உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லு­டன் கலை­யப் போகின்­றது மாற்­றுத் தலைமை என்ற மாயை!

தற்­போ­துள்ள தலை­மை­யைத் தமிழ் மக்­கள் ஏற்­றுக் கொள்­கின்­றார்­களா? அல்­லது மாற்­றுத் தலை­மை­யொன்றை விரும்­பு­கின்­றார்­களா? என்­பதை இடம் பெறப்­போ­கும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் எடுத்­துக் காட்­டி­வி­டும். இன்­றைய நிலை­யைப் பொறுத்த வரை­யில் சம்­பந்­தனே தமி­ழர்­க­ளின் தலை­வ­ரா­கக் கரு­தப்­ப­டு­கின்­றார். அதற்­கு­ரிய தகு­தி­யும், திற­மை­யும் அவ­ரி­ட­முள்­ளது.

ஆனால் வேறு­ சி­லர் சம்­பந்­த­னுக்­குப் பதி­லாக மாற்­றுத்  தலை­மை­யொன்றை உரு­வாக்க வேண்­டு­மெ­னக் கூறு­கின்­ற­னர். கூட்­ட­மைப்­பின் மீதும் சம்­பந்­தன் மீதும் கொண்­டுள்ள காழ்ப்­பு­ணர்வு கார­ண­மா­க­வும் அவர்­க­ளி­டத்­தில் இந்­தச் சிந்­தனை உரு­வா­கி­யி­ருக்­க­லா­மென எண்­ணத் தோன்­று­கின்­றது. சி.வி. விக்­னேஸ்­வ­ரன் அர­சி­ய­லுக்கு வரும் வரை­யில் சம்­பந்­த­னின் தலை­மையை விமர்­சித்து வந்­த­வர்­கள் அவ­ரது வரு­கை­யின் பின்­னரே மாற்­றுத் தலைமை தொடர்­பா­கப் பேசு­வ­தற்கு முன்­வந்­துள்­ள­னர்.

எதிர்­பார்ப்பைச் சித­ற­டித்த  முத­ல­மைச்­சர்

ஓய்வு பெற்ற உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி, ஆன்­மி­கத்­தில் அக்­கறை கொண்­ட­வர், இன­வே­று­பா­டு­க­ளுக்­குத் தமது சொந்த வாழ்க்­கை­யி­லேயே இடம் கொடா­த­வர் போன்ற தகு­தி­களை எடை­போட்­ட­தன் பின்­னரே சம்­பந்­தன் அவ­ரைத் தமிழ்த் தேசிய அர­சி­ய­லுக்கு இழுத்து வந்­தார்.

எப்போதும் முத­ல­மைச்­சர் பத­வியை அவர் பாகு­பா­டின்றி நிறை­வேற்றி வைப்­பா­ரென்ற நம்­பிக்­கை­யும் கூடவே காணப்­பட்­டது. மக்­க­ளும் அவரை முழு­தாக நம்­பி­னார்­கள். அதிக விருப்பு வாக்­கு­களை அளித்து மாகா­ண­ச­பைத்­தேர்­த­லில் அமோக வெற்­றி­யீட்­டச் செய்­த­னர்.

ஆனால் நடந்­தது என்ன? விக்­னேஸ்­வ­ரன் கட்சித் தலை­மையை அலட்­சி­யம் செய்­தார். தம்­மைப்­ப­த­வி­யில் அமர்த்­திய கட்­சியை வெறுத்து ஒதுக்­கி­னார். கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளு­டன் கைகோர்த்து நின்­றார். இன்றுகூட அவர் இந்த நிலை­யி­லி­ருந்து கீழே இறங்­க­வில்லை. மக்­க­ளின் ஆத­ரவு தமக்கு இருக்­கும் வரை­யில் தம்மை எவ­ருமே எது­வும் செய்­து­விட முடி­யாது என்ற ஆண­வத்­து­டன் செயற்­பட்டு வரு­கின்­றார்.

கண்­ணி­யம்­மிக்க கட்­சி­யாக நம்­பப்­ப­டும் இலங்­கைத்
தமிழ் அர­சுக் கட்சி

தமிழ் மக்­கள் ஒரு விட­யத்தை தமது மன­ங்களில் ஊன்­றிப் பதிய வைத்­துக் கொள்­ள­வேண்­டும். அவர்­க­ளது இன்­பத்­தி­லும், துன்­பத்­தி­லும் கூடவே இருந்­த­வர்­கள் கூட்­ட­மைப்­பி­னரே என்ற உண்­மையை அவர்­கள் மறந்து விடக்கூ­டாது. கூட்­ட­மைப்­பில் பிர­தான கட்­சி­யா­கத் திகழ்­கின்ற இலங்­கைத் தமி­ழ் அரசுக்­கட்சி கண்­ணி­யம் மிக்க காந்­தி­ய­வா­தி­யான தந்தை செல்­வா­வி­னால் உரு­வாக்­கப்­பட்­டது.

