புழு­தி­யாற்று நீர்ப்­பா­சன திட்­டத்தை மீள ஆரம்­பிக்கக் கோரிக்கை

மாய­வ­னூர் பகு­தி­யில் அமைக்­கப்­பட்ட புழு­தி­யாற்று ஏற்று நீர்ப்­பா­சன திட்­டத்தை மீள ஆரம்­பிப்­ப­தற்கு உரிய தரப்­பி­னர் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என பிர­தேச மக்­கள் கோரிக்கை விடு­கின்­ற­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் கரைச்சி பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உட்­பட்ட கிரா­மமே மாய­வ­னுர் கிரா­மம் ஆகும். குறித்த கிரா­மத்­தில் உள்ள மக்­கள் விவ­சா­யத்­தையே முதன்­மைத் தொழி­லா­கக் கொண்டு வாழ்ந்து வரும் நிலை­யில் வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் விவ­சாய அமைச்­சர் ஐங்­க­ர­நே­ச­னின் காலத்­தில் அவ­ரது அமைச்­சின் நிதி மூலம் மாய­வ­னூர் பகு­தி­யில் அமைக்­கப்­பட்ட புழு­தி­யாற்று நீர்ப்­பா­சனத் திட்­டம் 2015ஆம் ஆண்டு தை மாதம் 23ஆம் திகதி வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரால் திறந்து வைக்­கப்­பட்­டது.

ஆரம்­பத்­தில் விவ­சா­யி­க­ளுக்கு நீர் வழங்­கப்­பட்­ட­போ­தும் அது தொடர்ச்­சி­யான நடை­மு­றை­யில் இல்லை. இத­னால் தமது வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­ப­டு­கி­றது என மக்­கள் கவலை தெரி­விக்­கின்­ற­னர்.

இது தொடர்­பாக விவ­சாயி ஒரு­வர் தெரி­வித்­த­தா­வது:
குறித்த திட்டம் திறந்து வைக்­கப்­பட்­ட­தன் பின்­னர் சில நாள்­கள் நீர் வழங்­கி­னார்­கள். பின்­னர் நிறுத்­தப்­பட்­டது. அதன்­பின்­னர் தொடர்ச்­சி­யாக இல்லை. இடை­யில் வழங்­கு­வார்­கள். பின்­னர் நிறுத்தி விடு­வார்­கள். அங்கு மின்­சார இணைப்பு இல்­லாத கார­ணத்­தால் என்­ஜின் இயந்­தி­ரம் மூலமே நீர் வழங்­கப்­ப­டு­கின்­றது.

ஆரம்­பத்­தில் எம்­மி­டம் மண்­ணெண்­ணெய் பெறப்­பட்டு நீர் வழங்­க­ப­பட்­டது. அண்­மை­யில் கம­நல சேவை நிலை­யத்­தால் வழங்­கப்­பட்டு நீர் வழங்­கப்­பட்­டது. தற்­போது நிலங்­கள் எல்­லாம் உழுது விதைப்­ப­தற்கு தயா­ராக இரு­கின்­றன. ஆனால் நீர் இல்­லாத கார­ணத்­தா­லும் மழை இல்­லாத கார­ணத்­தா­லும் விதைக்க முடி­யாத நிலை­யில் இருக்­கின்­றோம். எமக்கு குறித்த ஏற்று நீர்ப்பாச­னத் திட்­டத்தை தந்­த­போது ‘எமது விவ­சா­யி­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக நீர் வழங்­கு­வ­தற்­கா­கவே இது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது’ என தெரி­வித்­தி­ருந்­த­னர். ஆனால் அது இன்று நடை­மு­றை­யில் இல்­லாது காணப்­ப­டு­கின்­றது–என்றார்.

உட­ன­டி­யாக மின்­சார இணைப்பை வழங்கி எமது வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­து­வ­தற்கு உரி­ய­வர்­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என பாதிக்­கப்­பட்ட மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

You might also like