தடம்­பு­ரண்ட ஜேசி­பி­யின் கீழ் சிக்கி – மாண­வன் உயிரிழப்பு!!

முழங்­கா­வி­லில் கோரச் சம்­ப­வம்

வேக­மாகப் பய­ணித்த ஜேசிபி வாக­னம் திடீ­ரெ­ னத் தடம்­பு­ரண்­டது. அதில் நசி­யுண்ட மாண­வன் சம்­பவ இடத்­தி­லேயே பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார்.

இந்­தக் கோரச் சம்­ப­வம் நேற்று கிளி­நொச்சி, முழங்­கா­வில் கண்­ணண் ஆல­யப் பகு­தி­யில் நடந்­துள்­ளது. முழுங்­கா­வில் தேசிய பாட­சா­லை­யில் கல்வி கற்­கும் உத­ய­காந்­தன் பிர­சாந்த் (வயது-15) என்ற மாண­வனே உயி­ரி­ழந்­தான்.

பிர­சாந்த் வழமை போன்று தனி­யார் கல்வி நிலை­யத்­துக்­குச் சென்­று­விட்டு நண்­பர்­க­ளு­டன் வீடு திரும்­பி­ய­போதே இந்த அசம்­பா­வி­தம் நடந்­துள்­ளது. நண்­பர்­கள் தப்­பிக்­கொள்ள பிர­சாந்த் வாக­னத்­துக்­குக் கீழ் சிக்­கிக் கொண்­டுள்­ளான்.

தடம் புரண்ட வாக­னத்­தைத் தூக்­கு­வ­தற்கு வேறொரு ஜேசிபி வர­வ­ழைக்­கப்­பட்டு தூக்­கப்­பட்­டது. அதன் பின்­னரே மாண­வன் மீட்­கப்­பட்­டான் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

“ஜேசி­பி­யின் சார­தி­யும் பலத்த காயங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளார். அவர் மருத்­து­வ­ம­னை­யில் பொலி­ஸா­ரின் பாது­காப்­பில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்­கான சிகிச்­சை­க­ளின் பின்­னர் கைது செய்­யப்­ப­டு­வார். இது தொடர்­பான விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­கின்­றன.”- என்று முழங்­கா­வில் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like