காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வு­களைச் சந்­தித்­தார் ஹரி ஆனந்த சங்­கரி

கனே­டிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் உ.ஹரி ஆனந்த சங்­கரி முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு பய­ணம் மேற்­கொண்டு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளை­யும், கேப்­பா­பு­ல­வில் போராட்­டம் நடத்­தும் மக்­க­ளை­யும் விடு­விக்­கப்­பட்ட இடங்­க­ளை­யும் பார்­வை­யிட்­டுள்­ளார்.

முல்­லைத்­தீவு மாவட்ட செய­ல­கத்­துக்கு முன் காணா­மல்­போ­னோர்­கள் நடத்­தி­வ­ரும் போராட்ட கொட்­ட­கைக்கு நேற்று­க் காலை சென்ற அவர் அங்கு காண­மல் போன­வர்­க­ளின் உற­வி­னர்­களைச் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார்.

இதன்­போது, ‘முந்நூறு நாள்­க­ளுக்கு மேலாக போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வ­ரும் காணா­மற் போன­வர்­க­ளின் விட­யத்­தில் இங்­குள்ள அர­சி­யல்­த­லை­வர்­களையோ அரச அதி­கா­ரி­களையோ நம்பி பலன் இல்லை என்­றும் இனி உலக நாடு­க­ளைத் தான் நம்பி இருக்­கின்­றோம்’ என காணா­மல் போன­வர்­க­ளின் உற­வு­கள் தெரி­வித்­த­னர்.

இதனை தொடர்ந்து கேப்­பா­பு­ல­வில் போராட்­டம் நடத்­தும் மக்­க­ளின் போராட்ட கொட்­ட­கைக்கு சென்று அங்கு போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­ப­வர்­க­ளை­யும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளார்.

இதன்­போது மக்­கள், தங்­கள் ஆதங்­கங்­களை தெரி­வித்­த­னர். ‘இது­வரை எந்த அர­சி­யல்­வா­தி­களோ அல்­லது அர­சி­யல் தலை­வர்­களோ எங்­களை வந்து பார்க்­க­வில்லை. எங்­க­ளின் 38 குடும்­பங்­க­ளின் 111 ஏக்­கர் காணி­யைத் தான் விடு­வித்­துள்­ளார்­கள் ஏனைய 100 குடும்­பங்­க­ளின் காணி­க­ளி­லும் தற்­போ­தும் புதி­தாக கட்­ட­டங்­களை கட்­டும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ளார்­கள்.

இதனை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்தி விடு­ விக்­கப்­ப­டாத காணி­க­ளை­யும் விடு­விக்க உலக நாடு­கள்­தான் இலங்கை அர­சுக்கு அழுத்­தம் கொடுக்க வேண்­டும். உண்­மை­யில் இது உல­கத்­தின் கவ­னத்­துக்கு திருப்­ப­வேண்­டும். காணி­கள் விடு­விக்­கப்­ப­டும் வரை போராட்­டம் தொட­ரும்’ என்று அவ­ரி­டம் தெரி­வித்­துள்­ளார்­கள்.

இதன்­பின்­னர் விடு­விக்­கப்­பட்ட காணி­க­ளின் இடங்­களை நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்­ள­து­டன் இன்­னும் விடு­விக்­கப்­ப­டா­மல் படை­யி­ன­ரின் முகாம்­கள் அமைந்­துள்ள பகு­தி­யில் பாட­சாலை கட்­ட­டங்­க­ளை­யும் பார்­வை­யிட்­டு­ள்ளார்.அதன்­போது, ‘நான் இங்கு வந்து பார்­வை­யிட்டு மக்­க­ளின் பிரச்­சி­னையை கனே­டிய நாடா­ளுமன்­றி­லும் ஐ.நா சபை­யி­லும் குரல் கொடுத்து வரு­வேன்’ என்று ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­துள்­ளார்.

You might also like