2018ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு வேலை­த் திட்­டம் விரை­வில் ஆரம்­பம்

2018ஆம் ஆண்­டுக்­கான ‘கூட்­டு­ற­வின் பரி­ண­மிப்பு’ என்ற கூட்­டு­ற­வின் வேலை­திட்­டங்­கள் விரை­வில் ஆரம்­பித்­து­வைக்­கப்­ப­ட­வுள்­ளன. வடக்கு மாகாண கூட்­டு­றவு அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்­தால் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள நாற்­பது வரை­யான வேலை­திட்­டங்­களை படிப்­ப­டி­யாக ஆரம்­பித்து வைப்­ப­தற்­கும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

இந்த வேலை­திட்­டங்­கள் ஒவ்­வொரு மாவட்ட கூட்­டு­றவு அபி­வி­ருத்தி உதவி ஆணை­யா­ளர் அலு­வ­ல­கங்­க­ளில் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டும் என்று வடக்கு மாகாண கூட்­டு­றவு அபி­வி­ருத்தி ஆணை­யா­ளர் பொ.வாகீ­சன் தெரி­வித்­தார்.

அத்துடன் இந்த வேலை­திட்­டம் சம்­பந்­த­மாக ஒவ்­வொரு கூட்­டு­றவு சங்­கங்­க­ளி­ன­தும் கூட்­டு­றவு அபி­வி­ருத்தி திணைக்­க­ளத்­தால் விளக்­கங்­கள், செயற்­பா­டு­கள் எடுத்­துக்­கூ­றப்­பட்­டுள்­ளன.
வடக்கு மாகாண கூட்­டு­றவு அபி­வி­ருத்தி ஆணை­யா­ளர் அலு­வ­ல­கத்­துக்கு இந்த வேலைத்­திட்­டத்­தின் ஒவ்­வொரு மாதத்­துக்­கான முன்­னேற்­றம் தொடர்­பா­கத் தெரி­யப்­ப­டுத்­தல் வேண்­டும்.

இந்த வேலை­திட்­டங்­க­ளுக்கு கூட்­டு­றவு சங்­கங்­க­ளின் இயக்­கு­னர்­கள், பணி­யா­ளர்­கள் யாவ­ரும் முழு­மை­யாக ஒத்­து­ழைப்பை வழங்க வேண்­டும் என்று ஆணை­யா­ளர் மேலும் கேட்­டுக்­கொண்­டார்.

You might also like