கசிப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் மூவர் கைது!

மிதி­வெடி அகற்­றப்­ப­டாத பகு­திக்­குள் சென்று கசிப்பு உற்­பத்­தி­யில் ஈடு­பட்­ட­னர் என மூன்று சந்­தேக நபர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என பளை பொலிஸ் நிலை­யத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கிளி­நொச்சி பளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட முக­மாலை வடக்கு பகு­தி­யில் கசிப்பு உற்­பத்தி இடம்­பெ­று­கின்­றது என பொலி­ஸா­ருக்கு கிடைத்த ரக­சிய தக­வலை அடுத்து அங்கு சென்ற பொலி­ஸார் சந்­தே­கத்­தின் பேரில் மூவரை கைது செய்­துள்­ள­னர் என­வும் அவர்­க­ளி­டம் இருந்து 46 போத்­தல் கசிப்­பும், ஒரு பெரல் கோடா­வும், கசிப்பு உற்­பத்தி உப­க­ர­ணங்­க­ளும் கைப்­பற்­றப்­பட்டு விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­கின்­றன என­வும் தெரி­வித்­த­னர்.

மேல­திக விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவர்­களை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற் கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என பளை பொலிஸ் நிலை­யத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

You might also like