அட்­டமி, நவமி பிரச்­சி­னை­யை­யும் ஆராய்ந்­தது மாகாண சபை!!

வடக்கு மாகாண சபை­யின் அமர்வை அட்­டமி நவ­மி­யில் ஆரம்­பித்­தமை சரியா? தவறா? என்று நேற்று ஆராய்ந்­தது வடக்கு மாகாண சபை. அது தொடர்­பாக இறு­தி­வரை முடி­வெ­டுக் கப்­ப­ட­வில்லை.

வடக்கு மாகாண சபை­யின் நடப் பாண்­டுக்­கான முத­லாம் அமர்வு கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் அவைத்­த­லை­வர் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. அமர்வு ஆரம்­பிக்­கும்­போது முத­ல­மைச்­சர், அமைச்­சர்­கள் உட்­ப­டச் சில உறுப்­பி­னர்­களே அவை­யில் இருந்­த­னர். அவை ஆரம்­ப­மா­கி­ய­தும் அவைத்­த­லை­வர் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்­கும் புத்­தாண்டு வாழ்த்­துத் தெரி­வித்­தார்.

அதன் பின்­னர் அவைத்­த­லை­வர் அறி­வித்­தல் அறி­விக்­கப்­பட்­டது. பின்­னர் ஒரு சில உறுப்­பி­னர்­கள் பொது முக்­கி­யத்­து­வம் வாய்ந்த விட­யம் என்­று­கூ­றிச் சில விட­யங்­க­ளைக் கூறி­னார்­கள்.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் தவ­நா­தன் மாகாண சபை­யின் நிதி திரும்பி செல்­வது தொடர்­பான கருத்­துக்­க­ளைக் கூறிக்­கொண்டு, “அட்­டமி நவ­மி­யில் அமர்­வைத் தொடங்­கி­யுள்­ளீர்­கள், என்ன நடக்­கப்­போ­குதோ!” என்று கூறி அமர்ந்­தார்.

பல­ரும் அது தொடர்­பில் முணு­மு­ணுத்­த­னர். அப்­போது அவைத்­த­லை­வர் “அட்­டமி நவமி போன்­ற­வற்றை சகோ­தர மதத்­த­வர்­கள் பார்ப்­ப­தில்லை. சிலர் அட்­டமி நவ­மி­க­ளில் நல்ல விட­யங்­க­ளை­யும் செய்­கின்­ற­னர். நாடா­ளு­மன்­ற­மும் அட்­டமி நவ­மி­யில் கூட்­டப்­ப­டு­வது வழ­மை­தான். அத­னைப் பற்றி அலட்­டிக் கொள்­ளத் தேவை­யில்லை. உங்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை விட்­டு­விட்டு பொதுப் பிரச்­சி­னைக்­குள் வாருங்­கள்”.-என்­றார்.

பின்­னர் சபை­யில் சில விட­யங்­கள் ஆரய்­யப்­பட்­டன. எனி­னும் அட்­டமி நவமி முணு­மு­ணுப்­பு­கள் ஓய­வில்லை. இவ்­வா­றாக வழ­மை­யாக ஆரா­யப்­ப­டும் விட­யங்­க­ளைப் போல அல்­லாது ஒரு சில விட­யங்­கள் மட்­டும் ஆரா­யப்­பட்டு மாகாண சபை அமர்வு முற்­ப­க­லு­டன் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண சபை­யின் ஒரு அமர்­வுக்கு 5 இலட்­சம் ரூபா வரை­யில் செல­வி­டப்­ப­டு­கின்­றன.

You might also like