கர்ப்­பி­ணித் தாய்­மார்­கள் வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டம்

மன்­னார் மாவட்ட பொது மருத்­து­வ­ம­னைக்கு முன் கர்ப்­பி­ணித்­தாய்­மார்­கள் வீதியை மறித்து நேற்று ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­த­னர்.

பரி­சோ­த­னைக்­குச் சென்ற கர்ப்­பி­ணித்­தாய்­மார்­கள் அங்கு மகப்­பேற்று மருத்­துவ நிபு­ணர் இல்­லாத கார­ணத்­தால் மீண்­டும் ஒரு தினத்துக்­கு வரு­மாறு திருப்பி அனுப்­பப்­பட்­ட­னர். தொடர்ந்­து இவ்­வ­ா­று திருப்பி அனுப்­பப்­ப­டு­வ­தைக் கண்­டித்தே இந்த ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­த­னர்.

மருத்­து­வ­ம­னை­யில் தொடர்ச்­சி­யாக இவ்­வா­றான சம்­ப­வங்­கள் இடம் பெற்று வரு­வ­தைத் தடுக்க வேண்டும் என­வும் நிரந்­த­ர­மான ஒரு மகப்­பேற்று மருத்­து­வ நிபு­ணரை நிய­மிக்கவேண்­டும் எனவும் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­டோர் தெரி­வித்­த­னர்.

மன்­னார் மாவட்ட பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் திரு­மதி யூட் ரதனி மற்­றும் உதவி பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் றோய் பீரிஸ் ஆகி­யோர் ஆர்ப்­பாட்­ட இடத்­துக்குச் சென்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்ட மக்­க­ளு­டன் பேச்­சு­ நடத்­தி­னர்.

மன்­னார் மாவட்ட பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் திரு­மதி யூட் ரதனி உயர் அதி­கா­ரி­க­ளின் கருத்­துக்கு அமை­வாக இந்­தப் பிரச்­சி­னைக்கு உட­ன­டி­யாக தீர்வைப் பெற்று தரு­கி­றேன் என்று உறு­தி­மொ­ழி­வ­ழங்­கி­னார். இதனை அடுத்து ஆர்ப்­பாட்­டம் சுமுக நிலைக்கு வந்­தது.

You might also like