கப்­பல்­கள் மோதி விபத்து

ஈரா­னில் இருந்து கச்சா எண்­ணெய் ஏற்­றிச் சென்ற சரக்­குக் கப்­பல் சீன கடற்­ப­ரப்­பில் வேறொரு சரக்­குக் கப்­ப­லுடன் மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தில் 32 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

ஈரா­னி­யக் கப்­ப­லில் ஒரு லட்­சத்து 36 ஆயி­ரம் தொன் எண்­ணெய் இருந்­தது என்று சொல்­லப்­ப­டு­கி­றது. இந்­தக் கப்­பல் சீன எல்­லை­யூ­டாக தென்­கொ­ரி­யா­வுக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­தது.

மறு­மு­னை­யில் அமெ­ரிக்­கா­வில் இருந்து 64 ஆயி­ரம் தொன் உண­வுப் பண்­டங்­க­ளு­டன் சீனாவை நோக்கி வந்­து­கொண்­டி­ருந்த கப்­ப­லு­ட­னேயே குறித்த கப்­பல் மோதி விபத்­துக்கு உள்­ளா­னது. 32 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

அவர்­க­ளில் 30 பேர் ஈரா­னைச் சேர்ந்­த­வர்­கள். இரு­வர் பங்­க­ளா­தேஷைச் சேர்ந்­த­வர்­கள். விபத்­துத் தொடர்­பில் மேல­திக விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

You might also like