ஆயு­தக் குழுக்­க­ளுக்கு நிதி வழங்­கு­வ­தற்கு பாகிஸ்­தா­னில் தடை

மும்பை தாக்­கு­தல்தாரி ஹபீஸ் சயீத்­தின், ஜமாத் உத் தவா உள்­ளிட்ட 72 ஆயு­தக் குழுக்­க­ளுக்கு நிதி வழங்­கத் தடை விதித்து பாகிஸ்­தான் அரசு அதி­ரடி உத்­த­ரவு பிறப்­பித் துள்­ளது.

உல­க­ளா­விய பயங்­க­ர­வாத ஒழிப்பு நட­வ­டிக்­கை­யில் அமெ­ரிக்­கா­வின் கூட்­டா­ளி­யாக இருந்து வரு­கி­றது பாகிஸ்­தான். இதற்­காக அமெ­ரிக்­கா­வி­டம் இருந்து பெரும்­தொகை நிதி­யு­த­வி­யைப் பெற்­று­வந்­தது பாகிஸ்­தான்.

எனி­னும் தனது பகு­திக்­குள் இருக்­கும் ஆயு­தக் குழுக்க­ ளுக்கு எதி­ராக பாகிஸ்­தான் காத்­தி­ர­மான நட­வ­டிக்­கையை எடுக்­க­வில்லை என்று அமெ­ரிக்கா குற்­றம் சுமத்தி வந்­தது.

இதை­ய­டுத்து பாகிஸ்­தா­னுக்கு வழங்­கி­வந்த மில்­லி­யன் கணக்­கான நிதி­யு­த­வியை நிறுத்­து­மாறு உத்­த­ர­விட்­டார் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப். பாகிஸ்­தா­னுக்கு அமெ­ரிக்­கா­வால் வழங்­கப்­பட்ட பாது­காப்பு உத­வி­க­ளும் நிறுத்­தப்­பட் டன.

பாகிஸ்­தான், ஆயு­தக் குழுக்­க­ளுக்கு எதி­ராக அந்த நாடு செயற்­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்­தி­னால் மட்­டுமே நிறுத்­தப்­பட்ட உத­வி­கள் மீண்­டும் வழங்­கப்­ப­டும் என்று அமெ­ரிக்கா எச்­ச­ரித்­தி­ருந்­தது. இந்­தப் பின்­ன­ணி­யி­லேயே குறித்த 72 ஆயு­தக் குழுக்­க­ளுக்கு பண உதவி வழங்­கத் தடை விதித்­துள்ளது பாகிஸ்தான்.

You might also like