விழிப்புணர்வின் அவசியம்

இலங்கையின் புதிய தேர்தல் முறைமை தொடர்பாக 80 சதவீதமான வாக்காளர்களுக்குச் சரியான விளக்கம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரலின் பணிப்பாளர் றோகண ெஹட்டி யாராச்சி. சில வேட்பாளர்கள் கூட புதிய தேர்தல் முறை குறித்து விளக்கமின்றி இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கருத்து முற்றிலும் உண்மை என்பதை மக்களுடன் கலந்துரையாடும் எவரும் உணர்ந்துகொள்வார்கள். வட்டார ரீதியாகத் தேர்தல் நடக்கிறது என்பதைத் தவிர பெரும்பாலான மக்களுக்கு இந்தத் தேர்தல் முறைமை குறித்துப் போதிய விளக்கம் இல்லை. அவசர அவசரமாகத் தேர்தல் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்து அவற்றை நிறைவேற்றுவதில் காட்டிய அக்கறையை அந்தச் சட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதில் அரசு காட்டவில்லை என்பது கண்கூடு.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் நடந்துவந்த தேர்தல் அதற்கு முந்தைய வட்டார முறையிலான தேர்தலாக மீண்டும் மாறியுள்ளது என்ற அளவில்தான் பெரும்பாலான மக்கள் இந்தத் தேர்தல் முறைமையைப் புரிந்து வைத்துள்ளார்கள். வட்டார மற்றும் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைகள் இரண்டையும் கொண்டதாகவே இந்தத் தேர்தல் அமையப் போகின்றது என் கிற புரிதல் குறைவாகவே இருக்கிறது. அதனைப் புரிந்து கொண்டவர்களில் பலரும்கூட இரண்டு முறைகளும் கலந்த இந்தத் தேர்தல் எப்படி நடக்கப்போகிறது எந்த வகையில் வாக்கு கள் கணிக்கப்பட்டுப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படப் போகி றார்கள் என்பது குறித்துக் குழம்பிப்போயுள்ளார்கள்.

தேர்தல் முறை குறித்து மக்களுக்குப் போதியளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததே இதற்குக் காரணம். அதனைச் செய்திருக்க வேண்டியது அரசே. ஆனால் வழக்கம்போலவே இந்த விடயத் திலும் மக்களுக்குப் போதிய சரியான தகவல்கள் சென்றடை வதற்கான பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு அரசு தவறி யிருக்கின்றது. மக்களுக்குத் தேவையான மக்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய பல்வேறு விடயங்களிலும் இதுவே நிலமையாக இருந்து வருகிறது.

இந்­தத் தடவை உள்­ளு­ராட்­சித் தேர்­த­லில் கட்­சிக்கு வாக்­க­ளிப்­பதா வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்­ப­தா என்­கிற குழப்­பம்­கூ­டப் பல­ரி­டம் காணப்­ப­டு­கின்­றது. அத­னைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­குக்­கூட ஆளில்­லாத நில­மையே காணப்­ப­டு­கின்­றது.

இந்த நில­மைக்கு அர­சி­யல் கட்­சி­க­ளும் காரணம் என்று கபே அமைப்­பின் பணிப்­பா­ளர் கீர்த்தி குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்­கி­றார். தேர்­தல் சட்ட மறு­சீ­ர­மைப்­புத் தொடர்­பா­கப் பொது­மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பாக அர­சி­யல் கட்­சி­க­ளும் கவ­னம் செலுத்­த­வில்லை என்று அவர் கூறி­யி­ருக்­கி­றார். அந்­தக் குற்­றச்­சாட்­டி­லும் உண்மை இல்­லா­மல் இல்லை.

இந்த விட­யத்தை மக்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்­து­வது அடுத்­த­ப­டி­யாக இருக்­கட்­டும், தமது சொந்த வேட்­பா­ளர்­க­ளுக்­கே­கூட முழு­மை­யான விளக்­கத்­தைப் பல கட்­சி­கள் வழங்­க­வில்லை என்­பதே உண்­மை­யான நிலை. கபே பணிப்­பா­ளர் அத­னை­யும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

ஒரு தேர்­தல் சீர்­தி­ருத்­தத்­தையே மக்­க­ளி­டம் எடுத்­துச் சென்று அவர்­க­ளுக்கு அது குறித்த போதிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தத் தவ­றி­யி­ருக்­கும் இந்த அர­சும் அதன் பொறி­மு­றை­யும் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பான தனது நட­வ­டிக்­கை­களை, நியாயப் பா­டு­களை மட்­டும் எப்­படி மக்­க­ளி­டம் எடுத்­துச் சென்று விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தப்­போ­கின்­றது?

ஒரு புறத்­தில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச போன்­ற­வர்­கள் புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ராக மக்­க­ளி­டம் கருத்­துக்­க­ளைப் பரப்பி வரும் நிலை­யில், உண்­மையை மக்­க­ளுக்கு எடுத்­துச் சொல்லி அவர்­க­ளின் ஆத­ர­வைப் புதிய அர­ச­மைப்­பின்­பால் திரட்­டு­வ­தற்கு அர­சி­டம் எந்­தப் பொறி­மு­றை­யும் இல்லை என்­ப­தையே உள்ளூராட்­சித் தேர்­தல் மறு­சீ­ர­மைப்பு விவ­கா­ரத்தை மக்­க­ளி­டம் எடுத்­துச் செல்­லத் தவ­றி­யி­ருக்­கும் அர­சின் நட­வ­டிக்கை எடுத்­துக்­காட்­டு­கின்­றது.
இந்த நில­மை­யும் அணு­கு­மு­றை­யுமே தொட­ரு­மா­னால் புதிய அர­ச­மைப்பை மக்­க­ளி­டம் கொண்­டு­செல்­லும் விட­யத்­தி­லும் அரசு கோட்­டை­வி­டும் சாத்­தி­யமே அதி­கம் உள்­ளது.

எனவே உட­ன­டி­யா­கவே இது­வி­ட­யத்­தில் அரசு கவ­னம் செலுத்­த ­வேண்­டும். அத்­து­டன் தேர்­தல் பற்­றிய சிக்­கலை உட­ன­டி­யா­கத் தீர்க்க, கட்­சி­கள் தமது வேட்­பா­ளர்­க­ளுக்­குத் தேர்­தல் பற்­றிய முழு­மை­யான விளக்­கங்­க­ளைக் கொடுத்து அவர்­கள் வீடு வீடா­கச் சென்று பரப்­பு­ரை­யில் ஈடு­ப­டும்­போது மக்­க­ளுக்­கும் அது பற்­றிய விளக்­கங்­களை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­ய­ வேண்­டும்.

You might also like