பெற்­றோர் விழிப்­ப­டை­யா­த­வரை  துர்­ந­டத்­தையை தடுக்க முடி­யாது!!

சிறு­வர் துர்­ந­டத்தை தொடர்­பில் விழிப்­பு­ணர்­வு­க­ளும் அத­னைத் தடுப்­ப­தற்­கான செயற்­றிட்­டங்­க­ளும் பல்­வேறு மட்­டங்­க­ளில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனா­லும் துர்­ந­டத்­தைச் சம்­ப­வங்­கள் தொடர்ந்து நடை­பெற்­றுக் கொண்டே இருக்­கின்­றன. பெற்­றோர் விழிப்­ப­டை­யா­த­வரை இத­னைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது. இவ்­வாறு திரு­கோ­ண­மலை மாவட்ட நீதி­பதி ஹம்ஸா தெரி­வித்­தார்.

மாண­வர் மதிப்­பு­றுத்­தல் நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தில் கடந்த காலங்­க­ளில் அதி­க­ள­வான சிறு­வர் துர்­ந­டத்தை வழக்­கு­கள் நீதி­மன்­றங்­க­ளில் பதி­வா­கி­யுள்­ளன. சிறிய மற்­றும் பெரி­ய­ள­வி­லான நட­வ­டிக்­கை­க­ளாக இருந்த போதி­லும் இதில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­கள் பிள்­ளை­க­ளின் நெருங்­கிய உற­வி­னர்­க­ளா­கவே இருப்­பது தெரி­ய­வ­ரு­கின்­றது.

சிறு­வர்­களை நெருங்­கிய உற­வி­னர்­க­ளு­டன் பழக விடும் போது பெற்­றோர் மிகக் கவ­ன­மாக இருக்க வேண்­டும்.

பாட­சா­லை­க­ளுக்­கும் மேல­திக வகுப்­புக்­க­ளுக்­கும் தங்­க­ளது குழந்­தை­களை சார­தி­க­ளு­டன் அனுப்பி விட்டு பெற்­றோர்­கள் அது­பற்றி அக்­க­றை­யற்று இருக்­கின்­ற­னர்;. இங்­கு­தான் அவ­தா­னம் தேவை. சிறிய சேட்­டை­க­ளில் ஆரம்­ப­மாகி துர்­ந­டத்தை, வன்­பு­ணர்வு வரை­யில் முடி­கின்ற சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.

போதைப் பொரு­ளைப் பாவிக்­கின்ற சார­தி­க­ளைப் பற்றி பெற்­றோர்­கள் அறிய வேண்­டும். இந்­தச் சார­தி­க­ளு­டன் தமது பிள்­ளை­கள் தனிப்­ப­டுத்­தப்­பட்­டுச் செல்­லாத நிலையை பெற்­றோர் உறுதி செய்ய வேண்­டும் -– என்­றார்.

 

You might also like