நிரந்­தர குடி­யு­ரிமை பெறு­வ­தற்கு பிரச்­சி­னை­யைத் தூண்­டு­கின்­ற­னர்- வியா­ழேந்­தி­ரன் எம்.பி.

புலம்­பெ­யர்ந்து மேலைத்­தேய நாடு­க­ளில் உள்ள ஒரு­சி­லர் தங்­க­ளுக்கு நிரந்­தர குடி­யு­ரிமை கிடைக்க வேண்­டும் என்­ப­தற்­காக இங்­குள்­ள­வர்­க­ளுக்கு பணம் வழங்கி மீண்­டு­மொரு பேராட்­டத்தை ஆரம்­பிக்க முயற்­சி­கள் மேற்­கொள்­கி­றார்­கள் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சதா­சி­வம் வியா­ழேந்­தி­ரன் தெரி­வித்­தார்.

மட்­டக்­க­ளப்­பில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற மக்­கள் சந்­திப்­பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­த­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது;

மேலைத்­தேய நாடு­க­ளி­லி­ருந்து போராட்­டத்தை தூண்­டு­ வ­தற்கு முயற்­சிப்­ப­வர்­கள் தங்­கள் பிள்­ளை­களை போராட்­டத்­துக்கு அனுப்ப முடி­யுமா? இனி­யொ­ரு­போ­தும் எங்­கள் சமூ­கத்தை இந்த மண்­ணிலே இழப்­ப­தற்கு நாங்­கள் தயா­ரில்லை. நாங்­கள் கல்வி பொரு­ளா­தார ரீதி­யில் முன்­னேற்­ற­ம­டைய வேண்­டும். தமிழ் மக்­க­ளை­யும் மொழி­யை­யும் மதத்­தை­யும் பாது­காப்­ப­தற்­காக நங்­கள் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம்.

மட்­டக்க­ளப்­பு மங்­க­ளா­ரா­மய சிகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரெத்ன தேரர் பதுளை வீதி­யில் பௌத்த சிலை நிறுவ வந்த போது தேர­ரு­டன் சேரந்து எங்­க­ளைக் காட்­டிக் கொடுத்­த­வர்­கள் இந்த பகு­தி­யிலே வேட்­பா­ள­ராக நிறத்­தப்­பட்­டுள் ளார்­கள்.30 வரு­டங்­க­ளுக்கு மேலாக துன்­பங்­களை அனு­ப­வித்­து­வ­ரும் எமது மக்­க­ளுக்கு நிரந்­தர தீர்­வொன்­றைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்­பில் எழுத்து மூலம் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டும் என்­ப­தற்­காக தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பய­ணிக்­கி­றது – என்­றார்.

You might also like