நரேந்திர மோடிக்கான நெத்தன்யாகுவின் பரிசு

தனது இந்­தியச் சுற்­றுப் ப­யணத்­தின்­போது, இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடிக்கு கடல் நீரை குடி­நீ­ராக்­கும் வாக­னத்தை பரி­சாக வழங்க இஸ்­ரேல் தலைமை அமைச்­சர் நெதன்­யாகு திட்­ட­மிட்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நரேந்­திர மோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இஸ்­ரே­லுக்­குச் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்­டார். அப்­போது, அங்­குள்ள ஓல்கா கடற்­க­ரை­யில் அமைந்­துள்ள கடல் நீர் சுத்­தி­ க­ரிப்பு நிலை­யத்தை நெதன்­யா­கு­வு­டன் இணைந்து மோடி பார்­வை­யிட்­டார்.

கடல் நீரை குடி­நீ­ராக்­கும் வாக­னத்­தில் பய­ணம் செய்­த­ப­டியே, அவர்­கள் அந்த சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தை பார்­வை­யிட்­ட­னர்.இந்த வாக­னத்­தால் பெரி­தும் ஈர்க்­கப்­பட்ட நரேந்­திர மோடி, அது­கு­றித்து நெதன்­யா­கு­வி­டம் ஆர்­வத்­து­டன் கேட்­ட­றிந்­தார். குறித்த வாக­னம் நாளொன்­றுக்கு 20 ஆயி­ரம் லீற்­றர் கடல் நீரை மிக­வும் தூய்­மை­யான குடி­நீ­ராக சுத்­தி­க­ரிப்பு செய்­யும் திறன் படைத்­தது. அதே­போல், நாளொன்­றுக்கு 80 ஆயி­ரம் லீற்­றர் அள­வு­கொண்ட மண் மாசு­க­ளு­டன் கூடிய நீரை இந்த வாக­னத்­தால் சுத்­தி­க­ரிப்பு செய்ய முடி­யும்.

தனது கீச்­ச­கப் பக்­கத்­தில் குறித்த வாக­னம் தொடர்­பில் மிகை­யா­கப் புகழ்ந்து பதி­விட்­டி­ருந்­தார் மோடி. இன்­னும் சில தினங்­க­ளில் இந்­தி­யா­வுக்­குச் செல்­ல­வுள்­ளார் நெத்­தன்­யாகு. அவர் குறித்த வாக­ன­மொன்றை மோடிக்­குப் பரி­ச­ளிக்­க­வுள்­ளார் என்று அறி­ய­வ­ரு­கி­றது.

You might also like