மற்­றைய அறிக்கை ஏன் வெளி­யா­க­வில்லை?

மத்­திய வங்­கிப் பிணை­முறி மோசடி தொடர்­பான அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வின் விசா­ரணை அறிக்­கை­யின் முக்­கிய விட­யங்­கள் அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்­டன.அறிக்கை வெளி­யா­வ­தற்கு முன்­னர் வாள்­வீச்சு, உரு­ளும் தலைகள் என்றெல்லாம் வீரவசனங்கள் பேசப்பட்டாலும், அந்தளவுக்கு எது­வும் நடக்­க­வில்லை.

இருப்­பி­னும் நாட்­டின் தற்­போ­தைய தேர்­தல் களத்­தில் பெரும் தாக்­கத்­தைச் செலுத்­தக்­கூ­டி­ய­தாக அந்த அறிக்கை அமைந்­தி­ருந்­தது.

பிணை­முறி மோசடி தொடர்­பாக வெளி­யான மூன்­றா­வது அறிக்கை இது. மூன்று அறிக்­கை­கள் வெளி­யான பின்­ன­ரும் இன்­ன­மும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ரா­கச் சட்­ட­ந­ட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. இந்­தப் பிணை­முறி விற்­பனை விவ­கா­ரத்­தில் பெரும் தொகைப் பணம் முறை­கே­டா­கச் சம்­பா­திக்­கப்­ப­டு­வ­தற்கு மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நர் அர்­ஜூன் மகேந்­தி­ரன் பொறுப்­பாளி என்று அறிக்கை குற்­றஞ்­சாட்­டி ­யி­ருந்­தது. இந்த முறை­கே­டான சம்­பாத்­தி­யத்­தில் தொடர்­பு­பட்­டி­ருந்த நிறு­வ­ன­மான பேர்­பர்ச்­சு­வல் ரெச­றீ­ஸூக்கு எதி­ரா­கச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு அர­சுக்கு ஏற்­பட்ட இழப்­பீடு திரும்­பப் பெறப்­ப­ட­வேண்­டும் என்­றும் ,அறிக்கை பரிந்­து­ரைத்­துள்­ளது.

அந்த நிறு­வ­னத்­தி­டம் இருந்து சலு­கை­க­ளைப் பெற்­ற­மைக்­காக முன்­னாள் நிதி அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க மீது லஞ்ச ஊழல் மற்­றும் பொதுச் சட்­டங்­க­ளின் கீழ் வழக்­குத் தொட­ரப்­ப­ட­வேண்­டும் என்­றும் , அந்த அறிக்கை கேட்­டுள்­ளது.

இப்­படி அனே­க­மாக எல்­லோ­ரும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­களே இந்த விவ­கா­ரத்­தில் அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வால் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள குற்­றப் பொறுப்­பா­ளர்­கள். அந்த அறிக்கை பெரும் எதிர்­பார்ப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்­னர் மக்­க­ளுக்கு பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டது.

முழு­மை­யாக இல்­லா­விட்­டா­லும் அதன் முக்­கிய பகு­தி­கள் மக்­கள் முன் வைக்­கப்­பட்­டு­விட்­டன. அதே­ச­ம­யத்­தில் முன்­னாள் அரச தலைவர் மகிந்த ராஜ­பக்­ச­வின் காலத்­தில் இடம்­பெற்ற பல பெரு மோச­டி­கள் தொடர்­பாக விசா­ரணை நடத்­திய குழு­வி­னது அறிக்­கை­யும் அரச தலை­வ­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அறிக்கை கைய­ளிக்­கப்­பட்டு பல நாள்­கள் ஆகி­விட்­ட­போ­தும் அதில் என்ன இருக்­கின்­றது என்­கிற விட­யம் நாட்டு மக்­க­ளுக்கு இது­வ­ரை­யில் தெரி­யாது.

