சிரி­யா­வில் தாக்­கு­தல் அதி­யுச்­சம்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்­புக்கு எதி­ரான போர் சிரி­யப் பாலை­நி­லத்­தில் உச்­சக்­கட்­ட­மாக இடம்­பெற்று வரு­கின்­றது என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்­டன.

ஈராக், சிரிய நாடு­க­ளின் சில பகு­தி­க­ளைக் கைப்­பற்றி அவற்றை ஒரு தனி­நாடு என்று அறி­வித்­தி­ருந்­தது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு. அந்த அமைப்­பின் பிடி­யில் இருந்து ஈராக் முழு­வ­து­மாக விடு­பட்­டுள்­ளது. சிரி­யா­வின் சில நக­ரங்­க­ளி­லும், சிரி­யப் பாலை­நி­லங்­க­ளி­லும் போர் தொடர்ந்து வந்­தது. அதி­லும் குறிப்­பாக சிரி­யப் பாலை­நி­லங்­க­ளில் போர் அதி உச்­சக்­கட்­ட­மாக இடம்­பெற்று வரு­கி­றது என்று பன்­னாட்டு ஊட­கங்­கள் குறிப்­பிட்­டன.

‘‘சிரி­யப் பாலை நிலங்­க­ளில் இருந்து இன்­னும் ஒரு­சில வாரங்­க­ளில் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்பு விரட்­டி­ய­டிக்­கப்­ப­டும். சிரியா ஐ. எஸ். ஐ.எஸ். அமைப்­பின் பிடி­யில் இருந்து விடு­ப­டும் நிலை­யில் உள்­ளது’’ என்று சிரிய இரா­ணு­வம் கடந்த வாரம் தெரி­வித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like