மீன்­களை திருடி விற்ற பணி­யா­ள­ருக்கு பணித்­தடை!!

கிளி­நொச்­சிப் பொதுச் சந்­தை­யில் மீன் வியா­பாரி ஒரு­வ­ரின் மீன்­களை திருடி விற்­பனை செய்த குற்றச்சாட்டில் கரைச்சி பிர­தேச சபை­யின் துப்பு­ர­வுப் பணி­யா­ளர் ஒரு­வ­ருக்கு பணித்­தடை வழங்­கப்­பட்­டுள்­ளது. ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்­கா­கவே அவர் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கிளி­நொச்சி மீன் சந்­தை­யில் கடந்த சனிக்­கி­ழமை வியா­பாரி ஒரு­வர் வியா­பார நட­வ­டிக்­கை­களை முழுமை செய்த பின்­னர் இறால், கண­வாய் மற்­றும் மீன்­களை ஐஸ் பெட்­டி­யில் வைத்து பூட்­டி­விட்­டுச் சென்­றி­ருக்­கின்­றார்.

மறு­நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை மீண்­டும் காலை­யில் வியா­பா­ரத்தை ஆரம்­பிப்­ப­தற்கு ஆயத்­த­மான போது சுமார் 20 கிலோ கிராம் அள­வில் இறால் மற்­றும் கண­வாய் குறை­வா­கக் காணப்­பட்­டுள்­ளது.

அதைத் தொடர்ந்து விசா­ரணை செய்த போது கரைச்சி பிர­தேச சபை­யின் பணி­யா­ளர் ஒரு­வர் உண­வ­கம் ஒன்­றுக்கு இறால் மற்­றும் கண­வாய்­களை விற்­பனை செய்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து குறித்த வியா­பாரி கரைச்சி பிர­தேச சபை­யின் செய­லா­ள­ரின் கவ­னத்­துக்கு விட­யத்தைக் கொண்டு சென்­றுள்­ளார். சம்­ப­வம் தொடர்­பில் விசா­ரணை செய்த கரைச்சி பிர­தேச செய­லா­ளர் க.கம்­ச­ நா­தன் குறித்த துப்பு­ரவு பணி­யா­ள­ருக்கு உட­ன­டி­யாக பணித்­தடை விதித்து நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார்.

You might also like