பரந்­தன் இர­சா­ய­னக்­கு­ளம் விரை­வில் சீர­மைக்­கப்­ப­டும்

பரந்­தன் இர­சா­ய­னக்­கு­ளம் இந்­த­வ­ரு­டம் சீர­மைத்­துக் கொடுக்­கப்­ப­டும் என்று கிளி­நொச்சி மாவட்ட கம­நல அபி­வி­ருத்தித் திணைக்­க­ளத்­தின் உதவி ஆணை­யா­ளர் வே.ஆய­கு­லன் தெரி­வித்­தார்.

உமை­யாள்­கு­ளம் பகு­தி­யில் அமைந்­துள்­ளது இந்­தக்­கு­ளம். இந்­தக் குளத்து நீரை நம்பி கண்­டா­வளைப் பிர­தே­சத்­தில் சுமார் 1200 ஏக்­கர் நிலத்­தில் விவ­சா­யம் செய்­யப்­ப­டு­கின்­றது. குளத்­தில் தண்­ணீர்த் தட்­டுப்­பாடு ஏற்­ப­டு­கின்றபோது, விவ­சா­யி­கள் சிர­மப்­ப­டு­கின்­ற­னர். தற்­போது குளத்­தின் துருசு சீர­மைக்­கப்­ப­டாத கார­ணத்­தால் நீரைத்­தேக்கி வைக்­க­மு­டி­யா­மல் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர் என விவ­சா­யி­கள் தெர­விக்­கின்­ற­னர்.

மீள்­கு­டிேயற்­றத்­தின் பின்­னர் இரு­த­ட­வை­கள் சீர­மைப்புக்­கு நிதி கிடைக்­கப்­பெற்­றது. எனி­னும், துருசு இது­வரை சீர­மைக்­கப்­ப­ட­வில்லை என அவர்­கள் கூறு­கி­ன்ற­னர்.

இது­தொ­டர்­பாக கிளி­நொச்சி மாவட்ட கம­நல அபி­வி­ருத்தித் திணைக்­க­ளத்­தின் உதவி ஆணை­யா­ளர் தெரி­வித்த­தா­வது:
இரண்டு தட­வை­கள் குளத்­தில் சீர­மைப்பு வேலை­கள் இடம்­பெற்­றுள்­ளன. 2010ஆம் ஆண்டு நீர்ப்­பாச னத் திணைக்­க­ளத்­தா­லும், 2016ஆம் ஆண்டு கம­நல அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்­தா­லும் சீர­மைக்­கப்­பட்­டது. 2016ஆம் ஆண்டு 4.3 மில்­லி­யன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்டு மூன்று வேலை­கள் ஒப­பந்­த­கா­ரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. இதில் அணைக்­கட்டு அமைத்­தல் உள்­ளிட்ட இரண்டு வேலை­கள் முடிக்­கப்­பட்டு, 3.1 மில்­லி­யன் ரூபா நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

மழை கார­ண­மாக துருசு சீர­மைக்­கப்­ப­ட­வில்லை. அதற்கு ஒதுக்­கப்­பட்ட நிதி திரும்­பி­யுள்­ளது. இந்­த ஆண்டு அதற்­கான நிதிக் கோரக்­கை­களை முன்­வைத்­துள்­ள ­ளோம். கிடைத்­த­தும் ேவலை­கள் ஆரம்­பிக்­கப்ப­டும் – எனத் தெரி­வித்­தார்.

You might also like