தாளம் தப்­பிப் பாடும் மகிந்த ராஜ­பக்ச !!

தெற்­கில் உள்ளூ­ராட்சிச் சபைத் தேர்­த­லின் பேசு­பொ­ருள் மாறி­விட்­ட­பின்­ன­ரும் , பழைய பல்­ல­வி­யையே திரும்­பத் திரும்பப் பாடி­வ­ரும் மவு­சு­போன பாட­க­ரைப் போன்று பேசி வரு­கி­றார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச.

உள்ளூ­ராட்சிச் சபைத் தேர்­தல் அறி­விக்­கப்­பட்­ட­போது அதன் மைய பேசு­பொ­ரு­ளாக புதிய அர­ச­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­க­ளும், ஏற்­க­னவே வெளி­யாகி இருக்­கும் இடைக்­கால அறிக்­கை­யும் இருக்­கும் என்று கணிக்­கப்­பட்­டது என்­னவோ உண்­மை­தான்.

அதனைக் கருத்­திற்கொண்டே தாமரை மொட்­டுக்கு ஆத­ரவு தெரி­வித்து நடத்­தப்­பட்ட முத­லா­வது பரப்­பு­ரைக்­கூட்­டத்­தி­லும் மகிந்த ராஜ­பக்ச இந்த விட­யத்தை ஓங்கி முழங்­கி­னார். உயிர்த் தியா­கம் செய்து படை­யி­னர் போரா­டி­யது தமி­ழீ­ழத்தை வழங்­கவா என்று உரத்­துக் குரல் கொடுத்­தார்.

அவ­ரு­டைய தேர்­தல் பரப்­புரை எதை­நோக்­கிச் செல்­லும் என்­ப­தை­யும், சிங்­கள அடித்­தட்டு மக்­களை உசுப்­பி­விட்டு அந்த நெருப்­பில் குளிர்­காய அவர் முயற்­சிக்­கி­றார் என்­ப­தை­யும் அவ­ரது அந்த உரை மிகத் தெளி­வாக எடுத்­துக்­காட்­டி­யது. ஆனால், பிணைமுறி மோசடி தொடர்­பான விசா­ரணை அறிக்கை வெளி­யான நாள் முதல் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே, அதா­வது சிங்­கள மக்­கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பகு­தி­க­ளில் முதன்­மை­யான பேசு­பொ­ருள், கோடிக்­க­ணக்­கில் நடந்­துள்ள பண மோசடி பற்­றி­ய­தாக மாறி­யது.

அந்த மாற்­றம் ,இயல்­பா­கவே உள்ளூ­ராட்­சித் தேர்­த­லின் பேசு­பொ­ரு­ளை­யும் பிணை முறி மோசடி குறித்­த­தாக மடை­மாற்றி இழுத்­துச் சென்­று­விட்­டது. இப்­போது தெற்­கின் ஒரே­யொரு பேசுபொருள் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யைச் சார்ந்­த­வர்­கள் எத்­தனை கோடி ரூபாவை மோசடி செய்­தார்­கள், மகிந்த ராஜ­பக்ச காலத்­தில் சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் எத்­த­னை­ கோ­டியை மோசடி செய்­தார்­கள் என்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கி­றது.

புதிய அர­ச­மைப்பு, இடைக்­கால அறிக்­கை­க­ளைப் போன்­றில்­லா­மல் இந்த மோசடி விட­யம் புதி­தா­க­வும் சுவை­யா­ன­தா­க­வும் கற்­ப­னை­களை விரி­வாக்­கம் செய்­யக்­கூ­டி­ய­தா­க­வும் இருப்­ப­தால் மக்­கள் மத்­தி­யி­லும் அது தொடர்­பான விவா­தங்­க­ளின் மீது ஆர்­வம் ஏற்­பட்­டுள்­ளது. ஊட­கங்­கள், அர­சி­யல்­வா­தி­கள் எல்­லோ­ர­தும் பேசு­பொ­ரு­ளாக அதுவே மாறி­யி­ருக்­கி­றது.

