கிராம மட்டத் தலைவர்களை வெளிக்கொண்டுவரக் கூடியது புதிய முறையில் அமைந்துள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்

கூட்டு அர­சின் சிந்­த­னை­யால் வட்­டார ரீதி­யாக நாடு தழு­விய ரீதி­யில் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் எதிர்­வ­ரும் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தத் தடவை என்­று­மில்­லாத வகை­யில் பெண்­க­ளின் பிர­தி­நி­தித்­து­ வத்­துக்கு முக்­கி­யத்­து­வம் வழங்­கும் விதத்­தில் சகல கட்­சி­கள் மற்­றும் சுயேச்சைக் குழுக்­கள் பெண்­க­ளுக்கு 25 வீதம் வழங்க வேண்­டும் என்­ப­தனை முன்­னி­லைப் படுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தும் பாராட்­டப்­பட வேண்­டி­ய­து­மா­கும். அத­ன­டிப்­ப­டை­யிலும் இந்­தத் தேர்­தல் பெரிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தும் என்று எதிர்­பார்க்­க­லாம்.

வட்­டார விகி­தா­சார
முறை­யில் கூடு­தல்
ஜன­நா­ய­கத் தன்மை

மக்­கள் பிர­தி­நி­தி­கள் இல்­லாத உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்­றி­னால், மக்­க­ளுக்­கான மெய்­யான சேவை முன்­னெ­டுக்­கப் ப­டு­மெ­னக் கருத இய­லா­துள்­ளது. எனவே உள்­ளூ­ராட்­சிச் சபை­கள் (மாந­கர சபை, நக­ர­சபை, பிர­தே­ச­சபை) காலத்­திற்கு காலம் அவற்­றின் பத­விக்­கா­லம் முடித்து கலைந்­த­வு­டன் தேர்­தலை நடத்தி மக்­கள் பிர­தி­நி­தி­களை கொண்ட நிர்­வா­கக் கட்­ட­மைப்­பா­கச் செயற்­ப­டுத்­து­வதே உண்­மை­யான ஜன­நா­யக நீரோட்­ட­மா­கக் கரு­தப்­ப­டும்.

அந்த வகை­யில் உள்­ளூ­ராட்சி நிர்­வா­கம் என்­பது சட்­ட­திட்­டங்­க­ளுக்­க­மை­வாக சிறி­ய­தொரு நாடா­ளு­மன்­றம் எனக் கொள்­ளப்­பட்­டது. உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான உறுப்­பி­னர்­கள் தெரிவு என்­பது இம்­முறை வட்­டார அடிப்­படை மற்­றும் விகி­தா­சார அடிப்­ப­டை­யில் அமைந்த புதிய தேர்­தல் நடை­மு­றை­யாக அமை­ய­வுள்­ளது.

இதில் நாட­ளா­விய ரீதி­யில் பிர­தேச சபை­கள் 272, நக­ர­ச­பை­கள் 41, மாந­கர சபை­கள் 24 உட்­பட மொத்­த­மாக 337 உள்­ளூ­ராட்சி சபை­கள் இந்த முறை தேர்­தலை எதிர்­கொள்­ள­வுள்­ளன. நாட்­டில் உள்ள பதிவு செய்­யப்­பட்ட அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சுயேச்சைக் கு­ழுக்­கள் பய­னு­றுதி வாய்ந்த வேட்­பா­ளர்­களை தத்­தம் தரப்­பு­கள் சார்­பில் இனம் கண்டு தேர்­த­லில் நிறுத்தி மக்­க­ளுக்­கான சிறப்­பான சேவையை முன்­னெ­டுக்­க­வும் அதே நேரம் ஊழல் செயற்­பா­டு­க­ளற்ற வேட்­பா­ளர்­க­ளாக இனம் கண்டு தேர்­த­லில் நிறுத்தி கூட்­டாட்­சிக்கு மெரு­கூட்­டு­வ­தற்­காக கள­மி­றங்­கி­யுள்­ளன. கடந்த கால உள்­ளூ­ராட்சி தேர்­தல் முறைக்கு மாறு­பட்ட விதத்­தில் இம்­முறை இடம் பெற­வுள்ள தேர்­த­லில் மக்­கள் பிர­தி­நி­தி­கள் இரண்டு வகை­க­ளில் தெரிவு செய்­யப்­ப­டு­வார்­கள் ஒன்று வட்­டார ரீதி­யில் தாம்­சார்ந்த கட்­சிக்­கான தேர்­த­லில் போட்­டி­யிட்டு குறித்த வட்­டார வாக்­கா­ளர்­க­ளது வாக்­கு ­க­ளைப் பெற்று தெரி­வா­கும் உறுப்­பி­னர்­கள் ஒரு வகை­யி­னர்.

மற்­றை­யது குறித்த உள்­ளூ­ராட்சி மன்­றத்­துக்­கான தேர்­த­லில் அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சுயேச்சைக் குழுக்­கள் சமர்ப்­பிக்­கும் விகி­தா­சாரப் பட்­டி­ய­லில் இருந்து தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­கள் மற்­றைய வகை­யி­னர். மொத்­தத்­தில் இந்­தத் தேர்­தல், கட்சி அல்­லது சுயேச்­சைக் குழு என்­ப­வற்றை முதன்­மைப்­ப­டுத்து மொன்­றா­கவே கொள்­ளத்­தக்­கது. தேர்­த­லில் வாக்­கா­ளர்­கள் குறிப்­பிட்­ட­தொரு வேட்­பா­ளரை விரும்பி அவ­ருக்கு தனி­யாக வாக்­க­ளிக்க முடி­யாது.

