27 இந்­தி­யர்­கள் நேற்று வவு­னி­யா­வில் கைது!!

இலங்­கை­யில் சட்­ட­வி­ரோ­த­மாகத் தங்­கி­யி­ருந்த 27 இந்­தி­யர்­கள் வவு­னி­யா­வில் வைத்­துக் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என குடி­வ­ரவு – குடி­ய­கல்வு திணைக்­க­ளம் அறி­வித்­துள்­ளது என்று வவு­னி­யாப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

குடி­வ­ரவு – குடி­ய­கல்­வுத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளால் வவு­னி­யா­வில் நேற்று ஆறு மணி நேர தேடு­தல் நடத்­தப்­பட்­டது. அதி­லேயே உரிய அனு­ம­திப்­பத்­தி­ரங்­கள் இன்­றித் தங்­கி­யி­ருந்த இந்­தி­யர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

கைது செய்­யப்­பட்ட 27 இந்­தி­யர்­க­ளி­ன­தும் கட­வுச்­சீட்­டுக்­களை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர். கைது செய்­யப்­பட்ட நபர்­கள் எதிர்­வ­ரும் திங்­கட்­கி­ழமை இந்­தி­யா­வுக்குத் திருப்பி அனுப்­பப்­ப­ட­வுள்­ள­னர்.

அதற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன என்று குடி­ வ­ரவு – குடி­ய­கல்­வுத் திணைக்­க­ளம் பொலிஸ் நிலை­யத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளது.

You might also like