இவ்­வாறு நிலமை முற்­றி­லும் மாறி­விட்ட பின்­ன­ரும், மகிந்த மட்­டும் தாளம் தப்பி மீண்­டும் மீண்­டும் பழைய பல்­ல­வி­யையே பாடிக்­கொண்­டி­ருக்­கின்­றார். தமி­ழீ­ழமா ஒற்­றை­யாட்­சியா என்­ப­தைத் தீர்­மா­னிப்­ப­தற்­கான தேர்­தல் இது என்று மக்­களை உசுப்­பி­வி­டு­வ­தற்கு அவர் முயற்­சிக்­கி­றார்.

அர­சி­யல்­வா­தி­க­ளின் பண மோச­டிக் கணக்­கு­களை ஆராய்ந்து அலசி சிலா­கித்­துத் திட்­டித் தீர்ப்­ப­தில் ஒரு­வித சுய­இன்­பம் கண்­டு­கொண்­டி­ருக்­கும் மக்­கள் கூட்­டம், மகிந்தவின் உசுப்­பேற்­ற­லுக்கு எழுந்து நின்று ஆடு­வது இப்­போ­தைக்கு நடக்­கக்­கூ­டி­ய­தொன்­றல்ல. எனவே இடைக்­கால அறிக்­கையை மிகைப்­ப­டுத்தி விவ­ரித்து, அது தமிழ் மக்­க­ளுக்கு எல்­லா­வற்­றை­யும் தூக்­கிக்­கொ­டுத்­து­வி­டும் என்­பது போன்று காட்டி வாக்­கு­வேட்­டை­யா­டும் மகிந்­த­வின் உத்தி, எதிர்­வ­ரும் உள்ளூராட்­சித் தேர்­த­லில் உளுத்­துப்­போன உத்­தி­யா­கத்­தான் இருக்­க­மு­டி­யும்.

மகிந்­த­வுக்கும் வேறு வழி­யில்லை. பிணை முறி மோசடி அறிக்­கையை அள­வுக்­க­தி­க­மாக மக்­க­ளி­டம் எடுத்­துச் சென்­றால் பின்­னர் தனது ஆட்­சிக்­கால விசா­ரணை என்­கிற ஆப்பு தயா­ராக இருப்­ப­தும் அவ­ருக்­குத் தெரி­யும்.

ஒரு கட்­டத்துக்கு மேல் ஐக்­கிய தேசி­யக் கட்­சியை பிணை­மு­றிப் பொறிக்­குள் விழ­வைக்­கும் உத்­தி­யோடு பரப்­புரை வியூ­கத்தை முன்­னெ­டுத்­துச் சென்­றால், அதுவே தனது எதிர்­கால அர­சி­ய­லுக்­கும் படு­கு­ழி­யைத் தோண்­டி­வி­டும் என்­ப­தா­லும், மகிந்த பிணை­முறி விவ­கா­ரத்­தில் இருந்து தனது பரப்­புரை வண்­டியை வெளியே இழுப்­ப­தற்கு இடைக்­கால அறிக்கை மற்­றும் புதிய அர­ச­மைப்பு விட­யங்­க­ளைப் பயன்­ப­டுத்த முயற்­சிக்­கக்­கூ­டும்.

ஆனால், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சுதந்­தி­ரக் கட்­சி­யும், ஜேவி­பி­யும் இடைக்­கால அறிக்­கை­யை­யும் புதிய அர­ச­மைப்பு முயற்­சி­யை­யும் மறந்­து­விட்டு பிணை­முறி மோசடி விவ­கா­ரத்­திற்­குள்­ளேயே மூழ்­கிப்­போ­யி­ருக்­கும் நிலை­யில், மகிந்­த­வால் மட்­டும் பரப்­பு­ரைக் களத்தை அதற்கு வெளியே இழுத்­தெ­டுத்­து­வி­ட­மு­டி­யும் என்று தோன்­ற­வில்லை. அத­னால் அவ­ரது பாடல் அப­சு­ரு­தி­யு­ட­னும் தாளம் தப்­பி­ய­தா­க­வும் இருப்­பது தவிர்க்க முடி­யா­தது.

You might also like