ப­ழம் பற்­றிய கருத்­து­களை அறி­வ­தற்­காக எங்­க­ளுக்­குச் சில வாழைப் பழங்­க­ளைக் கொடுத்­த­னர். மற்ற வாழைப் பழங்­களை விட மோங்கே மிக­வும் சுவை­யா­னது.

சாதா­ரண வாழைப் பழத்­தில் 18.3 கிராம் சர்க்­கரை இருக்­கும், மோங்­கே­யில் 24.8 கிராம் சர்க்­கரை இருக்­கி­றது. மணம் அதி­க­மாக இருக்­கி­றது. அன்­னா­சிப் பழத்­தின் சுவையை நினை­வூட்­டு­கி­றது.

மிகச் சரி­யா­கப் பழுத்­தி­ருந்­தால் மட்­டுமே தோலை­யும் சேர்த்து உண்ண முடி­யும். சாதா­ரண வாழைப் பழங்­க­ளில் பழுப்பு நிறப் புள்­ளி­கள் தோன்­று­வ­தற்கு முன்பே சாப்­பிட்­டு­விட வேண்­டும். ஆனால் மோங்­கே­யில் பழுப்­புப் புள்­ளி­கள் வந்த பிற­கு­தான் சாப்­பி­ட­மு­டி­யும். மெல்­லிய தோலாக இருப்­ப­தால் பழத்­து­டன் சேர்த்து எளி­தாக மென்று விழுங்­கி­விட முடி­கி­றது. தோலின் சுவை கூட நன்­றாக இருக்­கி­றது’’ என்று மோங்கே வாழை­யின் உற்­பத்தி நிறு­வ­னங்­கள் கருத்­தத் தெரி­வித்­துள்­ள­னர்.

You might also like