அன்­றி­லி­ருந்து இன்­று­வரை தமி­ழர்­க­ளின் காவ­ல­னா­கவே அந்­தக்­கட்சி செயற்­பட்டு வரு­கின்­றது. இத­னால் தமி­ழர்­க­ளுக்­குத் தலைமை தாங்­கு­கி்ன்ற தகு­தி­யும் அத­னி­டம் நிறை­யவே காணப்­ப­டு­கின்­றது. சம்­பந்­த­னும் அந்­தக் கட்­சி­யைக் சேர்ந்­த­வர் என்ற வகை­யில் தலை­மைப் பத­விக்­குப் பொருத்­த­மா­ன­வர்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில்­கூட கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளால் ஒன்­றாக இணைந்து செயற்­பட முடி­ய­ வில்லை. தமக்கு ஏற்­ற­வாறு வெவ்­வேறு கட்­சி­களை அமைத்து தேர்­த­லில் போட்­டி­யி­டு­கின்­ற­னர். பதவி ஒன்­றையே இவர்­கள் குறிக்­கோ­ளா­கக் கொண்­டுள்­ள­னரே தவிர தமிழ் மக்­க­ளின் ஐக்­கி­யம் மற்­றும் பிரச்­சி­னைகளை ­ இவர்­கள் சிந்­தித்­துக் கூ­டப் பார்க்­க­வில்லை.

முடி­வெ­டுப்­ப­தில் தடு­மாற்­றத்­துக்கு உள்­ளான சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன்

கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வௌியே­றிய சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் ஏற்­க­னவே மக்­க­ளால் நிரா­க­ரிக் கப்­பட்­ட ஆனந்தசங்­க­ரி­யைத் தஞ்­ச­ம­டைந்­துள்­ளார். இதற்கு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தைக் கார­ண­மா­கக் கூறு­கின்­றார். கஜேந்­தி­ர­கு­மா­ரு­டன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கும் இவ­ரால் முடி­ய­வில்லை.

கஜேந்­தி­ர­கு­மார் எந்த நிலை­யி­லும் சைக்­கிள் சின்­னத்­தைக் கைவி­டு­வ­தற்­குத் தயா­ராக இல்லை. அதில் ஏறிச் சவாரி செய்­வதே தமக்­குச் சௌக­ரி­ய­மென அவர் நம்­பு­கின்­றார். வேறொரு பொதுச்­சின்­னத்தை நாட­வும் அவர் விரும்­ப­ வில்லை. சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனை உத­றித் தள்­ளி­ய­தற்­கும் இதுவே பிர­தான கார­ண­மா­கும்.

சி.வி விக்­னேஸ்­வ­ரனை மாற்­றுத் தலை­மையை ஏற்­கு­மாறு இது­வரை எவ­ருமே அழைத்­த­தா­கத் தெரி­ய­வில்லை. ஒரு­சில ஊட­கங்­கள்­தான் அவ­ருக்­குத் தலைப்­பாகை கட்­டி­வி­டு­வ­தில் முனைப்­பு­டன் செயற்­ப­டு­கின்­றன. மக்­கள் இதைக் கவ­னத்­தில் கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை. தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் தமக்கு உடன்­பாடு இல்­லை­யெ­ன­வும், தமிழ் மக்­கள் பேர­வை­யிலே தமது நிலைப்­பாட்­டுடன் ஒத்­துப் போகத்­தக்­க­வர்­கள் உள்­ள­தா­க­வும் அவர் கூறி வரு­கின்­றார்.

ஆனால் பேர­வை­யில் உள்­ள­வர்­கள் ஆளுக்கு ஆள் பிரிந்து நின்று உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் மல்­லுக்­கட்­டு­வதை இவர்­ ஏற்­க­னவே மறந்து விட்­டார். அடுத்த மாகா­ண­ச­பைத் தேர்­தல் இடம்­பெ­றும்­போ­து­தான் விக்­னேஸ்வ­ர­னின் உண்­மை­யான முகத்­தைப் புரிந்து கொள்ள முடி­யும்.

மாற்­றுத் தலைமை தொடர்­பா­கச் சிந்­தித்துக் காலத்­தைக் கடத்­திக்­கொண்­டி­ருப்­பதை விடுத்து இருக்­கின்ற தலை­மை­யின் கரங்­க­ளைப் பலப்­ப­டுத்­த­வ­தற்கு அனை­வ­ரும் முன்­வர வேண்­டும். தவ­று­கள் ஏதா­வது இருப்­பின் ஆக்­க­பூர்­வ­மான ஆலோ­ச­னை­களை வழங்­கு­வ­தன் மூல­மா­கவே அவற்­றைத்­தி­ருத்­திக்­கொள்ள முடி­யும். உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் சில­ரின் கண்­க­ளைத் திறந்து விடு­மென எதிர்­பார்க்­க­லாம்.

You might also like