கச்­ச­தீவுக்கு இம்முறை 10 ஆயிரம் பக்தர்கள்!!!

கச்­ச­தீவு புனித அந்­தோ­னி­யார் ஆலய வரு­டாந்தத் திரு­விழா எதிர்­வ­ரும் பெப்­ர­வரி மாதம் 23,24 ஆம் திக­தி­க­ளில் நடை­பெ­ற­வுள்­ளது. அதில் இலங்­கை­யில் இருந்து 10 ஆயி­ரம் பக்­தர்­கள் கலந்து கொள்வார்­கள் என்று யாழ்ப்பாண மாவட்ட செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார்.

திரு­வி­ழா­வுக்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளும் நடை­பெற்று வரு­கின்­றன என்­றும் அவர் குறிப்­பிட்­டார். கச்­ச­தீவு திரு­வி­ழா­வுக்­கான முன்­னாய்ந்த கலந்­து­ரை­யா­டல் ஒன்று நேற்று யாழ்ப்­பா­ணம் மாவட்ட செய­லர் தல­மை­யில் மாவட்ட செய­ல­கத்­தில் நடை­பெற்­றது. அதன்­பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­தா­வது-,

கச்­ச­தீ­வில் இந்த முறை இரு நாட்­டில் இருந்­தும் அதி­க­ள­வான பக்­தர்­கள் கலந்து கொள்­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இலங்­கை­யில் இருந்து 10 ஆயி­ரம் பக்­தர்­கள் கலந்­து­கொள்­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதற்கு ஏற்ற வகை­யில் விசேட ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றன.  திரு­விழா ஒழுங்­கு­க­ளுக்­கு­ரிய பிர­தான பொறுப்பை கடற்­ப­டை­யி­னர் ஏற்­றுள்­ள­னர்.

ஏனைய துறை­யி­னர் ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தன் படி தத்­த­மது சேவை­களை மேற்­கொள்ள வேண்­டும் என­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பக்­கர்­க­ளின் நலன் கருதி நிரந்­தர மல­சல கூட வச­தி­கள் மற்­றும் மேல­தி­க­மாக தற்­கா­லிக மல­சல கூட வச­தி­கள் என்­பன ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

எதிர்­வ­ரும் பெப்­ர­வரி மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து குறி­கட்­டு­வன் வரை­யான பேருந்து சேவை அதி­காலை 4 மணி­யில் இருந்து நண்­ப­கல் 1 மணி­வரை நடை­பெ­றும். குறி­கட்­டு­வ­னில் இருந்து கச்­ச­தீவு வரை காலை 5 மணிக்கு ஆரம்­பித்து 2 மணி வரை நடை­பெ­றும். பட­குச் சேவைக்­கான ஒரு­வழி கட்­ட­ண­மாக 300 ரூபா அற­வி­டப்­ப­ட­வுள்­ளது. நெடுந்­தீ­வில் இருந்து கச்­ச­தீ­வுக்கு ஒரு வழி கட்­ட­ண­மாக 225 ரூபா அற­வி­டப்­ப­ட­வுள்­ளது.

சேவை­யில் ஈடு­ப­டும் பட­கு­கள் பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே சேவைக்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வுள்­ளன. பய­ணி­கள்­பா­து­காப்பு அங்கி அணு­ய­வேண்­டும் என்­பது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

பொலிஸ் பாது­காப்பு வச­தி­கள் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 200 பொலி­ஸார் சேவை­யில் ஈடு­ப­ட­வுள்­ள­னர். பய­ணி­கள் படகு சேவை இடம்­பெ­றும் போது கடற்­படை ரோந்து நட­வ­டிக்­கை­கள் நடை­பெ­றும்.-என்­றார்.

You might also like