வவுனியாவில் பாத­சா­ரிக் கடவை அமைக்கக் கோரிக்கை

வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­துக்கு முன்­பாக சாலை­யில் பாத­சா­ரி­கள் கடவை இல்­லா­த­தால் பய­ணி­கள் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­ற­னர்.

கடந்த முத­லாம் திக­தி­யி­லி­ருந்து வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­தில் தனி­யார் மற்­றும் இ.போ.ச. சேவை­கள் நடை­பெற்று வரு­கின்­றன. எனி­னும் புதிய பேருந்து நிலை­யத்­துக்கு முன்­பாக பாத­சா­ரிக்­க­ட­வை­கள் அமைக்­கப்­ப­ட­வில்லை.

சுமார் 195மில்­லி­யன் ரூபா செல­வில் அமைக்­கப்­பட்ட இந்­தப் பேருந்து நிலை­யத்­துக்கு முன்­பாக பய­ணி­கள் பாத­சா­ரிக்­க­ட­வை­கள் இல்லை. இதன் கார­ண­மாக பேருந்து நிலை­யத்துக்கு சாலை­யைக் கடந்து செல்­லும் பய­ணி­கள் பெரும் அவ­ல­நி­லைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

விபத்து இடம்­பெ­ற­லாம் என்ற பயத்­து­டன் சாலையைக் கடக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. வடக்குப் பகு­திக்­கான முதன்­மை­யான கண்டி சாலை­யில் இரவு – பக­லாக கன­ரக வாக­னங்­கள் பய­ணிக்­கின்­றன. விபத்­து­கள் இடம்­பெ­றும் அபா­யம் அதி­கம் காணப்­ப­டு­கின்­றது.

எனவே, பேருந்து நிலை­யத்துக்கு முன்­னால் பாத­சா­ரிக்­க­ட­வை­களை அமைத்­துத்­த­ரு­மாறு பய­ணி­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

You might also like