147 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்

எல்லை தாண்டி மீன் பிடித்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­டி­ருந்த 147 இந்­திய மீன­வர்­களை பாகிஸ்­தான் நேற்­று­முன்­தி­னம் விடு­தலை செய்தது.

இந்­தியா, பாகிஸ்­தான் இரு­நாட்டு மீன­வர்­க­ளும் எல்லை தாண்டி மீன் பிடிப்­ப­தும் பின் அந்­தந்த நாட்டு கடற்­ப­டை­யால் கைது செய்­யப்­ப­டு­வ­தும் தொடர்­க­தை­யாக உள்­ளது. கடந்த வரு­டத்­தில் மட்­டும் சுமார் 400 இந்­திய மீன­வர்­கள் பாகிஸ்­தான் கடற்­ப­டை­யால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

பாகிஸ்­தான் அய­லு­ற­வுத்­துறை கடந்த மாதம் வெளி­யிட்ட அறிக்­கை­யொன்­றில், ‘அத்­து­மீறி மீன்­பி­டித்த 300 இந்­திய மீன­வர்­கள் அடுத்த ஒரு மாதத்­துக்­குள் விடு­விக்­கப்­ப­டு­வார்­கள்’ என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

கடந்த மாதம் 28ஆம் திகதி 145 இந்­திய மீன­வர்­கள் முதல் கட்­ட­மாக விடு­விக்­கப்­பட்­ட­னர். இரண்­டாம் கட்­ட­மாக மேலும் 147 இந்­திய மீன­வர்­கள் நேற்­று­முன்­தி­னம் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

You might also like