பெரும்­போக செய்கை காலத்­தி­லும் அரசு அரிசி இறக்­கு­மதி செய்­கி­றது!

நாட்­டில் பெரும்­போ­கச் செய்கை அறு­வடை நடை­பெ­றும் காலத்­தில் உள்ளூர் உற்­பத்­தி­யார்­களை பாதிக்­கும் வகை­யில் அர­சு அரி­சி இறக்­கு­மதி செய்­துள்­ளது அத­னால் நுகர்­வோர் நன்­மை­ய­டைந்­தா­லும் விவ­சா­யி­கள் பெரும் பாதிப்­புக்­கு­ளா­கி­யுள்­ள­னர் என விவ­சாய அமைப்­புத் தலை­வர் வ.கந்­த­சாமி தெரி­வித்­தார்.

மட்­டக்­க­ளப்­பில் விவ­சாய அமைப்­பு­க­ளின் ஏற்­பாட்­டில் செங்­க­லடி மத்­திய கல்­லூரி மண்­ட­பத்­தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­த­தா­வது;

நெல்லை அரசு உத்­த­ர­வாத விலைக்கு கொள்­வ­னவு செய்­தால் வெளி­யா­ரின் தலை­யீடு இருக்­காது. நெல் சந்­தைப்­ப­டுத்­தும் சபை அம்­பாறை மாவட்­டத்­தில் துரி­த­மாக செயற்­ப­டு­கி­றது ஆனால் மட்­டக்­க­ளப்­பில் நெல்­லைக் கொள்­வ­னவு செய்­வதை ஊக்­கு­விக்க எவ­ரும் இல்லை. மூன்­றில் இரண்டு சத­வீ­த­மான விவ­சா­யி­கள் ஒவ்­வொரு தட­வை­யும் பாதிக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு வரட்சி நிவா­ர­ணத்தை வழங்க உட­ன­டி­யாக அர­ச­த­லை­வர் நட­வ­டிக்­கை­யெ­டுக்க வேண்­டும். அறு­வடை செய்­ய­மு­டி­யா­மல் நட்ட­ம­டைந்த விவ­சா­யி­க­ளின் கடனை கழித்­துக் கொடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யெ­டுக்க வேண்­டும்.என்­றார்.

You might also like