குளங்­களை மறு­சீ­ர­மைக்­கும் இரா­ணு­வம்!!

இரா­ணு­வம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தில் உள்ள 500 நடுத்­தர அள­வு­டைய குளங்­களை மறு­சீ­ர­மைப்­புச் செய்­ய­வுள்­ளது.இரா­ணு­வத்­தின் களப் பொறி­யி­யல் பிரிவு குளங்­களை மறு­சீ­ர­மைக்­கும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்­ளது.

கடந்த 2016ஆம் அண்டு ஒக்­ரோ­பர் மாதம் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்­தத் திட்­டத்­தின் கீழ் இது­வரை 16 குளங்­கள் மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ணு­வம் தெரி­வித்­துள்­ளது.

இரா­ணு­வத்­தின் மூன்­றில் ஒரு பகுதி ஆள­ணியை நாட்­டின் அபி­வி­ருத்தி வேலைக்­குப் பயன்­ப­டுத்­தும் திட்­டம் ஒன்று இரா­ணு­வத் தள­பதி லெப்.ஜென­ரல் மகேஸ் சேன­நா­யக்­க­வி­னால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­க­மை­யவே, குளங்­களை மறு­சீ­ர­மைக்­கும் வேலை­க­ளில் இரா­ணு­வம் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ளது.அத்­து­டன், திரு­கோ­ண­ மலை மாவட்­டத்­தில் உள்ள பின்­தங்­கிய பகு­தி­க­ளில் உள்ள பாட­சா­லை­க­ளில் அடுத்த 5 ஆண்­டு­க­ளில் 100 ஆசி­ரி­யர் விடு­தி­களை அமைக்­க­வும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

You might also like