பிணை­முறி மோசடி தொடர்­பி­லான அறிக்­கையை மக்­க­ளி­டம் பகி­ரங்­கப்­ப­டுத்த எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட அக்­க­றை­யும் ஆர்­வ­மும் இந்த அறிக்­கை­யைப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தில் காட்­டப்­ப­ட­வில்லை என்­பது கூர்ந்து கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய விட­யம். தேர்­தல் ஒன்று நெருங்கி வரும் நிலை­யில் , ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு எதி­ரான பல தக­வல்­க­ளைக் கொண்­டி­ருந்த ஓர் அறிக்­கை­யைப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தில் சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரான அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஆர்வம் காட்டும் அதேவேளை,மகிந்­த­வுக்கு எதி­ரான அதா­வது சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக இருக்­கக்­கூ­டி­ய­தான அறிக்­கையை வெளி­யி­டா­மல் தாம­தப்­ப­டுத்­து­வ­தன் நோக்­கம் என்ன என்­பது ஆரா­யப்­ப­ட­வேண்­டும். அது பற்­றிக் கேள்வி எழுப்­பப்­ப­ட­வும் வேண்­டும்.

அந்த அறிக்கை மகிந்­த­வுக்கு எதி­ரா­ன­தா­கவோ ஆத­ர­வா­ன­தா­கவோ இருக்­க­லாம். எப்­ப­டி­யி­ருந்­தா­லும் அதனை அறிந்­து­கொள்­வ­தற்­கான முழு உரி­மை­யும் நாட்டு மக்­க­ளுக்கு இருக்­கி­றது. எனவே அந்த அறிக்­கை­யும் உட­ன­டி­யா­கப் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும். அதில் குற்­ற­வா­ளி­க­ளா­கக் காணப்­பட்­ட­வர்­க­ளுக்க எதி­ரா­கச் சட்ட நட­வ­டிக்­கை­க­ளும் எடுக்­கப்­ப­ட­வேண்­டும்.

புதி­ய­தொரு அர­சி­யல் கலா­சா­ரத்தைத் தாம், அடி­மட்­டத்­தில் இருந்து ஆரம்­பிக்­கப் போகி­றார் என்­றும், அத­னை அடித்­த­ள­மான உள்­ளு­ராட்சிச் சபை­க­ளில் இருந்தே ஆரம்­பிக்­கப்­போ­கி­றார் என்­றும் அரச தலை­வர் மைத்­திரி பால சிறி­சேன அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார். உயர் மட்­டத் தலை­வர்­க­ளைத் திருத்­து­வது கடி­னம் என்­றும் திருத்­தத்தை, மாற்­றத்தை அடித்­த­ளத்­தில் இருந்தே ஆரம்­பிக்­க­வேண்­டும் என்­றும் தெரி­வித்­தி­ருந்­தார்.

அப்­படி நேர்­மை­யான அர­சி­யல் ஒன்­றுக்கு அடித்­த­ளம் இடப்­ப­ட­வேண்­டும் என்று அரச தலை­வர் உண்­மை­யி­லேயே விருப்­பம் கொண்­டி­ருந்­தா­ரா­னால், அதனை அவர் செய­லில் காட்­ட­வேண்­டும். தனது கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­க­ளைக் குற்றவா­ளி­ க­ளாக்­கக்­கூ­டிய விசா­ரணை அறிக்­கை­க­ளை­யும், பிணை­முறி அறிக்­கைக்கு கொடுத்த முக்­கி­யத்­து­வத்­து­வத்­துக்கு ஒத்த முக்­கி­யத்­து­வத்­து­டன் வெளி­யி­ட­வேண்­டும். அப்­போ­து­தான் நேர்­மை­யான தலை­வர் ஒரு­வர் தமக்­குக் கிடைத்­தி­ருக்­கி­றார் என்று மக்­க­ளும், அடித்­தள அர­சி­யல் தலை­வர்­க­ளும் நம்­பு­வார்­கள்.

You might also like