பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் நீக்­கப்­பட்­டே­யா­க­வேண்­டும்

இலங்­கை­யில் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் தொடர்ந்தும் நடை­மு­றை­யில் இருப்­பது ஒட்­டு­மொத்தச் சமூ­கத்­துக்­கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது என்று நாட்­டின் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் தலைவி கலா­நிதி தீபிகா உட­கம தெரி­வித்து ஒரு நாள் கடப்­ப­தற்­குள், பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் 11 ஆண்­டு­க­ளாக சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த தமி­ழர் ஒரு­வர் நிர­ப­ராதி எனத் தெரி­வித்து நீதி­மன்­றால் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்.
பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் மிக மோச­மான விளை­வுக்குக் கிடைத்த ஆகப் பிந்­திய உதா­ர­ணம் இது.

இலங்­கை­யில் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­ட­ம் நடை­மு­றை­யில் உள்­ளமை, பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­க­ளுக்­கான சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளது. இந்­தப் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் மனித உரி­மை­களை நிலை­நி­றுத்­து­கின்ற பாது­காப்­புச் சட்­ட­மாக மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­குழு இருப்­ப­தா­க­வும் அதன் தலை­வர் தெரி­வித்­தார்.

இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­குழு மட்­டு­மல்ல பன்­னாட்டு மனித உரி­மை­கள் குழுக்­கள் மற்­றும் அமைப்­புக்­கள் பல­ வும்­கூட பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­கு­மாறே கொழும்பு அர­சி­டம் நீண்­ட­கா­ல­மாக வலி­யு­றுத்தி வரு­கின்­றன. ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் 2015ஆம் ஆண்டு கொழும்­பின் இணை அனு­ச­ர­ணை­யு­டன் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தி­லும் இந்த விட­யம் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. தற்­போது நடை­மு­றை­யில் இருக்­கும் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை நீக்­கி­விட்டு அதற்­குப் பதி­லாக பன்­னாட்­டுச் சட்­டங்­களை உள்­ள­டக்­கிய புதிய சட்­டம் ஒன்று நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும் என்­றும் அந்­தத் தீர்­மா­னம் வலி­யு­றுத்­து­கின்­றது.
அவ்­வப்­போது இலங்­கைக்கு வந்து நில­மை­களை நேரில் ஆய்வு செய்­யும் ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர்­க­ளில் பல­ரும்­கூட காலத்­திற்­குப் பொருந்­தாத, இலங்­கை­யின் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் நீக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­னர்.

உலக நாடு­க­ளின் அழுத்­தம் மற்­றும் மனித உரி­மைக் குழுக்­க­ளின் அழுத்­தம் என்­ப­வற்றை அடுத்து, இந்த விட­யத்­தில் சாத­க­மாக நடப்­ப­தா­கவே அர­சும் காட்­டிக்­கொண்­டது. புதிய பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் ஒன்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான பூர்­வாங்க நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­கப்­பட்­டன.

புதிய சட்­ட மூ­லத்துக்கான வரை­வும் நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டது . ஆனால், அது ஏற்­க­னவே இருக்­கும் சட்­டத்­தை­விட மிக மோச­மா­ன­தாக இருப்­ப­தா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே கடும் கண்­ட­னங்­க­ளைத் தெரி­வித்­தி­ருந்­தது. இதை­ய­டுத்து அந்­தச் சட்­ட­மூ­லம் விவா­தத்துக்கு எடுக்­கப்­ப­டா­மல் கிடப்­பில் போடப்­பட்­டது. எனி­னும் திருத்­தப்­பட்ட சட்­ட­
வ­ரைவு மீண்­டும் நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­ப­ட­ வில்லை. காலம் இழுத்­த­டிக்­கப்­ப­டு­கின்­றது.

பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தால் இலங்­கை­யில் அதி­கம் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தமி­ழர்­களே இன்று, இந்த நிமி­டம் வரைக்­கும் இந்­தச் சட்­டத்­தால் பாதிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருப்­ப­வர்­க­ளும் தமி­ழர்­களே! போர் முடிந்து 8 ஆண்­டு­க­ளா­கி­விட்ட பின்­ன­ரும் , அரச படை­யி­ன­ருக்கோ, அர­சுக்கோ எதி­ராக எவரா­வது, ஏதா­வது செய்­து­விட்­டால் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யா­கச் சட்­டம் ஒழுங்கு அதி­கா­ரி­க­ளால் கையில் எடுக்­கப்­ப­டு­வது பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­டமே.
கைது செய்­யப்­பட்­ட­வரை விசா­ரணை ஏதும் இன்­றித் தடுத்து வைக்­க­வும் ,சித்­தி­ர­வதை செய்து பெறப்­ப­டும் வாக்­கு­மூ­லத்தை சாட்­சி­ய­மாக ஏற்­றுக்­கொள்­ள­வும், நீண்­ட­கா­ல­மா­கப் பிணை­யில் வெளி­வ­ர­மு­டி­யாத வகை­யில் சிறை­யில் அடைக்­க­வும் என ஏகப்­பட்ட அதி­கா­ரங்­க­ளைப் பொலி­ஸா­ருக்கு வழங்­கும் இந்­தச் சட்­டம், ஒழிக்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தில் எள்­ள­வும் சந்­தே­க­மில்லை. இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­குழு இந்த விட­யத்­தைத் தொட்­டுச் சென்­றா­லும், அத­னால் அறிக்­கை­மட்­டுமே விடுக்­க­மு­டி­யும். அத­னைத் தாண்டி பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை நீக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் எத­னை­யும் மேற்­கொள்­ள ­அதனால் மு­டி­யாது.

எனவே பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை முழு­மை­யாக நீக்­கு­வ­தற்­கான போராட்­டங்­க­ளை­யும் தமிழ்ச் சமூ­கமே முன்­னெ­டுக்க வேண்­டிய கட்­டா­யத்­தில் இருக்­கின்­றது. தொடர் போராட்­டங்­க­ளில் ஈடு­ப­டு­வ­தன் மூல­மும், தொடர்ச்­சி­யா­கக் கொழும்­புக்கு அழுத்­தம் கொடுப்­ப­தன் மூல­மும் மட்­டுமே பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை எம்மால் ஒழிக்­க­மு­டி­யும்.

You might also like