யாழ்ப்பாணத்தில் இருந்து சிதம்­ப­ரத்­துக்குச் செல்ல 140 பேர் பதிவு!!

இந்­தி­யா­வின் சிதம்­பர ஆல­யத்­துக்கு செல்­வ­தற்கு யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இருந்து இது­வ­ரைக்­கும் 140 பேர் பதிவு செய்­துள்­ள­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிதம்­பர ஆல­யத்­துக்குச் கப்­பல் மூலம் செல்ல விரும்­பு­வோர் பதி­வு­களை மேற்­கொள்ள முடி­யும் என்று நேற்­று­முன்­தி­னம் தெரி­விக்­கப்­பட்­டது. வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­லத்­தின் இந்து கலா­சார திணைக்­கள அதி­கா­ரி­க­ளி­டம் பதி­வு­களை மேற்­கொள்ள முடி­யும்.

யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து செல்­வோர் காங்­கே­சன் துறை­மு­கத்­தில் இருந்து சென்­னைக்குச் சென்று பின்­னர் சென்­னை­யில் இருந்து பேருந்­தின் மூலம் சிதம்­ப­ரம் அழைத்­துச் செல்­லப்­ப­டு­வர். பதிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அடிப்­ப­டை­யில் சிதம்­ப­ரம் செல்­வ­தற்­கான காலம், பய­ணத்­துக்­கான தொகை என்­பன தீர்­மா­னிக்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like