வேட்­பா­ள­ரின் செல்­வாக்கு
வெற்­றிக்கு வழி­ய­மைக்­கும்

அடுத்­த­தாக விகி­தா­சார பட்­டி­ய­லில் இருந்து தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­கள் கூட, அவர் சார்ந்த குழு அல்­லது கட்சி பெற்ற மொத்த வாக்­கு­க­ளில் தங்­கி­யி­ருக்க வேண்­டி­யுள்­ளது. அதற்­கேற்­ப­தான் குறித்­த­தொரு உள்­ளூ­ராட்­சிச்­ச­பை­யில் குறித்­த­தொரு கட்சி தொடர்­பாக எத்­தனை உறுப்­பி­னர்­கள் தெரி­வா­கி­றார்­கள் என்ற கணக்­கீடு மேற்­கொள்­ளப்­ப­டும். இதி­லி­ருந்து தான் கட்­சி­யின் செல்­வாக்கு வட்­டார ரீதி­யி­லான வேட்­பா­ளர்­க­ளின் தனிப்­பட்ட செல்­வாக்கு, பெண்­க­ளின் செல்­வாக்கு என்­பவை வெற்­றிக்கு வழி கோலு­வ­தைக் கணிக்க முடி­யும்.

இங்கு வேட்­பா­ளர் பட்­டி­யல் தயா­ரிக்­கும் போது முத­லில் உள்­ளூ­ராட்சி சபை­க­ளின் குறித்­தொ­துக்­கப்­பட்ட வட்­டா­ரங்­கள் தொடர்­பான பட்­டி­யல் தயா­ரிக்­கப்­ப­டு­கி­றது. விகி­தா­சார முறைத்­தேர்­வுக்­காக குறித்த ஒரு உள்­ளூ­ராட்சி மன்­றத்­துக்­கென மற்­றொரு வேட்­பா­ளர் பட்­டி­யல் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது. இதில் முத­லா­வது பட்­டி­யல், இரண்­டா­வது பட்­டி­யல் என 2 பட்­டி­யல்­கள் உள்­ளன.

பழைய முறை­யி­லி­ருந்து வாக்­கு­கள் எண்­ணும் முறை­யும் வேறு­ப­டு­கின்­றது.
அந்­தந்த வாக்­கெ­டுப்பு நிலை­யத்­தி­லேயே வாக்கு எண்­ணு­த­லும் நடை­பெ­றும். ஒரு வட்­டா­ரத்­தில் ஒன்­றுக்கு மேற்­பட்ட வாக்­கெ­டுப்பு நிலை­யம் இருக்­கு­மா­யின் எவ்­வி­டத்­தில் வைத்து வாக்­கு­களை எண்­ணு­வது என்­ப­தனை எதிர்க்­கட்சி அலு­வ­லர் தீர்­மா­னிப்­பார். இத­னால் தேர்­தல் முடி­வு­கள் இல­கு­வா­க­வும், விரை­வா­க­வும் கிடைக்­கும் என எதிர்­பார்க்­க­லாம்.

ஓர் உள்­ளூ­ராட்சி சபை பிர­தே­சத்­தில் ஒவ்­வொரு கட்சி அல்­லது சுயேச்சை குழு பெற்­றுக்­கொண்ட வாக்­கு­க­ளின் எண்­ணிக்­கையை அந்­தந்த உள்­ளூ­ராட்சிச் சபைக்­காக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்ள மொத்த உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யி­னால் பிரிக்­கின்­ற ­போது கிடைக்­கின்ற தொகை ­யி­னால் கட்சிகளுக்கும், சுயேட்­சைக் குழு­வுக்­கும் உரிய உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை பெறப்­ப­டும்.

ஒவ்­வொரு கட்­சிக்­கும் அல்­லது சுயேச்­சை­ கு­ழு­வுக்கும் கிடைக்­கப் பெற்ற மொத்த உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் இருந்து வட்­டா­ரங்­களை வென்­றி­ருக்­கின்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கையை கழித்த பின்­னர் எஞ்­சு­கின்ற நிலுவை அந்­தக்­கட்­சிக்கு அல்­லது சுயேச்சை குழு­வுக்கு பட்­டி­ய­லில் இருந்து கிடைக்க வேண்­டிய உறுப்­பி­னர் தொகை­யா­கக் கொள்­ளப்­ப­டும்.

எந்­த­வொரு கட்­சி­யி­லி­ருந்து அல்­லது சுயேச்சை குழு­வில் இருந்து சமர்ப்­பிக்­கப்­ப­டும் விகி­தா­சார பட்­டி­ய­லி­லும் பார்க்க கூடு­த­லான தொகை வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அந்­தக்­கட்சி சார்­பாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருப்­பின் அவ்­வாறு அதி­க­ரிக்­கின்ற தொகை­யி­னால் உள்­ளூர் அதி­கார சபைக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கின்ற உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கும்.
இவ்­வாறு புதிய முறை­யில் இடம்­பெ­றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான இந்­தத் தேர்­தல் மாற்­றங்­களை கொண்­டு­வ­ரும் என்று நிச்­ச­யம் எதிர்­பார்க்­க­லாம்.

You might also like