தேன் என்று தெரிவித்து சீனிப்பாணி வியாபாரம்!

தேன் எனக் கூறி சீனிப் பாணியை வியாபரம் செய்ய முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த சீனிப் பாணியில் பல்லி, கரப்பான் பூச்சிகள் என்பன காணப்பட்டன என வவுனியா மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்தார்.

இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் காலை நெளுக்­கு­ளம் பொதுச் சுகா­தா­ரப்­ப­ரி­சோ­த­கர் பிரி­வில் இடம்பெற்­றுள்­ளது. தேன் என்று விற்­ப­னைக்கு தயார் செய்­யப்­பட்ட 350லீற்­றர் சீனிப்­பாணி கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

வவு­னியா பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்­கை­க­ளி­லேயே இந்­தச் சம்­ப­வம் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்­யப்­பட்ட இரு­வர் நேற்று முன்­தி­னம் மாலை வவு­னியா நீத­வான் நீதி­மன்­றில் முற்­ப­ டுத்­தப்­பட்­ட­னர். இரு­வ­ரை­யும் எதிர்­வ­ரும் 8ஆம் திகதி(இன்று) வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீத­வான் உத்­த­ர­விட்­டார்.

மேற்­பார்வை பொது­சு­கா­தா­ரப்­ப­ரி­சோ­த­கர் தலை­மை­யில் இடம்­பெற்ற இந்­தச் சுற்­றி­வ­ளைப்­பில் நெளுக்­கு­ளம், ஓமந்தை, பூவ­ர­சன்­கு­ளம், ஆகிய பகு­தி­க­ளின் பொது­சு­கா­தா­ரப்­ப­ரி­சோ­த­கர்­க­ளு­டன் இணைந்து நெளுக்­கு­ளம் பொலி­ஸா­ரின் பொலி­ஸா­ரும் ஈடு­பட்­ட­னர். பாணி­யைப் பொதி செய்­வ­தற்­குப் பயன்­ப­டுத்திய போத்­தல்­கள், மூடி­கள், கொள்­க­லன்­கள் என்­ப­ன­வும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

‘‘கொள்­வ­னவு செய்­யும் உண­வுப் பொருள்­க­ளில், வியா­பா­ரப்­ப­திவு இலக்­கம் இல்­லாத எந்­த­வி­த­மான உண­வுப் பொருள்­க­ளை­யும் கொள்­வ­னவு செய்­ய­வேண்­டாம் ’’ என்று பொது­சு­கா­தா­ரப்­ப­ரி­சோ­த­கர் க. தியா­க­லிங்­கம் பொதுமக்களிடம் கேட்­டுக்­கொண்­டார்.

You might also like