தென்னிந்திய நடிகர்களின் நட்சத்திரக் கலைவிழா ஆரம்பம்!

தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்குபற்றும் 2018- நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் இன்று ஆரம்பமானது. இதற்காக இரண்டு நாள்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்வதற்காக விஷால் தலைமையில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே அணிவகுத்து சென்றுள்ளது.

இந்த விழாவில் ரஜினியின் 2.0 படத்தின் முன்னோட்டம் , விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், விஷாலின் சண்டக்கோழி 2, இரும்புத்திரை படங்களின் இசை மற்றும் முன்னோட்டம் என்பன வெளியிடப்படவுள்ளன.

நட்சத்திரக் கலை விழாவில் ரஜினி, கமல், விஷால், கார்த்தி, நாசர், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், சூரி, சதீஷ்,குஷ்பு, சங்கீதா, காஜல் அகர்வால், ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கின்றனர்.

You might also like